Meenam Rasi Palan: பிப்ரவரியில் ஜாக்பாட் அடிக்கும் மீன ராசி.. கோபத்தை மட்டும் கட்டுப்படுத்துங்க
பிப்ரவரி மாத ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு ராசியிலேயே சனி பகவான் இருக்கிறது. உங்களுக்கு ஜென்மசனி நடந்து கொண்டிருக்கிறது. எதைத் தொட்டாலும் தடங்கல், தோல்வி ஏற்பட்டு வந்திருக்கும். ராசியில் சனி பகவான் இருப்பதால் உங்கள் எண்ணம், புத்தியை மந்தப்படுத்துவார். நிறைய எண்ணங்கள் தோன்றும். ஆனால், எதுவுமே நகராத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.
யோகம்
பிப்ரவரி மாதத்தில் தடைப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நடக்கும் காலகட்டமாக இருக்கும். 11 ஆம் இடத்தில் செவ்வாயும், சூரியனும் இருக்கின்றனர். 21 ஆம் தேதி வரை இருப்பதால் எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் இந்த காலகட்டத்துக்குள் முடித்துக் கொள்வது நல்லது. 2, 9க்கு உரிய செவ்வாய் பகவான் உச்சம் பெற்றிருக்கிறார். மிக பிரம்மாண்டமான யோகத்தைக் கொடுக்கும்.
வழிபாடு
9க்கு உடைய பாக்கியாதிபதி உச்சம் பெறும்போது உங்களுடைய வாழ்க்கை கண்டிப்பாக மாறும். அரசு சம்பந்தப்பட்ட உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வீட்டின் வரவேற்பறையில் முருகனின் படத்தை வைத்து தினந்தோறும் வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். செவ்வாய் உச்சம் பெறுகிறது. கூடவே 6க்கு உடைய சூரியனும் உச்சம் பெறுகிறார்.
விருது வாங்கும் யோகம்
பிப்ரவரி 14 ஆம் தேதி மீன ராசிக்கு 12 ஆம் இடத்துக்கு வந்து ராஜயோகத்தை தரப் போகிறார். செய்கின்ற எல்லா செலவுகளையும் சுபச் செலவுகளாக மாற்றித் தரப் போகிறார். இதய மருத்துவர்களுக்கு விருதுகள் வாங்கும் யோகம் உண்டு. அரசியலில் சீட்டு கிடைக்கும். 4, 7க்கு உடைய புதன் பகவான் பாதகாதிபதி 12 ஆம் இடத்துக்கு வருகிறார். மீடியாவில் இருப்பவர்கள் பெரும் புகழைப் பெறுவீர்கள்.
பழைய விஷயங்கள்
கோர்ட், கேஸ், வம்பு, வழக்குகள் வரும். பழைய விஷயங்களைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடக் கூடாது. சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் ஈடுபட்டால் கண்டிப்பாக பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். இரவு நேரங்களில் அதிகளவில் திட்டமிடுவீர்கள். அதனை மாற்றிக் கொள்வது நல்லது. உங்களைப் பற்றிய கிசுகிசுக்கள் அதிகளவில் வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.
கோபம் வேண்டாம்
உங்களுடைய இலக்கை நோக்கிச் செல்வது நல்லது. செவ்வாய் பகவான் பிப்ரவரி 21 ஆம் தேதிக்குப் பிறகு 12 ஆம் இடத்துக்கு வருகிறார். நிறைய கோபம் ஏற்படும். வீட்டு ஓனரிடம் தேவையில்லாமல் சண்டை போடுவது, வேலை செய்யும் இடத்தில் சண்டை போடுவது போன்றவற்றை செய்வீர்கள். 12 ஆம் இடத்தில் நிறைய கிரகங்கள் மறையும் போது நிறைய கஷ்டங்கள் ஏற்படும். இருப்பினும், அனுபவித்து ஆக வேண்டிய சூழல் ஏற்படும்.
ராஜயோகம்
மனக் குழப்பம் வரும். இருப்பினும், சுக்கிரன், சூரியன் தரும் ராஜயோகத்தால் புகழின் உச்சத்திற்குச் செல்வீர்கள். மற்றபடி அத்தனை விஷயங்களிலும் குழப்பம், தடை, தூக்கமின்மை போன்றவை ஏற்படும். பெரும்பாலும் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்காது. பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் எல்லா நல்ல விஷயங்களையும் செய்து கொள்வது நல்லது.
-
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications