அட்சய திருதியை: மகாலட்சுமியின் அருளால் பணக்கார யோகம் பெறும் 5 ராசியினர்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா?
Atchaya Tritiya: அட்சய திருதியை நன்னாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பொன்னான நாளில் அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசியினர் யார், என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் ஏப்ரல் 30 ஆம் தேதி, இன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. மகாலட்சுமி தேவியாருக்கு உகந்த நாளாகும். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது அபரிமிதமான செல்வத்தைப் பெருக்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமியின் மறுவடிவமாக விளங்கக் கூடியதே தங்கம். அதனால்தான், இந்த நன்னாளில் தங்க நகைகளை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நன்னாளில் கல் உப்பு வாங்குவதும் சிறந்ததாகும். தவிர அட்சய திருதி நாளில் எந்தவொரு பொருள்களை வாங்கினாலும் அல்லது முதலீடு செய்தாலும், தொடங்கினாலும் அது செழித்து வளரும் என்பது நம்பிக்கை. திருதி என்பது மூன்றாவது திதி. திருதியை என்பது வளர்வது, பிறை என்று அர்த்தம். வளர்பிறையில் வரக்கூடியது திருதியை. சந்திரனும், சூரியனும் உச்சமாக இருப்பதே அட்சய திருதியை என்று கூறப்படுகிறது. அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சய திருதியை ஆகும்.
அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள் ஆகும். அட்சய திருதியை தினத்தன்று சனி, ராகு, சுக்கிரன் 12 ஆம் வீட்டிலும், சூரியன், சந்திரன் உச்சமாகவும், செவ்வாய் நீச்சமாகவும் இருக்கும். இந்த பொன்னான நாளில் கோடீஸ்வர யோகம் பெறும், அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் 5 ராசிக்காரர்களுக்கான நற்பலன்கள், கிடைக்கப் போகும் யோக பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் ஏற்பட்டுள்ள சனிப்பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சியின் காரணமாக அட்சய திருதியை நாளான இன்று மகாலட்சுமி தேவியின் பரிபூரணமான அருள் கிடைக்கப் போகிறது. இந்த அட்சய திருதி நாளில் தொடங்கி அடுத்த ஆண்டு அட்சய திருதியை நாளன்று வரை பல்வேறு முன்னேற்றங்கள் கிடைக்கப் போகின்றன. நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன் தொல்லைகள் தீரும். அபரிமிதமான அதிர்ஷ்டங்கள் ஏற்படும். உங்கள் வீட்டிற்கு இன்றைய தினம் கல் உப்பு வாங்கி, மகாலட்சுமி தேவியை வழிபடுவது நற்பலன்களை அள்ளித் தரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாளான இன்று கோடீஸ்வர யோகத்தைப் பெறப் போகின்றனர். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். எதிர்பாராத சமயத்தில் உதவிகள் கிடைக்கும். நீண்ட காலமாக வாங்க வேண்டும் என்று நினைத்த பொருள்களை இந்த ஆண்டு வாங்குவதற்கான யோகம் உண்டாகும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுவாகவே மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான கடாட்சம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அட்சய திருதியை நன்னாளில் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். நிதி சார்ந்த விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாளன்று கோடீஸ்வர யோகம் ஏற்படப் போகிறது. இந்த யோகத்தின் மூலமாக அதிகப்படியான லாபம் மற்றும் செல்வ விருக்தியை ஈட்டுவீர்கள். ஆபரண விருக்தியும் அதிகளவில் கிடைக்கும். இந்த நன்னாளில் மகாலட்சுமி தேவியாரை மனதார பிரார்த்தனை செய்வது அமோகமான பலன்களை அள்ளித் தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சிவன்,பார்வதி மற்றும் மகாலட்சுமி தேவியின் பரிபூரண அருள் கிடைப்பதால் உங்களுடைய வாழ்வில் இந்த ஆண்டு உன்னதம் நிறைந்த ஆண்டாக விளங்கும். உங்களுடைய வாழ்வில் இதுநாள் வரை கிடைக்காத லாபம் இனி கிடைக்க ஆரம்பிக்கும். ஆபரண விருக்திகள் ஏற்படும். மகாலட்சுமி தேவியாரை மனதார வழிபடுவது உங்களுக்கு அபரமிதமான பலன்களை அள்ளித் தரும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications