அதிசார குருப்பெயர்ச்சி 2025: சிம்ம ராசிக்கு குருவின் அருளால் மிகப்பெரிய அதிர்ஷ்டம்.. பணம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

அதிசார குருப்பெயர்ச்சி பலன்: அக்டோபர் 18 ஆம் தேதி குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு அதிசாரப் பெயர்ச்சி ஆகிறார். இந்தப் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நடக்கப்போகும் மாற்றங்கள், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

கிரக மாற்றம்

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும். இந்த இடப்பெயர்ச்சியானது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் ஒரு சில ராசியினருக்கு சுப பலன்களும், சில ராசியினருக்கு அசுப பலன்களும் உண்டாகும். அந்த வகையில், அக்டோபர் 18 ஆம் தேதி குரு அதிசாரப் பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

athisara-guru-peyarchi-2025-what-kind-of-benefits-simmam-rasi-leo-will-people-get-during-this-per

அதிசார குருப்பெயர்ச்சி

குரு பகவான் தற்போது மிதுன ராசியில் இருக்கிறார். மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு அதிசாரமாக அக்டோபர் 18 ஆம் தேதி பெயர்ச்சி ஆகிறார். டிசம்பர் 3 ஆம் தேதி மீண்டும் மிதுன ராசிக்குச் செல்வார். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வருட குருப்பெயர்ச்சி மிகுந்த சிறப்பாகும். குரு கடகத்தில் உச்சமடைந்து மகரத்தில் நீச்சமடைகிறார். நிறைந்த மனதுடன் அனைத்து ராசிகளுக்கும் குரு பகவான் நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போகிறார்.

இந்த அதிசார குருப்பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு அஷ்டம சனி நடந்து கொண்டிருக்கிறது. தற்போது குரு பகவான் சனியைப் பார்க்கிறார். அற்புதமான காலகட்டமாக இருக்கும். குரு பகவான் 12 ஆம் இடத்தில் உச்சம் பெறுகிறார். குரு பகவான் உங்கள் ராசிக்கு 5, 8க்கு உரியவர். 8க்கு உரியவர் 12 இல் மறைவதால் விபரீத ராஜயோகம் உண்டாகும். 8க்கு உரியவர் நன்மையைத் தரப்போகிறார். வறுமை நிலை மாறி செல்வம் வரும். அருமையான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

குரு பார்வை

உச்சம் பெற்ற குரு பகவான் 12 ஆம் இடத்தில் இருப்பதால் நன்மைகளை அதிக அளவில் பெறுவார்கள். 4, 9க்குரிய செவ்வாய் உங்களுக்குப் பாதகாதிபதி, உயர்கல்வி, மதிப்பு, மரியாதை, புகழ், பதவி உயர்வு போன்றவற்றை கெடுப்பவர் செவ்வாய். குரு 12 இல் இருந்து 4 ஆம் இடத்தைப் பார்க்கிறார். இனி பாதிப்புகளை ஏற்படுத்திய அனைத்து விஷயங்களும் பரிபூரணமாக நீங்கும்.

கடன் தீரும்

அதே சமயம் உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தை குரு பகவான் பார்க்கிறார். 6 ஆம் இடம் என்பது ரண, ருண, ரோக, சத்ரு ஸ்தானம். வியாதி, கடன், கஷ்டங்கள் அனைத்தும் தீரும் காலகட்டமாக இருக்கும். கடனால் இதுவரை பட்டு வந்த பாதிப்புகள், தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். கடனை அடைப்பதற்கான வழிகள் உருவாகும். நிறைய கடன்களை ஒரு கடனை வாங்கி அடைத்து முடிப்பீர்கள்.

யோகம்

எடுத்த முயற்சிகளில் எல்லாம் வெற்றி காணும் யோகம் உண்டு. முயற்சிகள் அனைத்தும் பலிக்கும். நீண்ட நாட்களாக உடலில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். குரு பகவான் 12 ஆம் இடத்தில் இருந்து 9 ஆம் பார்வையாக 8 ஆம் இடத்தைப் பார்க்கிறார். 8 ஆம் இடத்தில் இருக்கும் சனியை குரு பார்ப்பதால் அற்புதமான யோகங்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

தடைகள் தவிடுபொடியாகும்

குருவின் பார்வை இருப்பதால் எல்லா விதமான நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும் காலகட்டமாக இருக்கும். உத்தியகோத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வதந்திகள், உயர்கல்வி, பதவி உயர்வில் இருந்த தடைகள் விலகும். 12 ஆம் இடத்தில் குரு உச்சம் பெறுவதால் இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்டம் கொட்டும்

பெரிய பெரிய அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள், தடைகள் அனைத்தும் இனி பரிபூரணமாக நிவர்த்தியாகும். உத்தியோகத்தில் சந்தித்து வந்த அனைத்து விதமான பிரச்சனைகளும் சரியாகும். உங்களை மன அழுத்தத்துக்கு ஆளாகிக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் நீங்கி புத்துணர்ச்சி பெறும் காலகட்டமாக இருக்கும். டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் பொருளாதாரத்தில் அற்புதமான மேன்மையைப் பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+