குபேரரின் அருளால் செல்வத்தைப் பெறும் ராசிகள் எது தெரியுமா?.. பணமழை கொட்டும்
சென்னை: செல்வ செழிப்புக்கு அதிபதியாகக் கருதப்படும் குபேரரின் அருளால் சில ராசிக்காரர்கள் தங்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் பெறுவார்கள். தங்களது வாழ்க்கையில் செல்வத்திற்கு பஞ்சமே இல்லாமல் வாழும் ராசிக்காரர்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்...
வீட்டில் மகாலட்சுமியின் அருளும், குபேரரின் அருளும் இருந்தாலே செல்வத்திற்குப் பஞ்சம் இருக்காது. வாழ்க்கையில் செல்வம் பெருகவும், பணத்திற்குப் பஞ்சமில்லாமலும் இருக்க மகாலட்சுமி மற்றும் குபேரர் வழிபாடு மிகவும் முக்கியம். அபரிமிதமான அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும் கடவுள்களாக இருப்பதால் மகாலட்சுமியையும், குபேரரையும் சேர்ந்து வழிபடுவது மேலும் பல பலன்களைக் கொடுக்கும். வீட்டில் தானியங்கள் நிறைந்திருக்கும்.

செல்வத்தின் கடவுளாகக் கருதப்படும் குபேர பகவானின் அருள் கிடைத்தாலே போதும். வாழ்க்கையில் எந்தவிதமான கஷ்டங்களும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம். அந்த வகையில், குபேர பகவானின் அருளுடன், மகாலட்சுமியின் ஆசியையும் பெற்று செல்வத்திற்கு குறைவில்லாமல் வாழும் அதிர்ஷ்ட ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்..
ரிஷபம்: ரிஷப ராசி குபேரன் மட்டுமல்லாமல் சுக்கிரன் மகாலட்சுமி ஆகியோரின் ஆசிகளையும் பரிபூரணமாக பெற்ற ராசியாகும். ரிஷப ராசிக்கு சுக்கிர பகவானே அதிபதி என்பதால் இவர்களுடைய வாழ்க்கையில் பணத்திற்கும், தானியத்திற்கும் குறைவிருக்காது. செல்வம் நிறைந்திருக்கும். வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து சவால்களையும் எளிமையாகக் கடந்து செல்வார்கள். அதில் வெற்றியையும் காண்பவர்களாக இருப்பார்கள். குபேரனுடன் சேர்ந்து மகாலட்சுமியையும் வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
கடகம்: உழைப்புக்கு பெயர்பெற்றவர்கள் கடக ராசிக்காரர்கள். இவர்கள் குபேரனின் அருளை முழுமையாகப் பெற்றவர்களாக இருப்பார்கள். அதனால், தங்களுடைய வாழ்க்கையில் பணம் மற்றும் செல்வத்தைப் பெற்று மகிழ்வார்கள். ராசியதிபதியான சந்திரனைப் போலவே மிகுந்த நட்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். கடுமையான உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கையால் வாழ்க்கையில் வெற்றியைக் குவிப்பார்கள். எந்தவிதமான தடை வந்தாலும் அதனை எளிதாக கையாளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
துலாம்: செல்வம், புகழைப் பெற்று வாழ்க்கையில் தனித்தன்மையுடன் விளங்குவபவர்களாக துலாம் ராசிக்காரர்கள் இருப்பார்கள். சுக்கிரனின் ஆட்சியால் சுபிட்சமும் உண்டாகும். குபேரனின் பரிபூரண அருளைப் பெற்றிருப்பதால் ஏகபோகமான சுகங்களைப் பெறுவார்கள். வாழ்க்கையில் பணத்திற்கும், தானியத்திற்கும் ஒருபோதும் தட்டுப்பாடு ஏற்படாது. மகாலட்சுமியின் அருளும் இருப்பதால் வீட்டில் எதிர்மறையான எண்ணங்கள் நிறைந்திருக்கும்.
விருச்சிகம்: எடுத்த காரியங்கள் அனைத்திலும் நம்பர் ஒன்னாக இருக்கும் ராசிக்காரர்கள் விருச்சிகம். திறமைசாலிகளாக இருப்பார்கள். உங்களுக்கு குபேரனின் அருள் எப்போதும் உண்டு. தங்களுடைய தேவையை மட்டும் நிறைவேற்றாமல் தங்களை சார்ந்தவர்களின் தேவையையும் பூர்த்தி செய்யும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். குபேரனின் ஆசி இருப்பதால் இவர்களுடைய வாழ்க்கையில் பணத்திற்குப் பஞ்சம் இருக்காது.
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றிய நேர்மறை எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு குபேரனின் அருள் பூரணமாக இருப்பதால் நல்ல அதிர்ஷ்டத்தைக் காண்பார்கள். ராசியாதிபதியான குருவின் அருளும் இருப்பதால் தொட்ட காரியங்களில் விடாமுயற்சியுடன் வெற்றியைக் காண்பார்கள். உதவி என்று வருபவர்களுக்கு தயக்கமில்லாமல் உதவி செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் செல்வ வளம் எப்போதும் நிறைந்து மனமகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications