தடைகளை தவிடுபொடியாக்கும் தனுசு ராசி.. சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

அம்மனுக்கு விசேஷமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Dhanusu Lucky zodiac signs

அந்த வகையில், ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். இதுவரை எல்லா விதமான காரியங்களிலும் இழுபறிகளைச் சந்தித்திருப்பீர்கள். இனி அந்த நிலைமை மாறும். தொழில் ரீதியாக இருந்த சிக்கல்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சட்டத்திற்கு உட்பட்ட விஷயங்களிலும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

கவனம்

யோக பலத்தை அதிக அளவில் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் ஏற்றமும், நம்பிக்கையும் பெருகும். சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது, சட்டத்திற்குப் புறம்பானவர்களுடன் தொடர்பு வைத்திருப்பதை தவிர்ப்பது மிக மிக நல்லது. திடீரென எடுக்கும் முடிவுகள் ஆச்சரியமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

வாக்குவாதம் வேண்டாம்

அண்டை வீட்டார், மற்றவர்கள் விஷயங்களில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தலை, கழுத்து வலி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. இளம் வயது தனுசு ராசிக்காரர்கள் வண்டி, வாகனம் விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இளைஞர்கள் வண்டி வாகனங்களில் ஸ்டன்ட் செய்யாமல் இருப்பது நல்லது.

பயணம்

உங்கள் வீட்டிற்கு உறவினர் வருகை, நண்பர்கள் வருகை, வெளியிடத்துக்குச் செல்வது, குலதெய்வ கோயில்களுக்குச் செய்வது ஏற்றத்தையும், நம்பிக்கையையும் தரும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். உத்தியோகத்தில் அதிகளவிலான நன்மையும், மகிழ்ச்சியையும் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

வழிபாடு

இதுவரை எடுத்த காரியங்களில் இருந்த வந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக நீங்கும். பொறுமையைக் கடைப்பிடிப்பது அனுகூலத்தை ஏற்படுத்தும். திங்கள்கிழமை தோறும் சிவன் வழிபாடு செய்வது எல்லா விதமான பாதிப்புகளையும் நீக்கும். கோளார் பதிகம் அல்லது இந்திராட்சி கவசம் கேட்பது நன்மை பயக்கும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+