Diwali Rasi Palan: துலாம் ராசிக்கு 10 இல் குரு.. பண வரவு கொட்டும்.. வேலையில் ரொம்ப கவனம்
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்ப ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் துலாம் ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. நம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும், அதிக உற்சாகத்துடன் கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். இந்த ஒரு பண்டிகைக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்களும் உள்ளனர். மிகவும் நல்ல நாள் என்பதால் பலர் இந்த நாளில் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

தீபாவளி பலன்கள்
ஐப்பசி மாதத்திற்குள்ளும் அடியெடுத்து வைக்கிறோம். இந்த காலத்தில் கிரக நிலைகளில் ஆங்காங்கே மாற்றங்களும் ஏற்படும். இந்த மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் எந்த ராசிக்கு என்ன மாதிரியான நற்பலன்களை கொடுக்கும், எந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம். இதில் துலாம் ராசிக்கான தீபாவளி பலன்களை காணலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 10 இல் குரு வந்தால் பதவி பறிபோகும். தீபாவளி கொண்டாடும்போது கூட உங்கள் மனதில் வேலை போவது தொடர்பான எண்ணங்கள் வந்து போகும். வேலை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெண்களால் வேலைக்கு வரும் ஆபத்து உள்ளது. மேலதிகாரிகளிடம் வாக்குவாதம், பிரச்சனைகள் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
காதல் கைகூடும்
ராசியிலேயே சுக்கிரன் ஆட்சி பலம் பெற்றிருப்பதால் காதல் கைகூடும் யோகம் உண்டாகும். ராசியில் சூரிய பகவான் நீசமாக 1 மாதம் இருப்பதால் சிறு சிறு பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். குரு 10 இல் வந்தாலும், 2 ஆம் இடமான தன ஸ்தானத்தை பார்ப்பதால் பண வரவு நன்றாக இருக்கும். தொழில், வேலை, வியாபாரத்தில் குருவால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும், பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது.
அரசுப் பணி
குரு செவ்வாயை பார்ப்பதால் அரசுப் பணி, ராணுவப் பணி, காவலர் பணி போன்றவை கிடைப்பதற்கான அற்புதமான யோகம் உண்டாகும். 2 ஆம் இடத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றிருக்கும் நிலையில், குரு பார்வை இருப்பதால் அற்புதமான யோகமாக இருக்கும். நல்ல பதவிகள் கிடைக்கும். தாசில்தார் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
கடன் நீங்கும்
4, 6 ஆம் இடத்தை குரு பார்க்கிறார். ரண, ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வியாதி, கடன், கஷ்டம் எல்லாம் உங்களை விட்டு நீங்கும். வேலை விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். அதிர்ஷ்டம் பெறும் காலகட்டமாக இருக்கும்.
பணவரவு
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் இணக்கமாக இருப்பது நல்லது. சிறு பேச்சு கூட உங்களுக்கு தேவையில்லாத பாதிப்பைக் கொடுக்கும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. 10 இல் குரு வருவதால் பதவி பறிபோனாலும் பண வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தீபாவளிக்குப் பிறகு எந்த விஷயத்தை செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது, பேசுவது நல்லது.












Click it and Unblock the Notifications