அதிசார குருப்பெயர்ச்சி பலன் 2025: மேஷ ராசிக்கு சொத்துகளை குவிக்கும் யோகம்.. ஒரு விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

அதிசார குருப்பெயர்ச்சி பலன்: அக்டோபர் 18 ஆம் தேதி குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு அதிசாரப் பெயர்ச்சி ஆகிறார். இந்தப் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நடக்கப்போகும் மாற்றங்கள், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

Athisara guru peyarchi palan mesham lucky zodiac signs

கிரக மாற்றம்

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும். இந்த இடப்பெயர்ச்சியானது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் ஒரு சில ராசியினருக்கு சுப பலன்களும், சில ராசியினருக்கு அசுப பலன்களும் உண்டாகும். அந்த வகையில், அக்டோபர் 18 ஆம் தேதி குரு அதிசாரப் பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதிசார குருப்பெயர்ச்சி

குரு பகவான் தற்போது மிதுன ராசியில் இருக்கிறார். மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு அதிசாரமாக அக்டோபர் 18 ஆம் தேதி பெயர்ச்சி ஆகிறார். டிசம்பர் 3 ஆம் தேதி மீண்டும் மிதுன ராசிக்குச் செல்வார். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வருட குருப்பெயர்ச்சி மிகுந்த சிறப்பாகும். குரு கடகத்தில் உச்சமடைந்து மகரத்தில் நீச்சமடைகிறார். நிறைந்த மனதுடன் அனைத்து ராசிகளுக்கும் குரு பகவான் நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போகிறார்.

இந்த அதிசார குருப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

9, 12க்கு உரிய குரு பகவான் உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். 4 ஆம் இடம் என்பது கெளரவம், உயர்கல்வி, புகழ், மதிப்பு, உயர் பதவி போன்றவற்றைக் குறிக்கும். அலுவலகத்தில் வேலை விஷயத்தில் மிகுந்த கெட்ட பெயர், பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். சிறிய தவறுகள் கூட பெரிதாகி இருக்கும். இதுபோன்ற நிலைமைகள் இனி பரிபூரணமாக நீங்கும். மேலதிகாரிகளுக்கு உங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும்.

வீடு, நிலம் வாங்கும் யோகம்

4 ஆம் இடம் என்பது வீடு, மாடு, மனையைக் குறிக்கிறது. நீண்ட நாட்களாக வீடு வாங்க வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு வீடு வாங்கும் யோகம் உண்டாகும். நிலம் வாங்குவதற்கான வாங்கும் யோகம் உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கெட்ட பெயர்கள் எல்லாம் மாறும். உயர்கல்வியை வெளிநாட்டுக்குச் சென்று படிக்கும் யோகம் உண்டாகும். கோர்ஸ், படிப்பு, அங்கீகாரம் போன்றவை கிடைக்கும்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

4 ஆம் இடத்தில் குரு பகவான் உச்சமடைவதால் தேர்வுகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். மெரிட்டில் சீட் கிடைக்கும். அலுவலகத்தில் மற்றவர்கள், மேலதிகாரிகள் என்ன நினைக்கின்றனர் என்பது குறித்து ஆராய்ச்சி செய்யாமல் இருப்பது நல்லது. தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி உண்டாகும். குரு உச்சம் பெறுவதால் சுகஸ்தானம் உண்டாகும்.

பதவி உயர்வு

தேவையில்லாத விஷயங்களை தெரிந்து கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் நினைப்பதைப் பற்றி நினைக்காமல் உங்கள் குடும்பத்தைப் பற்றியும், உங்கள் வேலையைப் பற்றியும் மட்டும் நினைப்பது நல்லது. பதவி உயர்வு, வீடு வாங்கும் யோம், வீடு கட்டும் யோகம் உண்டாம். உங்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்துத் தரப் பெயர்ச்சியாக இந்த அதிசார குருப்பெயர்ச்சி இருக்கும்.

12 க்கு உரியவரும் 4 ஆம் இடத்தில் இருப்பதால் இந்த குரு பகவான் இல்லற வாழ்க்கையில் இருக்கும் உங்ளுக்கான பிரச்சனைகளை சரி செய்வீர்கள். மற்றவர்கள் பேசுவதை காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+