ஆகஸ்ட் மாத பலன் 2025: மிதுன ராசிக்கு குரு சுக்கிர யோகம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. இந்த அற்புதமான ஆகஸ்ட் மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதம் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிர பகவானும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இணைந்து இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். நாச்சியார் திருமொழி கேட்பது, படிப்பது வெற்றியைத் தரும்.

தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசமாகியிருக்கிறார். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வருகிறார். கன்னியில் செவ்வாய், கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் குருவும், சுக்கிரனும் வந்து அமர்ந்துள்ளனர். ராசியில் குரு மட்டும் அமர்ந்திருந்தபோது குழப்பம், அசதியை கொடுத்திருப்பார். உங்களுக்கு இப்போது குரு, சுக்கிர யோகம் வரப்போகிறது. பணத்தை தரக்கூடிய சுக்கிரனும், குருவும் ராசியில் இருப்பதால் அபரிமிதமான பண வரவு உண்டாகும். செய்யக்கூடிய தொழிலில் திடீர் வளர்ச்சி உருவாகும். தொழில், வியாபாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். திடீர் பண வரவுகள் ஏற்படும்.
பெரிய அளவில் சம்பாத்தியம்
விரையாதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். வெளிநாடு யோகம், இடமாற்றம், நிறுவன மாற்றம் உண்டாகும். மல்டிநேஷனல் நிறுவனங்களில் வேலை கிடைக்கும். பணம் சம்பாதிப்பது தொடர்பான எண்ணங்கள் தோன்றும். பெரிய அளவில் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். வாழவே முடியாதோ என்ற பயம் ஏற்பட்டிருக்கும். இனி வாழ்க்கையில் கற்றுக்கொள்ளும் சூழல் உண்டாகும். எதிர்நீச்சல் போட்டுவரும் துணிவு ஏற்படும்.
பண வரவு அதிகரிக்கும்
பூர்வ புண்ணிய அனுக்கிரகத்தினால் இந்த மாதம் நல்ல பண வரவு உண்டாகும். நல்ல வேலையால் தனவரவு வரும். பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் நல்ல பெயரும் புகழும் பெயர்வீர்கள். கலைஞர்களுக்கு அபரிமிதமான பணம் கிடைக்கும் யோகம் உண்டாகும். கேது பகவான் மூன்றில் அமர்ந்திருப்பதால் நல்ல நன்மைகள் கிடைக்கும். அக்கம்பத்தினருடன் இருந்து வந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். விநாயகப் பெருமான் வழிபாடு, அவருடைய நாமங்கள் உங்களை வாழ்க்கையில் உயர்த்தும். பிள்ளையார்பட்டி சென்று வருவது நன்மையை ஏற்படுத்தும்.
சொத்துகளில் பிரச்சனை
தாம்பத்திய வாழ்க்கையில் குறைபாடு ஏற்படும். 6க்குரிய செவ்வாய் 4 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வீட்டில் இருக்கும் பழுகளை சரிசெய்வீர்கள். சகோதர வகையில் பகைமை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. 4 இல் அமர்ந்திருக்கும் செவ்வாயை வக்கிர சனி பார்ப்பதால் வீட்டில் பழுதுகள், வாகனங்களில் பழுதுகள், சொத்துகளில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. தாயின் உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டும்.
சிறு பிரச்சனைகள் வரும்
மிதுன ராசிக்காரர்களுக்கு பொதுவாகவே சகோதரருடன் சிறு சிறு பிரச்சனைகள் வரும். செவ்வாய் 4 ஆம் இடத்தில் அமர்ந்துள்ள நிலையில், சனியும் பார்ப்பதால் சகோதரருடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால். வீடு கட்டுபவர்கள் கட்டுமானங்களில் பாதிப்பு வரும் என்பதால் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும். முழு உடல் பரிசோதனை, நெஞ்சக பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது.
யோகமான காலகட்டம்
சுக்கிரன் ராசியில் அமர்ந்திருப்பதால் மகள் வாழ்க்கையில் யோகம் உண்டாகும். பெண் தொழில் முனைவோர்களுக்கு பிரம்மாண்ட வளர்ச்சி ஏற்படும். பெண் பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வீட்டுக் கடன் வாங்குவது, படிப்புக்கான வாங்குவது போன்றவற்றை செய்வீர்கள். குரு ராசியில் அமர்ந்திருப்பதால் சில சலனங்கள், எதிர்பார்ப்புகள், நெருக்கடிகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வேலை பார்க்கும் இடத்தில் நெருக்கடி ஏற்படும். எந்த பிரச்சனை வந்தாலும் குரு, சுக்கிரன் காப்பாற்றுவார் என்பதால் அச்சப்படத் தேவையில்லை.
வழிபாடு
புதிய அப்பார்ட்மென்ட் வாங்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் 4 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் சொத்து வாங்கும் யோகம் பெறுவீர்கள். மூத்த சகோதரருடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இடமாற்றங்கள் வரும். விரையமான பொருள் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும். இழந்த காதல் புதுப்பிக்கப்படும். விட்டுப்போன திருமண சம்பந்தம் மீண்டும் வரும். தொழில் வளம் பெருகும் காலகட்டமாக இருக்கும். அழகுக்கு முக்கியத்துவம் செலுத்துவீர்கள். இந்த மாதத்தில் நீங்கள் அதிர்ஷ்டம் பெற சிதம்பரம் நடராஜர் சிவகாமி அம்மனை வழிபடுவது நன்மையை ஏற்படுத்தும்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications