கடக ராசியை விட்டு விலகிய சனி.. வேலை, தொழிலில் எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் கிடைக்கப் போகுது
ஏப்ரல் மாத பலன்: ஏப்ரல் மாதத்தில் கடக ராசிக்காரர்கள் பெறும் நற்பலன்கள் என்ன, பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ஆரம்பமாகிறது. மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அன்று முதல் மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ள ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிற காலகட்டம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தென் நாட்டில் இயற்கைச் சீற்றங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. பாதுகாப்பாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். சனி ராகுவின் சேர்க்கை பல அதிர்ச்சியான விஷயங்களையும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதத்தில் கடக ராசியினர் பெறும் நல்ல பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்தில் இருந்த சனி உங்களை விட்டு விலகி விட்டார். வாழ்க்கையில் நிறைய துன்பங்களை கடந்த 3 ஆண்டுகளாக அனுபவித்து விட்டீர்கள். இனி அந்த துன்பங்களில் இருந்தெல்லாம் விடுதலை அடைவீர்கள். 8 ஆம் இடத்தில் இருந்து வந்த சனி பகவான் தற்போது 9 ஆம் இடத்துக்குப் பெயர்ச்சி அடைந்துவிட்டார். பிரச்சனைகள் விலகுவதே சிறப்பான விஷயமாகும்.
பாதையில் இருந்த தடைகள், ஆபத்துகள் எல்லாம் நீங்கும். பிரச்சனை இல்லாத வாழ்க்கையை உங்களுக்கு இறைவன் அருள் புரிவார். ராசிக்கு 10 ஆம் இடத்துக்கு அதிபதியாக இருக்கக்கூடிய செவ்வாய் 7 ஆம் தேதி வரை 12 ஆம் இடத்தில் இருக்கிறார். உங்களுக்கு வேலை மாற்றம் உண்டாகும். செவ்வாய் ராசிக்குள் வந்த பின்னர் ஏப்ரல் 7 ஆம் தேதிக்குப் பிறகு வேலையில் அதிர்ஷ்டம் உண்டாகும்.
தொழிலில் ஏற்பட்டு வந்த பிரச்சனைகள் தீரும். புதிய ஐடியா, டெக்னிக்குகள் என மாற்றங்களைச் செய்வீர்கள். தொழிலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். ராசிக்கு அதிபதியானவர் சந்திரன் என்பதால் மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும். சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் அற்புதமான நேரமாக இருக்கும். பூர்வீகம் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்து அது நீங்கும். அந்தப் பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். தந்தை உடல்நலனில் அக்கறை செலுத்தவது நல்லது.
உயர்கல்வி படிப்பவர்களுக்கு வெளிநாடு சென்று படிக்கக்கூடிய யோகம் உண்டாகும். புதன் 9 ஆம் இடத்தில் இருப்பது மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும். நல்ல படிப்பு உங்களுக்கு அமையும். கல்விக்கான காசு, பணம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். ஒப்பந்தப் பணிகள் கிடைக்கும். உயரிய பதவிகள் உண்டாகும். மனதில் ஏதோ ஒரு கலக்கம் இருந்துகொண்டே இருக்கும். நரசிம்மரை வழிபட்டால் மனதில் இருந்து வந்த கலக்கங்கள் அனைத்தும் தீரும்.
பொருளாதாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பண வரவு உண்டாகும். சுக்கிர பகவான் பாக்கியத்தில் உச்சமாக இருப்பதால் சொந்த வீடு, மனை வாங்கும் யோகம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் ராசியில் வருவதால் பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். நீண்டநாள்களாக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். 6 ஆம் இடத்துக்கு அதிபதியான குரு பகவான் லாபத்தில் அமர்ந்திருப்பது பாதகத்தில் அமர்ந்திருப்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களை லாவகமாக கையாளுவீர்கள். 2 ஆம் திருமணம் கூடி வருவதற்கான யோகம் உண்டு. முறைப்படி பொருத்தம் பார்த்து செய்து கொள்வது மிகவும் அவசியம். முதல் திருமணமே தடையாக உள்ளது என்பவர்களுக்கு நல்ல திருமண யோகம். நிதி, தொழிலில் முன்னேற்றம், கல்வியில் வளர்ச்சி என அனைத்திலும் ஆதரவாக இருக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் உங்களுக்கு இருக்கும்.
வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு வேலை இழப்பு, விசா பிரச்சனைகள் ஏற்படலாம். சொந்த நாட்டிற்கு திரும்பக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அமைதியாக வெளிநாட்டில் வாழ்ந்தோம் என்று காலம் மாறும். மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்புவது நல்லது. ஆராய்ச்சி தொடர்பாக படிக்கக்கூடியவர்கள், உயர்கல்வியை வெளிநாட்டில் படிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றபடி கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த காலமாக இருக்கும்.
வழிபட வேண்டிய தெய்வம் - அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் வழிபடுவது நல்லது. சூடு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அம்மனின் அருள் உங்களுக்கு கட்டாயம் தேவை. உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications