சிவபெருமானுக்குப் பிடித்த ராசிகள் யார் தெரியுமா?.. ராஜவாழ்க்கை வாழ்வார்கள்
சென்னை: மகா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. 12 ராசிகளுக்கும் சிவபெருமானின் அருள் கிடைத்தாலும். சில ராசிக்காரர்கள் சிவனுக்கு பிடித்த ராசிக்காரர்களாக உள்ளனர். அந்த ராசியினர் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆதியும் அந்தமும் இல்லாத ஜோதியானவனர் சிவபெருமான். உலகத்தில் உள்ள அனைத்து ராசிகளுமே சிவபெருமானுக்கு சமமே. அனைத்து ராசியினர் மீதும் சிவன் தனது அருள் பார்வையைப் பார்ப்பதால் நற்பலன்களைப் பெறுவார்கள். மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் பிறப்புன் இறப்பும் அற்றவர். அண்ட சராசரங்களையும் ஆள்பவர் சிவபெருமான். அவர் அருளாலே அவர் தாள் பணிந்து அண்டம் இயங்குகிறது.

கயிலாய மலையில் வாசம் புரியும் சிவபெருமான் இந்த உலகத்தை காத்தருள்பவராக இருக்கிறார். அனைத்து கிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகளையும் சவால்களையும் சிவபெருமான் போக்குவார் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக சனி பெயர்ச்சி, ஏழரை சனி காலங்களில் சிவனை மனதார வழிபட்டால் அவருடைய அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
12 ராசிகள் மீதும் சிவபெருமான் தனது கருணைப் பார்வையை பார்த்தாலும். குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் சிவனுக்குப் பிடித்தமானவர்கள் என்று கூறப்படுகிறது. அந்த ராசிக்காரர்கள் மனதில் நினைத்து வழிபட்ட உடனயே அவர்களது வேண்டுதல்களை சிவன் நிறைவேற்றுவார். பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி கொண்டாடப்படவுள்ள நிலையில், சிவ பெருமானுக்கு மிகவும் பிடித்தமான ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
மேஷம்: சிவ பெருமானின் ஆசியை எப்போதுமே பெறும் நபர்களாக மேஷ ராசிக்காரர்கள் உள்ளனர். எடுத்த காரியங்களில் வெற்றியை அடைய சிவனின் அருள் எப்போதும் இவர்களுக்கு இருக்கும். வியாபாரம், தொழில், வணிக ரீதியான விஷயங்களில் நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
துலாம்: சிவபெருமானின் பூரண அருளைப் பெறுபவர்களில் துலாம் ராசிக்காரர்களும் ஒருவர். இவர்களுக்கு சிவபெருமானின் ஆசிகள் எப்போதும் இருக்கும். சிவனின் அருளாலும், ஆசிர்வாதத்தாலும் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுகிறார்கள். எடுத்த காரியங்களில் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண்பார்கள். சிவ பக்தியால் அனைத்தையும் சாதிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
மகரம்: மகர ராசியினர் சிவபெருமானுக்கு பிடித்த ராசியினர். ராசியின் அதிபதியாக சனி பகவான் உள்ளார். சிவனை தனது தெய்வமாக கருதுபவர் சனி பகவான். அதனால், சிவபெருமானின் அருளும் ஆசியும் உங்களுக்கு பரிபூரணாக கிடைக்கும். பொருளாதார சூழலில் நிலைத் தன்மையுடன் இருப்பீர்கள். ஏழரை சனி காலத்தில் மகர ராசிக்காரர்கள் சிவனை மனதார வழிபட்டால் அனைத்துப் பிரச்சனையில் இருந்தும் விடுபடுவார்கள்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் சிவனின் அருள் பார்வை கிடைக்கப் பெற்றவர்கள். சிவனின் ஆசிர்வாதத்தால் செய்யும் வேலைகளில் வெற்றியைக் காண்பார்கள். வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காண்பார்கள். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். மனதில் விரும்பிய அனைத்து விஷயங்களிலும் நற்பலன்களை அடைவீர்கள். சனிப்பெயர்ச்சி, ஏழரை சனியால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சிவனின் அருளால் தப்பித்து விடுவீர்கள். உரிய தீர்வுகளும் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications