Kadagam Rasi Palan: கடக ராசிக்கு கட்டம் சரியில்லை.. பண விஷயத்தில் ரொம்ப கவனம்
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்பு ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் கடக ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. நம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும், அதிக உற்சாகத்துடன் கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். இந்த ஒரு பண்டிகைக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்களும் உள்ளனர். மிகவும் நல்ல நாள் என்பதால் பலர் இந்த நாளில் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

தீபாவளி பலன்கள்
ஐப்பசி மாதத்திற்குள்ளும் அடியெடுத்து வைக்கிறோம். இந்த காலத்தில் கிரக நிலைகளில் ஆங்காங்கே மாற்றங்களும் ஏற்படும். இந்த மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் எந்த ராசிக்கு என்ன மாதிரியான நற்பலன்களை கொடுக்கும், எந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம். இதில் கடக ராசிக்கான தீபாவளி பலன்களை காணலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு 2க்கு உரிய சூரியன் நீசமாக இருக்கிறார். தனாதிபதி நீசமாக இருப்பதால் பத்திரமாக செலவு செய்ய வேண்டிய காலகட்டம். செலவு செய்வது சுலபம், ஆனால் சம்பாதிப்பது கடினம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு கெடுதல் செய்யும் சுக்கிரன் நீசமாகிறார். குரு பகவான் ராசியில் இருப்பதால் 5, 7, 9 ஆம் இடத்தைப் பார்க்கிறார்.
குழந்தை பாக்கியம்
யோக ஸ்தானம், புத்திர ஸ்தானம், களஸ்திர ஸ்தானம், பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கிறார். குழந்தை பாக்கியம் கிடைக்கும் யோகம் உண்டாகும். குரு ராசியில் இருப்பதால் 200 சதவீதம் யோகமான காலகட்டமாக இருக்கும். குட் நியூஸ் உங்களைத் தேடி வரும். சொத்துக்களை சேர்க்கும் யோகம் உண்டாகும். குலதெய்வத்தின் அருள் கிடைப்பதற்கான யோகம் உண்டாகும்.
திருமண யோகம்
குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் காலகட்டமாக இருக்கும். 7க்கு உடைய களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திருமண யோகம் உண்டாகும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். 7 ஆம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால் உச்ச நிலையை அடைவதற்கான வாய்ப்புள்ளது. கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
அதிர்ஷ்டம்
குரு பகவான் 9 ஆம் பார்வையாக 9 ஆம் இடத்தை பார்ப்பதால் அதிர்ஷ்டம் ஏற்படும். வக்கிரம் பெற்ற சனியை குரு பார்ப்பதால் மங்கள சனியாக மாறுதால் நல்ல யோகங்கள் உண்டாகும். ஏழரை வருடமாக சனியால் பல்வேறு பாதிக்கப்பட்டிருப்பீர்கள். 8 ஆம் இடத்துக்குரிய சனி பகவான் 9 ஆம் இடத்தில் அமர்ந்து அதிர்ஷ்டத்தை கெடுத்துக் கொண்டிருந்தார். தற்போது குரு பகவான் சனியை பார்ப்பதால் அதிர்ஷ்டம் கண்டிப்பாக ஏற்படும்.
குருமங்கள யோகம்
குரு பகவான் ராசியிலே வருவது நல்ல பலன்களைத் தரும். மனதை ஆற்றுப்படுத்தும் சூழல் ஏற்படும். குரு சந்திரன் யோகம் உண்டாவதால் மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் அனைத்தும் நடக்கும். மன அழுத்தம் தொடர்பான விஷயங்கள் அனைத்தும் நீங்கும். குரு விருச்சிகத்தைப் பார்க்கும்போது குருமங்கள யோகம் உண்டாவதால் வீடுகள் கட்டுவதற்கான யோகம் ஏற்படும்.
பண விஷயத்தில் கவனம்
கடக ராசியினர் பண விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நகை திருட்டுப் போவது, பணம் திருட்டுப் போவதற்கான வாய்ப்பு ஏற்படும். 3, 12 க்கு உரிய புதன் பகவானும் சேர்ந்து 4 ஆம் இடத்தில் இருப்பதால் சகோதரர்களிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சண்டை சச்சரவுகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. மனைவியை பிரிந்த தீபாவளியாக இந்த பண்டிகை இருக்கும். பிரிந்த கணவன், மனைவிக்கிடையே மேலும் பிரிவு ஏற்படுதற்கான வாய்ப்புள்ளது. 3, 12க்கு உடைய புதன் பகவான் பாதகாதிபதி வீட்டில் இருப்பதால் சகோதரர்களுடன் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் கவனம்.












Click it and Unblock the Notifications