குரு, சனியின் அருளால் தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. ஆண், பெண்ணிடம் ரொம்ப ஜாக்கிரதை
சனி வக்ர பெயர்ச்சி: ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரப் பெயர்ச்சி அடைவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

சனி வக்கிரம்
ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரம் அடைகிறார். வக்கிரம் என்பது தன்னுடைய இழத்தல் என்பது பொருளாகும். இந்த காலகட்டத்தில் சனி செயலிழந்து போகும். வருடகிரகங்களான குருவும், சனியும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிரமாகும். 9 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிர நிவர்த்தியாவதும் வழக்கம். சனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் இருக்கும் காலகட்டம் என்று பார்க்கும்போது இரண்டு முதல் மூன்று வரை வக்கிரமாகும்.
காயத்ரி மந்திரம்
சனி வக்கிரமாவதால் அதனுடைய செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படும். சனி ஆயுள் காரகன், கர்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். வக்கிர கதியில் சனி இருக்கும்போது சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். சனியிடமிருந்து தப்பிக்க சனி காயத்ரி மந்திரத்தை கூறுவது, கேட்பது அற்புதமான பலன்களைத் தரும். ஒருநாளைக்கு இந்த மந்திரத்தை 8 முறை ஜெபிப்பது பல்வேறு பாதிப்புகளில் இருந்து உங்களைக் காக்கும்.
இந்த சனி வக்கிரமானது பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் வக்கிரகதி ஆரம்பிக்கிறது. கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி வக்கிர நிவர்த்தியடைகிறார். இந்த சனி வக்கிரப் பெயர்ச்சியாகும் போது தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
தனுசு ராசி பலன்
மூலம், பூராடம், உத்திராடம் ஆகிய 3 நட்சத்திரம் 9 பாதங்களைக் கொண்டது தனுசு ராசி. ராசியின் அதிபதி குரு பகவான். சனி பகவான் வக்ரகதியில் இருக்கும் இந்த காலகட்டத்தில் உங்கள் ராசிநாதன் சமசப்தம பார்வையில் ராசியையும், சனியையும் பார்க்கிறார். இந்த காலகட்டத்தில் குருவின் பார்வை இருப்பதால் எந்த பாதிப்புகளும் உங்களுக்கு வராது. பாதிப்புகள் பனிபோல விலகிச் செல்லும்
தடைகள் வரும்
உங்கள் ராசிக்கு 3 ஆம் இடத்தில் சனி பகவான் வக்ர கதியில் இருக்கிறார். எந்த முயற்சியை எடுத்தாலும் சிறு சிறு தடங்கல்கள் வந்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரை சனி பகவான் வக்கிரகதியில் போவார். இந்த காலகட்டத்தில் நாலரை மாதம் சனி வக்ர கதியில் இருந்து ராசிக்கு 12, 5, 9 ஆம் இடத்தைப் பார்க்கிறார். குழந்தைகள் மூலமாக சிறு சிறு தொந்தரவுகள் வந்து போகும். புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.
எதிர்பாலினத்தவரிடம் கவனம்
எதிர்பாலினத்தவரை நம்பாமல் இருப்பது நல்லது. பார்ட்னர்ஷிப் தொழில்களில் கவனமாக இருக்க வேண்டும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. 9 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளில் தாமதம், தடைகள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் முதல் ஒன்றரை மாதத்தில் எதிர்பாலினத்தவரால் பிரச்சனைகள், நண்பர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பொறுமையாக இருப்பது, யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது.
புதிய கடன்
ஆகஸ்ட், செப்டம்பர் காலகட்டங்களில் புதிய கடன் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். அதன் மூலம் சிறு சிறு தொந்தரவுகளில் இருந்து வெளியில் வருவீர்கள். கடனைத் தீர்க்கும் யோகமான காலகட்டமாக இருக்கும். ராசிக்கு கடைசி ஒன்றரை மாதமான அக்டோபர், நவம்பர் மாதங்களில் குழந்தைகளால் மனக்கசப்புகள், சிறு சிறு பயங்கள் வரும். குருவின் பார்வை இருப்பதால் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
தொழில்
கோல்டு ஸ்மித், கணக்கர்கள், படிப்பு சொல்லிக் கொடுப்பவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், வங்கி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றம் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். புதிய வேலை மாற்றங்கள், ஏற்றங்கள் ஏற்படும். புதிய கடன்கள் அமையக்கூடிய வாய்ப்புள்ளது. குருவின் பார்வையால் ஏற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருநல்லிக்காவல் சனீஸ்வர பகவானை வழிபட்டு வருவது நன்மையை ஏற்படுத்தும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது, அனுமன் சாலிஷா கேட்பது அற்புதம் உண்டாகும். சதுர்த்தி தினத்தன்று பிள்ளையார் கோயிலில் தேங்காய் உடைத்து வருவது நற்பலன்களை அள்ளிக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications