பிப்ரவரி மாத ராசி பலன் 2024: அஷ்டமத்தில் கூடிய கிரகங்கள்.. கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார்
சென்னை: பிப்ரவரி மாதத்தில் சூரியன் மகர ராசியிலும் கும்ப ராசியிலும் பயணம் செய்வார். மகரத்திலும் கும்பத்திலும் புது கூட்டணி உருவாகிறது. இந்த மாதத்தில் வசந்த பஞ்சமி, ரத சப்தமி, பீஷ்மாஷ்டமி, மாசி மகம் என பல முக்கிய விஷேச தினங்கள் உள்ளன. சனி சூரியன் கூட்டணியால் இந்த மாதத்தில் யாருக்கு பணவரவு அதிகரிக்கும், செலவு வரும். திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
மிதுனம்: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் இல்லை. என்றாலும் முதல் 15 நாட்கள் தொழில் வியாபாரத்தில் அதிக அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். தேவையில்லாத விசயங்களில் தலையிட வேண்டாம் காரணம்

அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் பெறுவதால் கோபத்தை கட்டுப்படுத்தவும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திருமணம் சுப காரியம் தொடர்பாக இப்போது பேச வேண்டாம். எட்டாம் வீட்டில் கிரகங்கள் கூட்டணி இருப்பதால் வேகத்தை கட்டுப்படுத்தவும் நிதானமாக இருப்பது நல்லது. ஓவர் டென்சன் உடம்புக்கு ஆகாது.
மாணவர்கள் படிப்பில் கவனமாக இருப்பது நல்லது. விளையாட்டு தனமாக இருக்க வேண்டாம். பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைக்க வேண்டிய மாதமாக பிப்ரவரி மாதம் அமைந்துள்ளது. சூரியன் செவ்வாய் இணைந்து 8ஆம் வீடான மகர ராசியில் சஞ்சரிப்பதால் மாத முற்பாதியில் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு.
கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, விட்டு கொடுத்து செல்வது, பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாத பிற்பகுதியில் கிரகங்கள் ஒன்பதாம் வீட்டிற்கு செல்கின்றன. பாக்ய ஸ்தானத்தில் சனி சூரியன் கூட்டணியால் பணவருமானம் நன்றாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் படிபடியாக குறையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
பண வருமானம் அதிகமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது இதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் நடந்து கொண்டால் அவர்கள் மூலம் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.
வேலை செய்யும் இடத்தில் தங்களுக்குரிய பணிகளை சிறப்புடன் செய்து முடித்து பாராட்டுதல்களை பெறுவார்கள். பதவி உயர்வு கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளில் ஈடுபடாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண் பெறலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications