Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதன் பெயர்ச்சி: சிம்மத்தில் புதன்+செவ்வாய்+சுக்கிரன்.. 20 ஆண்டுக்குப்பின் கோடீஸ்வர யோகம் யாருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெருப்பு ராசியான சிம்ம ராசியில் செவ்வாய்,சுக்கிரன் உடன் அறிவின் நாயகனான புதன் பகவான் சில நாட்களில் இணையப்போகிறார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய் சுக்கிரன் புதன் கூட்டணி சிம்ம ராசியில் இணையப்போவதாக ஜோதிடர்கள் கூறியுள்ளனர். அக்டோபர் வரை புதன் சிம்ம ராசியில் பயணம் செய்வார். புதன் பெயர்ச்சி நிகழ்வதாலும் மூன்று கிரகங்களின் கூட்டணியாலும் எந்த ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5வது இடத்தில் செவ்வாய் சுக்கிரன் உடன் புதன் அமர்கிறார். அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும். பணியிடத்தில் புத்திசாலித்தனம் வெளிப்படும். அதிர்ஷ்ட வழியில் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். கூடவே பிள்ளைகளுக்கு படிப்பு செலவும் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். நண்பர்கள், இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். எழுத்து திறமையும் பேச்சுத்திறமையும் அதிகரிக்கும். புதன்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிவித்து விஷ்ணு சகஸ்ராநாமம் கூறி வணங்கலாம்.

Bhudan Peyarchi palan 2023: Mercury + Venus + Mars Conjunction Prediction and remedies

ரிஷபம்: உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் புதன் பகவான் செவ்வாய் சுக்கிரன் உடன் கூட்டணி சேருகிறார். சிறந்த வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. புரமோசனும் சம்பள உயர்வும் அதிகரிக்கும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் கிடைக்கும். வேலைகளில் புரமோசன் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு உயரும். பணம் பாக்கெட்டில் அதிகம் சேரும் கூடவே அதற்கேற்ப செலவும் அதிகரிக்கும். அம்மாவின் உடம்பில் இருந்த நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வீடு, வண்டி வாகன பராமரிப்புக்காக பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி அழகுபடுத்துவீர்கள். தினந்தோறும் ஓம் நமோ நாராயணாய மந்திரத்தை கூறி விஷ்ணுவை வணங்கலாம்.

மிதுனம்: உங்கள் ராசிநாதன் புதன் 3வது இடத்தில் அமர்ந்துள்ளார். உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் செவ்வாய் சுக்கிரன் உடன் இணைந்து பயணம் செய்வது சிறப்பு. புது முயற்சி செய்ய நல்ல நேரமாகும். வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான நேரம் இதுவாகும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். இளைய சகோதரர்கள் உடல் நலம் பாதிக்கப்படும். தாய்மாமனுடன் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும். எழுத்தாளர்களுக்கு நன்மை தரும் காலமாகும். புதன்கிழமைகளில் ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்வதால் நன்மை ஏற்படும். புது வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

கடகம்: உங்கள் ராசியில் பயணம் செய்யும் புதன் உங்கள் ராசிக்கு2வது இடத்தில் தன, வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் உடன் அமரப் போவதால் பேச்சில் இனிமை அதிகரிக்கும். பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் கூடும். பாக்கெட்டில் பணம் சேரும் சொத்து சோ்க்கை உண்டு. உடல் நிலையில் கவனம் தேவை. புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிய மேலும் நன்மைகள் நடக்கும். உங்கள் வாழ்க்கை முறை மேம்படும், இந்த காலகட்டத்தில் உங்கள் ஆளுமை மற்றும் தகவல் தொடர்பு திறன்களில் உங்களின் திறமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரம் அதிகரிக்கும். புதன்கிழமைகளில் பச்சைப்பயறு தானம் செய்யலாம்.

சிம்மம்: உங்கள் ராசியில் புதன் அமர்ந்துள்ளதால் சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு புரமோசனுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்பு அதிகரிக்கும். தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு உடல்நலனில் அக்கறை தேவை. செவ்வாய் சுக்கிரன் உடன் புதன் சஞ்சாரம் செய்வது காதல் மற்றும் திருமணத்திற்கு சாதகமாக இருக்கும். பயணங்கள் பலனளிக்கும். தொலைதூரப் பயணங்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். உங்கள் கல்வி அல்லது தேர்வுகளில் நீங்கள் சிறப்பாக செயல்படலாம். இருப்பினும், இந்த காலகட்டத்தில் சிலருக்கு உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் தோல் நோய்கள் ஏற்படலாம்.நரம்பு தொடர்பான பிரச்சினை ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். புதன்கிழமைகளில் ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யலாம்.

கன்னி: உங்கள் ராசிநாதன் புதன் இனி 12வது வீடான விரைய ஸ்தானத்தில் அமர்வதால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள், வாக்குவாதம் வந்து செல்லும். உத்தியோகத்தில் எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். உடல்களில் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். திடீர் செலவுகள் வரும் சேமிப்பு கரையும். பணியிடத்தில் நீங்கள் கோபமாகவும், கலக்கமாகவும் இருக்கலாம். உங்கள் திட்டங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் போகலாம். சில வெளிநாட்டு தொடர்புகள் சில நிதி ஆதாயங்களைக் கொண்டு வரலாம். ஜோதிடம், மருத்துவம், அமானுஷ்யம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு நரம்பு பிரச்சினை, கை,கால்கள் நடுக்கம், புத்தியில் தடுமாற்றம் சிலருக்கு வரும் என்பதால் இதனை தடுக்க,புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். ஸ்ரீராம நாம ஸ்தோத்திரத்தை கூறி வணங்கலாம்.

துலாம்: புதன் உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் அமர்வதால் வருமானம் அதிகரிக்கும். இது யோகமான காலமாகும். பண வருவாய் உடன் கூட திடீா் அதிர்ஷ்டம் ஏற்படும். புதன் 11ம் வீட்டில் அமா்ந்திருக்கும்போது வீடு மனை நிலம் வாங்க காலம் கணிந்து வருகிறது. உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடி வரும். உறவினர்கள், நண்பர்கள், உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் பணம் சம்பாதிக்கலாம். பல வழிகளில் இருந்தும் பணம் வரும். உங்கள் முதலீடுகள் பெரிய லாபத்தை தரும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். தினசரி சூரிய பகவானை வழிபட நல்லதே நடக்கும். புதன் யந்திரத்தை வீட்டில் வைத்து வணங்கலாம்.

விருச்சிகம்: புதன் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் அமர்கிறார். பணியிடத்தில் உங்கள் வேலை பளிச்சிடும். தம்பதியரிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். காதல் கைகூடும். பண வருவாய் திருப்தி தரும். தாய் வழி உறவினா்கள், தாய்மாமன்கள் நன்மை செய்வார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். தொழில்முனைவோர் தங்கள் முயற்சிகளில் பெரிய வெற்றியைப் பெறலாம். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். சிலருக்குத் தொழில் வாழ்க்கையில் பெரிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவில் படிக்க இடம் கிடைக்கும். மேலும் நன்மைகள் நடக்க, புதன்கிழமைகளில் பச்சைப்பயறு வேகவைத்து நிவேதனம் செய்து தானம் கொடுக்கலாம்.

தனுசு: புதன் உங்கள் ராசிக்கு புதன் 9வது இடத்தில் செவ்வாய், சுக்கிரன் உடன் அமர்வதால் பணம் தாராளமாக வரும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. சிலருக்கு புரமோசன் ஊதிய உயர்வு கிடைக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடக்கும் காலமாகும். மாணவர்களுக்கு கல்லூரிகளில் மேல்படிப்புக்கு இடம் கிடைக்கும். பலருக்கு புது வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் மற்றும் பங்குச் சந்தையில் லாபம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வாழ்வீர்கள். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனைவி வழியில் அதிக உதவிகள் கிடைக்கும். புதன் காயத்ரி மந்திரத்தை கூறி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மகரம்: புதன் உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் மறைகிறார். செவ்வாய், சுக்கிரன் எட்டாம் வீட்டில் இருப்பதால் பொறுமையும் நிதானமும் தேவைப்படும். இது நல்ல அமைப்புதான் என்றாலும் வார்த்தைகளில் கவனம் தேவை.தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும். இடம் பொருள் அறிந்து பேசினால் நல்லதே நடக்கும். பணம் வருவாய் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். சிலா் மனை நிலம் வாங்குவதற்கு சரியான காலம். உத்யோகம் தொழிலில் நன்மைகள் ஊதிய உயா்வு பெறுவீா்கள். சிலருக்கு நரம்பு பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். பசுவிற்கு பச்சைப்பயறு சாப்பிட கொடுக்கலாம். புதன் பகவானை பச்சைப்பயறு வைத்து வணங்கி விளக்கேற்றலாம்.

கும்பம்: உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் உடன் புதன் அமர்வதால் வீட்டில் தம்பதியரிடையே சின்னச்சின்ன சண்டை வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம். உடல் நலனின் அக்கறை செலுத்தாவிட்டால் ஆபத்தாகி அப்புறம் தேவையில்லாமல் மருத்துவ செலவுகள் ஏற்படும். சிலருக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பசுவிற்கு வெல்லம் கொடுக்க நன்மைகள் அதிகம் நடக்கும்.

மீனம்: உங்கள் ராசிக்கு 6வது இடமான ருண ரோக ஸ்தானத்தில் புதன் அமர்வதால் பணத்தை பத்திரப்படுத்துங்கள். உங்களின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிவடையும். இந்த காலகட்டத்தில் உங்கள் எதிரிகளையும் போட்டியாளர்களையும் தோற்கடிப்பீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். உங்கள் பணியிடத்தில் நீங்கள் சிறப்பாக செயல்படலாம். பயணங்கள் பலனளிக்கும். பண வரவு அதிகரிப்பதோடு கூடவே புகழ் கிடைக்கும். சகோதா்கள் உதவி கிடைக்கும். வீட்டில் கணவன்,மனைவியரிடையே உற்சாகம் அதிகரிக்கும். கோவில்களுக்கு தீர்த்த யாத்திரை செல்ல வேண்டிய காலம். சிலருக்கு இருமல், சளி போன்றவை ஏற்படும். தோல் நோய்கள் ஏற்படலாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கால கட்டம் இதுவாகும்.பெருமாள் கோவில்களில் நெய் விளக்கேற்றி வழிபட நன்மையே நடக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+