Diwali Rasi Palan: விருச்சிக ராசிக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம்.. அதிர்ஷ்டம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்ப ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. நம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும், அதிக உற்சாகத்துடன் கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். இந்த ஒரு பண்டிகைக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்களும் உள்ளனர். மிகவும் நல்ல நாள் என்பதால் பலர் இந்த நாளில் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

Viruchigam Diwali lucky zodiac signs

தீபாவளி பலன்கள்

ஐப்பசி மாதத்திற்குள்ளும் அடியெடுத்து வைக்கிறோம். இந்த காலத்தில் கிரக நிலைகளில் ஆங்காங்கே மாற்றங்களும் ஏற்படும். இந்த மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் எந்த ராசிக்கு என்ன மாதிரியான நற்பலன்களை கொடுக்கும், எந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம். இதில் விருச்சிக ராசிக்கான தீபாவளி பலன்களை காணலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளி அற்புதமாக இருக்கும். உங்கள் 9 ஆம் இடத்தில் குரு பகவான் வருகிறார். அற்புதமான காலகட்டமாக இருக்கும். 10க்கு உரிய சூரிய பகவான் 12 ஆம் இடத்தில் நீச்சமடைகிறார். சுக்கிர பகவான் ஆட்சி பலம் பெறுகிறார். ராசியில் செவ்வாய் ஆட்சி பெறுகிறார். சனி வக்கிர நிவர்த்தியாக இருக்கும். சுக்கிரன், செவ்வாய் ஆட்சி, குரு உச்சம் பெற்றுள்ளாதல் நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் காலமாக இருக்கும்.

காதல் இனிக்கும்

7க்கு உரிய சுக்கிரன் உச்சமாக இருப்பதால் காதல் இனிக்கும் நேரம். காதலில் தோல்வி அடைந்தவர்கள் அந்த சோகத்தில் இருந்து மீள்வீர்கள். மனைவியுடன் நீண்ட நேரத்தை செலவிடுவீர்கள். இந்த தீபாவளியை மனைவியோடு சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடுவீர்கள். வெளியூரில் இருப்பவர்கள் கூட மனைவியுடன் நேரம் செலவு செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

அந்நியோன்யம் பெருகும்

குடும்பத்துக்குள் இருந்த சந்தேகங்கள் அனைத்தும் நீங்கும். பேரதிர்ஷ்டங்களைப் பெறும் காலகட்டமாக இருக்கும். 9 ஆம் இடத்தில் குரு உச்சம் பெறும்போது திடீர் அதிர்ஷ்டம் பெறுவீர்கள். 5 ஆம் பார்வையாக குரு பகவான் செவ்வாயைப் பார்ப்பதால் அற்புதமான யோகம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கும்.

தொழிலில் கவனம்

10க்கு உடையவன் சூரியன் நீச்சமாகிறார். புதிய தொழிலைத் தொடங்குவதை தவிர்ப்பது நல்லது. இருக்கும் தொழிலை வைத்து வாழ்க்கையை நடத்துவது நல்லது. புதிய புதிய தொழில் தொடங்கும் ஐடியாக்கள் வரும். ஆனாலும், அமையதியாக அதனைக் கடந்து செல்வது நல்லது. பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள்.

மகிழ்ச்சி

குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் ஜெயிக்கும் யோகம் உண்டு. எந்த காரியத்தை செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. யோகம் தரும் நேரமாக இருக்கும். குடும்பத்தில் மன நிம்மதி ஏற்படும். தொட்டதெல்லாம் பொன்னாகக் கூடிய காலகட்டமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+