Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் 4 கிரகங்கள்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகப் போகுது
பிப்ரவரி மாத ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகப் போகிறது. 2 ஆம் இடத்தில் குரு பகவான் இருக்கிறார். தங்க நகைகளை அள்ளிக் கொடுக்கும் யோகம் உண்டாகும். எப்போதும் உங்கள் வேலை, பிசினஸை சார்ந்தே எண்ணங்கள் இருக்கும். 10 ஆம் இடத்திலே சுக்கிரன், செவ்வாய், புதன், சூரியன், ராகு ஆகிய கிரகங்கள் இருக்கின்றன. 10 இல் சாதகமான கிரகங்கள் இருப்பதால் நல்ல அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.
கவனம்
அதீத உழைப்பை போட்டால் அந்த உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறக்கூடிய யோகம் உண்டாகும். தங்கத்தை வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. உடம்பை சனி பார்ப்பதால் சோம்பல் ஏற்படும். எப்போதும் வேலை வேலை என்று உள்ளதே என்ற எண்ணம் தோன்றும். பிப்ரவரி மாதம் முழுவதும் உங்கள் எண்ணங்கள் வேலையில் மட்டுமே இருக்கும்.
சினிமா துறையினருக்கு யோகம்
11 ஆம் இடத்தில் இருந்து 1 ஆம் இடத்தைப் பார்ப்பதால் கொஞ்சம் ஓய்வெடுத்தாலும் கடன் தொடர்பான, இஎம்ஐ தொடர்பான எண்ணங்கள் வந்து உங்களை ஓடவைக்கும். சுக்கிர பகவான் 10 இல் இருப்பதால் ஒளிப்பாதிவாளர் முதல் சினிமா துறையில் இருக்கும் அத்தனை பேருக்கும் அற்புதமான யோகங்கள் கிடைக்கும். டிராவல்ஸ் வைத்திருப்பவர்கள், ஓட்டுநர்களுக்கு நல்ல நேரம் உண்டாகும்.
சுக்கிரன் அருள்
10 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் வந்துவிட்டார். அடுத்த வாகனம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். ஓட்டுநர்கள் கூடுதலாக கார்கள், வாகனங்களை வாங்கும் யோகம் உள்ளது. புதன் பகவான் 10 இல் அமர்ந்துள்ளதால் வக்கீல், நீதித்துறையில் இருப்பவர்கள், பேச்சுத் திறமையாளர்கள், கமிஷன் ஏஜென்ட், ஆசிரியர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
தொழில் புகழ்
குரு பகவான் 2 ஆம் இடத்தில், புதன் 10 ஆம் இடத்தில் இருப்பதால் நல்லாசிரியர் விருதும் வாங்கும் யோகம் உள்ளது. அரசிடமிருந்து கெளரவ விருதுகள் வாங்கும் யோகம் உள்ளது. பிப்ரவரி மாதத்தின் இறுதியில் சூரிய பகவான் மகரத்தில் இருந்து கும்பத்திற்கு வருவதால் 5 கிரக சேர்க்கைகள் உண்டாகும். திருக்கணிதப்படி 4 கிரகங்கள் ஒன்று சேரும். தொழிலில் புகழைப் பெறுவீர்கள். சோலார் சிஸ்டம், வெப்பத்தில் பணிபுரிபவர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உங்களை வந்து சந்திப்பார்கள்.
பொருளாதாரத்தில் ஏற்றம்
4க்கு உடையவர் 10 ஆம் இடத்தில் வருவதால் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்தலில் நிற்கலாம் என்கிற எண்ணம், பதவி ஆசை வந்து சேரும். இந்த மாதத்தில் எந்தவிதமான கெட்ட விஷயங்களும் நடக்காது. இந்த மாதம் உங்களுடைய மாதமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். நேரத்தை வீணாக்காமல் உழைப்பைக் கொடுத்தால் ஏற்றம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications