Rasi Palan This Week: தனுசு ராசிக்கு நிலத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. அம்மா விஷயத்தில் ரொம்ப கவனம்
Dhanusu Rasi Palan: ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் தனுசுக்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)
தனுசு ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர் பெரியோரிடம் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். விடுபட்ட தெய்வ வழிபாடுகள், குலதெய்வ வழிபாடு, உறவினர் சந்திப்புகள் நடக்கும்.
பூமியில் ஏற்றம்
எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாரம். ஆண் குழந்தை, வாரிசு உருவாகக்கூடிய காலகட்டம். மனதில் சந்தோஷம் ஏற்படும். தொழில், வியாபாரம், இல்லற வாழ்க்கை அபிவிருத்தியாகும். தாயின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.
ஆரோக்கியம்
தாயின் கால் சம்பந்தப்பட்ட பகுதி, நரம்பு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். அதிர்ஷ்டம் உங்களுக்கு அற்புதமாக வேலை செய்யும். பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. அரசு வங்கிகள் மூலமாக கடன் கிடைக்கும்.
வேலைவாய்ப்பு
நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். எதையும் செய்து முடிக்க முடியும் என்கிற தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பணத்தைக் கையாளும் விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. நினைத்த காரியங்கள் கைகூடும். சளி தொந்தரவு அதிகரிக்கும். அர்த்தாஷ்டம சனியில் அதிகளவு கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம்.
வழிபாடு
சந்தோஷம் 80 சதவீதமும், பொருளாதாரம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும். சந்திர மெளலீஸ்வரர் வழிபாடு மிகுந்த ஏற்றத்தைக் கொடுக்கும். செவ்வாய்க்கிழமை மதியம் தோறும் சாம்பார் சாதம், எலுமிச்சை ஊறுகாய் தானமாக கொடுப்பது ஏற்றத்தைத் தரும். குருவாயூர் வழிபாடு பெரிய அனுகூலத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications