Viruchigam Rasi Palan: சிங்க நடை போடும் விருச்சிக ராசி.. பணம் கொட்டும்.. பெண்கள் விஷயத்தில் கவனம்
பிப்ரவரி மாத மேஷம் ராசி பலன்: ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டி தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு எல்லா கிரகங்களும் 3 ஆம் இடத்தில் சென்று மறைந்திருந்தது. 3 மாதங்களாக சரியான சாப்பாடு, தூக்கமில்லாமல் வேலை செய்து கொண்டே இருப்பீர்கள். பிப்ரவரி 14 ஆம் தேதிக்குப் பிறகு எல்லா கிரகங்களும் 4 ஆம் இடத்துக்குச் செல்கின்றன. 4 ஆம் இடம் என்பது சுக ஸ்தானம். அங்கு புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், ராகு, சனி என அனைத்து கிரகங்களும் இருக்கின்றன.
கார், வீடு வாங்கும் யோகம்
கண்டிப்பாக வீடு, கார் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டுக் கடன் கண்டிப்பாக கிடைக்கும். வராத இடத்தில் இருந்து பணம் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். விருச்சிக ராசியினருக்கு நல்ல நேரம் ஆரம்பிக்கப் போகிறது. சனி பகவான் சொத்தை வாங்கக் கூடிய யோத்தைத் தரும்.
பெயர், புகழ்
உயர்கல்வி, உயர்பதவி கிடைக்கும். வெளிநாடுக்கு சென்று படிக்கும் யோகம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். நீங்கள் செய்யும் வேலைகளுக்கு உரிய பாராட்டு, பெயர், புகழ் கிடைக்கும் யோகம் உண்டாகும். 4 ஆம் இடத்தில் ராகு, சுக்கிரன், செவ்வாய் வரும்போது அவப்பெயர் வருவதற்கான சூழல் ஏற்படும். பெண்கள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
தொழிலில் அனுகூலம்
தொழிலில் அடுத்த உயர்நிலைக்குச் செல்வீர்கள். உங்களுடைய புகைப்படங்களை வெளியில் அனுப்பாமல் இருப்பது நல்லது. புகைப்படம், வீடியோ, ஆடியோ போன்றவற்றை அனுப்பாமல் இருப்பது நன்மை பயக்கும். ராகு தரும் தோஷங்களும் கூடவே வருவதால் மிக கவனமாக இருப்பது நன்மை பயக்கும். கெளரவமாக நடந்து கொள்வது நல்லது. 4 ஆம் இடத்தில் இருக்கும் ராகு குடும்பத்தைப் பிரிக்கும் என்பதால் மிகுந்த கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் சந்தேகம் வரும் சூழல் ஏற்படும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications