ஜாக்பாட் அடிக்கும் மகர ராசி.. 5 கிரகங்களில் அருளால் தொட்டதெல்லாம் ஹிட்.. அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்
ஏப்ரல் மாத பலன்: ஏப்ரல் மாதத்தில் மகர ராசிக்காரர்கள் பெறும் நற்பலன்கள் என்ன, பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ஆரம்பமாகிறது. மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அன்று முதல் மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ள ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிற காலகட்டம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தென் நாட்டில் இயற்கைச் சீற்றங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. பாதுகாப்பாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். சனி ராகுவின் சேர்க்கையால் பல அதிர்ச்சியான விஷயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதத்தில் மகர ராசியினர் பெறும் நல்ல பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு தனது மனதுக்கு எது நேர்மையாகப் படுகிறதோ அதை மட்டும் செய்யக் கூடியவர்கள். அளவான தெய்வ பக்தி கொண்டவர்கள். தெளிவான கொள்கை, பாகுபாடு நிறைந்தவர்களாக இருப்பார்கள். மகர ராசிக்காரர்களுக்கு தைரிய ஸ்தானம் மிக வலுத்திருக்கிறது. தைரிய ஸ்தானத்தில் யோகாதிபதியாக இருக்கக்கூடிய சுக்கிரன், குரு, சூரியன், புதன், சனி, ராகு ஆகிய 5 கிரகங்கள் உள்ளன.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பகவானும், 6 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் பகவானும் அமர்ந்திருக்கின்றனர். சந்திர பகவான் ராசிக்கு 7 ஆம் இடத்தில் கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார். மிருகசீரிஷம் நட்சத்திரம் வரை இந்த மாதம் பயணம் செய்வார். ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் கேது பகவான் இருப்பார். சூரிய பகவான் ஏப்ரல் 14 ஆம் தேதி மேஷ ராசிக்குள் பிரவேசமாவார். தமிழ் வருடம் பிறக்கிறது.
மகர ராசிக்காரர்களுக்கு மனோதைரியம் உண்டாகும். மிகப் பெரிய வெற்றிகள் உங்களுக்கு உண்டாகும். காரியத்தில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு முயற்சி செய்ய வேண்டுமோ அவ்வளவு முயற்சி செய்வீர்கள். உங்களுடைய விடாமுயற்சி பெரிய வெற்றிகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். ராசிக்கு யோகாதிபதியாக இருக்கக்கூடிய சுக்கிர பகவான் 3 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளதால் மகள் வாழ்க்கையில் நல்ல உயர்வு உண்டாகும்.
உங்கள் மகளின் படிப்பு, திருமணம், அந்தஸ்து, வாழ்க்கையில் உயரக்கூடிய யோகம் உண்டாகும். விலையுயர்ந்த நகை வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது. ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும்போது கவனமாக இருக்க வேண்டும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டு சட்டச் சிக்கலில் சிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
திருமணப் பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. ஜாதகம் ஒரிஜினலா என்பதை பார்க்க வேண்டும். நன்றாக விசாரித்துக் கொள்வது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுக்கிரன், சூரியனின் இணைவு செயற்கை முறையில் கருத்தரிக்கும் யோகம் உண்டாகும். மருத்துவர்கள் புகழ் பெறக்கூடிய யோகம் உண்டாகும்.
சினிமா துறை, நடன கலைஞர்கள், நாடக கலைஞர்கள் புகழ்பெறக் கூடிய யோகம் உண்டாகும். உபஜெய ஸ்தானத்தில் இந்த கிரகங்கள் அமைந்திருப்பதால் மிக சிறப்பான காலகட்டமாக இருக்கும். வெற்றியைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுவது நல்ல பலன்களைத் தரும். அதேபோல, சர்வீஸ் துறையில் இருப்பவர்கள் நன்றாக சம்பாதிக்க கூடிய யோகம் உள்ளது.
அப்பாவுடைய உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. நிதி சார்ந்த முன்னேற்றம் உண்டாகும். காதல் விஷயத்தில் எடுக்கும் முயற்சி எதிர்மறையாகச் செல்லும் வாய்ப்புள்ளது. நீங்கள் நினைப்பதற்கு எதிராக இருக்கும். திருமணம் கைகூடும் யோகம் உண்டாகும். சனி உபஜெய ஸ்தானத்தில் இருப்பதால் நல்ல வேலைவாய்ப்பு உண்டாகும். சக ஊழியர்ளால் பிரச்சனைகள் ஏற்படும்.
கருத்து மாறுபாடு இருந்தால் அதனை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாணவர்கள் சட்ட சிக்கல்கள், தவறான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.
வழிபட வேண்டிய தெய்வம் - மகான்கள் வழிபாடு, அன்னதானம் செய்வது நல்ல பலன்களைத் தரும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications