Rasi Palan This Week: தனுசு ராசிக்கு வரப்போகும் சிக்கல்.. இந்த விஷயங்களில் எல்லாம் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

Dhanusu Rasi Palan: மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

dhanusu-rasi-palan-what-kind-of-benefits-will-get-dhanusu-rasi-people-from-march-30-to-april-5

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.

அந்த வகையில், மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)

தனுசு ராசியினர் தேவையில்லாத விஷயங்கள் யோசித்துக் கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் கணவர், பிள்ளைகள் என எல்லோரும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். ரத்தத்தில் பரவும் நோய்கள், கொசுக்கடி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. மகிழ்ச்சியாக இருப்பது நன்மை பயக்கும். வாகனங்களில் மாற்றம் ஏற்படும். அற்புதமான அமைப்பு உண்டாகும்.

முன்னேற்றம்

தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கக்கூடிய நல்ல காலகட்டம்.

கவனம்

அம்மாவுடைய ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படும். சொந்த வீடு, நிலம், பண்ணையில் ஏதாவது பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உற்பத்தி செய்பவர்களுக்கு அதில் பெரும் சங்கடங்கள், பணம் கொண்டு சென்று சிக்குவது, வேஸ்டாவது போன்ற சிக்கல்கள் ஏற்படும்.

பிரச்சனைகள் வரும்

இந்த காலகட்டத்தில் பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், 7 ஆம் இடத்தில் குரு, பாக்கிய ஸ்தானத்தில் கேது இருப்பது 85 சதவீதம் நன்மையை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் கடன் அதிகரிக்கும். தேவையில்லாத நோய் பாதிப்புகள், மனக் கோளாறுகள், பிரச்சனைகள் போன்றவை வரும் வாய்ப்புள்ளது. கோபத்தை அறவே தவிர்த்துக் கொள்வது நல்லது. அவசியமில்லாத பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவீர்கள்.

ஆரோக்கியம்

4 ஆம் இடம் நன்றாக இல்லை என்பதால் வண்டி, வாகனம், டயரில் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் நடக்கும் சண்டை, சச்சரவுகளால் பெரிய பிரிவுகளைக் கொடுக்கும். பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் உங்களைக் காப்பாற்றக்கூடிய நிலைமை உண்டாகும். சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம், கழிவுகள் போகும் பாதைகள் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

வழிபாடு

சந்தோஷம் 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 75 சதவீதமும் நன்றாக இருக்கும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது அற்புதமான நன்மைகளைத் தரும். நவக்கிரகத்தில் இருக்கும் கேது பகவான் ஏற்றத்தைக் கொடுக்கும். ஞாயிற்றுக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவு தானமாக கொடுப்பது நன்மை பயக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+