பிப்ரவரி மாத பலன்: மிதுன ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் புதன்.. பணம் கொட்டும்.. ஆனா அந்த ஒரு விஷயம்
பிப்ரவரி மாத ராசிபலன்: 2025ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி விரைவில் விடை கொடுக்க போகிறது. பிப்ரவரி மாதம் பிறக்க போகிறது. பிப்ரவரி மாதத்தில் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்த மாதத்தில் மிதுன ராசிக்காரர்கள் என்னவிதமான பலன்களைப் பெறப் போகின்றனர். எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி மாதத்தில் புதன் கிரகமும், சூரியன் கிரகமும் பெயர்ச்சி அடைகின்றன, பிப்ரவரி 4 ஆம் தேதி மகரத்தில் இருக்கக்கூடிய புதன் பகவான் கும்ப ராசிக்கும், 26 ஆம் தேதி மீன ராசிக்கும் பிரவேசமாகிறார். மற்றொரு பெயர்ச்சி சூரியர் பெயர்ச்சி. சூரிய பகவான் பிப்ரவரி 13 ஆம் தேதி கும்ப ராசிக்குள் பெயர்ச்சியாகிறார். சந்திரனுடைய பெயர்ச்சி தினந்தோறும் இருக்கும்.

சந்திர பகவான் சதய நட்சத்திரத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி மீண்டும் சதய நட்சத்திரத்திற்குள் வந்து பூரட்டாதி நட்சத்திரத்தில் தன்னுடைய பெயர்ச்சியை இந்த மாதத்தில் முடிக்கிறார். இந்த மாதத்தின் கிரக நிலையைப் பார்க்கும்போது ரிஷபத்தில் குரு பகவான், மிதுனத்தில் செவ்வாய் வக்கிர நிலை, கன்னியில் கேது பகவான், மகர ராசியில் புதாதித்ய யோகம், கும்பத்தில் சனி பகவான் மூல திரிகோண ஸ்தானம், மீனத்தில் சுக்கிர பகவான் உச்ச நிலையில் இருக்கிறார்.
அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் மிதுன ராசிக்காரர்கள் என்னவிதமான பலன்களைப் பெறப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். மிதுன ராசிக்காரர்களுக்கு ராசி அதிபதியாக இருக்கக்கூடிய புதன் பகவான், எட்டாம் இடத்தில் அமர்ந்து மாதம் துவங்குகிறது. ராசியில் செவ்வாய் பகவான் வக்கிரமாக இருக்கிறார். இந்த மாதத்தில் வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகள் வெற்றி அடையும்.
எட்டில் புதன் இருப்பதை தடையாக நினைக்கக் கூடாது. உங்களுக்கு ஒரு மடைமாற்றமாக இருக்கும். அதே நேரத்தில், புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமருவது நல்ல பலன்களைத் தரும். ஆனால் ராசியில் ஏற்கனவே சனி பகவான் இருப்பதால் ஆன்லைன் வியாபாரம், வெளிநாட்டு தொடர்பான வியாபாரம் வருமானம் பெருகும். ஆனால், உங்களுக்கு வரும் அனைத்து செய்திகளையும் நம்பிவிட வேண்டாம். ஆன்லைன் மோசடி, நம்பிக்கை மோசடியில் சிக்கும் அமைப்பு பிப்ரவரி 4 ஆம் தேதியில் இருந்து உருவாகுகிறது. எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
ஏற்றுமதி தொழில் செய்பவர்கள் பொருளின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. புதன் பகவான் 10 ஆம் இடத்தில் உட்காருவதால் 26 ஆம் தேதி முதல் யோகமான காலமாக இருக்கும். சுக்கிரன் உச்சத்தில் இருப்பதால் நல்ல பலன்களைக் காண்பீர்கள். வியாபாரத்தில் கொழுத்த லாபத்தைப் பெறுவீர்கள். வேலையில் திடீர் பண வரவு உண்டாகும். சம்பள உயர்வு பெறுவீர்கள்.
பொருளாதார ரீதியான உயர்வைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அதிக செலவுகளைச் செய்வீர்கள். வேலைமாற்றத்தைப் பெறுவீர்கள். வேறு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வேலை, நல்ல சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தைப் பொருத்தவரை மனைவி, மகள் வகையில் நிறைய செலவுகள் வரும். அல்லது மருத்துவ செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சுப செலவுகள் செய்ய தயங்கக் கூடாது.
செவ்வாய் பகவான் ராசியில் வக்கிரமாக இருப்பதால் மருத்துவ செலவுகள் வரும். விரயம் ஆகிறதென்றாலும் மனைவி மகள்களுக்காக ஆடை, அணிகலன்கள், வீட்டுக்காகப் பொருள்கள் வாங்குவது என இருக்கும் மிதுன ராசிக்காரர்கள் பாக்கியவான்களாக இருப்பார்கள். மாணவர்கள் அடுத்தகட்ட கல்வியை நோக்கிப் போவீர்கள். மல்டி நேஷனல் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புண்டு.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பு உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல பொருள் வரவு உண்டாகும். பலருக்கு ரத்தத்தில் குறைபாடு, பிபி தொந்தரவு, செரிமான தொந்தரவு போன்ற பிரச்னைகள் உண்டாகும். மூத்த சகோதரருடன் பிரச்னைகள் ஏற்படும். சொத்து பிரச்னையில் இருப்பவர்கள் வேல் மாரல் என்ற முருகனின் ஸ்லோகத்தைப் படிப்பது நல்லது.
பொருளாதார வளம் உங்களுடைய நல்ல நிலைமையில் வைத்திருக்கும். நிறைய வெற்றிகளையும், அதிர்ஷ்டங்களையும் பெறுவீர்கள். காஞ்சி வரதராஜப் பெருமாளை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications