Dhanusu Rasi Palan: தனுசு ராசிக்கு சாதகமாகும் சித்திரை மாதம்.. அதிர்ஷ்டத்திற்கு மேல் அதிர்ஷ்டம்
Dhanusu Rasi Palan: சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில், தனுசு ராசியினருக்கு இந்த மாதம் புதிய வாய்ப்புகளும் சில முக்கிய மாற்றங்களும் காத்திருக்கின்றன. தொழில், பணவரவு, உறவுகள் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்களை இங்கே பார்க்கலாம்.
சித்திரை மாதம் 2026 மற்றும் பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. சூரிய பகவான் மீன ராசியிலிருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த சித்திரை மாதத்தில் அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கல் உப்பு, அரிசி, பருப்பு வாங்குவது நன்மையைத் தரும். மே 4 முதல் 28 ஆம் தேதி வரை கடும் வெயில் நிலவும்.

பராபவ வருடத்தின் முதல் மாதமான இந்த சித்திரை மாதத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் நற்பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த சித்திரை மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
தனுசு (Dhanusu Rasi Palan)
தனுசு ராசியினருக்கு பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. பெண் தெய்வ வழிபாடு உங்களுக்கு முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தித் தரும். வயிறு, கழுத்து தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். துணையின் விஷயத்தில் நன்மைகள் ஏற்படும்.
காதல் அமைப்பு
காதல் அமைப்பு கைகூடக்கூடிய அற்புதமான நல்ல காலகட்டம். படிப்புத் தடை, உத்தியோகத் தடை, வியாபாரத் தடை, தொழில் தடை என அனைத்து விதமான தடைகளும் தவிடுபொடியாகக் கூடிய அமைப்பு. தனிப்பட்ட முறையில் நல்ல ஏற்றங்கள் காணப்படும். நம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கி, சந்தோஷம் மேம்படும்.
அபிவிருத்தி
வேற்று மொழி மனிதர்களால் அதிகம் ஆதாயம் ஏற்படும். எல்லா காரியங்களிலும் ஜெயம் ஏற்படும். செல்வாக்கு கூடும். யோக பலன்கள் அதிகளவில் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், சுப காரியங்கள் என அனைத்து விஷயங்களிலும் அபிவிருத்தி ஏற்படும். பெரிய முதலீடுகள், கடல் கடந்த முதலீடுகள் ஏற்படக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
வெற்றி மேல் வெற்றி
நீண்டகாலமாக முடிக்க நினைத்த அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள், பாராட்டுகள் வந்து சேரும். புதிய யோசனைகள் ஏற்படும். நேர்மறை கண்ணோட்டத்துடன் செயல்பட வேண்டிய காலம். காதலில் இனிமை ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். நல்ல செய்திகல் வந்து சேரும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்படும்.
வழிபாடு
நவக்கிரகத்தில் இருக்கும் செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வது நன்மை பயக்கும். மடப்பள்ளிக்கு துவரம்பருப்பு வாங்கிக் கொடுப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் பசு மாடுகளுக்கு உணவளிப்பது மேன்மையைத் தரும். செவ்வாய்க்கிழமை தோறும் ஏழைகளுக்கு உணவு தானமாக கொடுப்பது எலுமிச்சை ஜூஸ், ஊறுகாய் உடன் கொடுப்பது பெரிய நஷ்டத்தில் இருந்து உங்களைக் காப்பாற்றும்.
-
ஜூன் மாத ராசிபலன் 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தரும் மாதமா? -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications