ஐப்பசி மாதத்தில் காத்திருக்கும் அபாயம்.. கவனமாக இருக்க வேண்டிய 6 ராசிகள்
ஐப்பசி மாத பலன்: புரட்டாசி நிறைவடைந்து ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. ஐப்பசி மாதத்தில் நிறைய மாற்றங்கள் நடைபெறும். இந்த மாதம் குரு அதிசார பெயர்ச்சி, சூரியன், புதன், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களின் பெயர்ச்சியும் உள்ளது. இது சுப, அசுப இரண்டு விதமான பலன்களையும் கொடுக்கும். இந்த கட்டுரையில் சற்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து காணலாம்.
ஐப்பசி மாதத்தில் குரு பகவான் கடக வீட்டில் இருந்து உச்சமாகி இருக்கப் போகிறார். சூரியன் துலாம் வீட்டில் இருக்கப் போகிறார். சுக்கிரன் கன்னி ராசிக்காரர்கள் வீட்டில் நீச்சமாக இருக்கிறார். சுக்கிரம் வரும் 16 ஆம் தேதி நீச்ச தன்மையை விட்டு தன் சொந்த வீடான துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்று அமரப் போகிறார். இதனால் மிகப்பெரிய யோகம் உண்டாகும். சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை அடைவதால் சுக்கிர ஆதித்ய மகா ராஜா யோகம் உருவாகும்.

கிரக பெயர்ச்சிகள்
புதன் 7 ஆம் தேதி விருச்சிக வீட்டிற்கு வரப் போகிறார். செவ்வாய் 10 ஆம் வீட்டுக்கு விருச்சிகத்தின் வீட்டுக்கு வருகிறார். செவ்வாயும், புதனும் குருவின் பார்வைக்கு வருகின்றனர். வீடு மனை சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குரு புதனைப் பார்ப்பதால் பெரிய அறிவைக் கூடிய அமைப்பு உண்டாகும்.
பொது இடங்கள்
பொதுவாக ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசிக்குள் நுழைவார். அந்த வகையில் சூரியன் கன்னியில் இருந்து துலா ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு ஏற்கனவே புதன் இருக்கிறார். இதனால் 10 நாட்கள் மிகவும் பதற்றமாக இருக்கும். வணிக வளாகங்கள், துணிக்கடைகள், சந்தைகள், மண்டபங்கள் ஆகியவற்றில் அசம்பாவிதங்கள், இயற்கை சீற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
அசம்பாவிதங்கள்
பாலி, சுமத்ரா, இந்தோனேசியா, மலேசியா, ஜப்பான், ஜெர்மன், பிரிட்டன், மாலத்தீவு நாடுகளில் பூகம்பம், சுனாமி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை, வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. மதுரை, தேனி, தூத்துக்குடி, சிவகாசி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் தீ விபத்துகள், நெரிசல், அசம்பாவிதங்கள் ஏற்படும் சூழல் உள்ளது.
ஆரோக்கியம்
துலாம், மிதுனம், கும்பம் ராசியில் பிறந்த அரசியல் புள்ளிகளுக்கு கண்டம் உள்ளது. எனவே அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக உடல் ஆரோக்கியத்தில் அவர்கள் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். விபத்துகள், அறுவை சிகிச்சை போன்றவை செய்வதற்கான வாய்ப்புள்ளது. சிறிய பிரச்சனையாக இருந்தாலும் அலட்சியப்படுத்தக் கூடாது.
நிதானம்
ரிஷபம், மகரம் ராசிகளும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனி வக்கிரமாக இருப்பதால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவு ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் நலத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டும். சிம்மம், மேஷம், தனுசு ராசிகளுக்கு சற்று குழப்பங்கள் அதிகமாக இருக்கும். அவர்கள் அவசரப்படாமல் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும்.
பரிகாரம்
எதிலும் நிதானமாக சிந்தித்து செயல்படுவது அவசியம். ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் வழிபாடு அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் தீர்வை கொடுக்கும். காவிரி ஆற்றில் நதி நீராடுவது, பசு மாடு அல்லது வயதான முதியவர்களுக்கு உணவு, உடை தானம் செய்வதும் பிரச்சனைகளில் இருந்து நிவர்த்தியை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications