பிப்ரவரியில் சிம்ம ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டும்.. ஆனா கூட இருப்பவர்களால் தான் பிரச்னை.. உஷாரா இருங்க
பிப்ரவரி ராசி பலன்: 2025ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி விரைவில் விடை கொடுக்க போகிறது. பிப்ரவரி மாதம் பிறக்க போகிறது. பலரும் இந்த மாதத்தை ஆவலுடன் இருப்பார்கள். எனவே இந்த மாதத்தில் சிம்ம ராசிக்கான பலன்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி மாதத்தில் புதன் மற்றும் சூரியன் கிரகங்களின் பெயர்ச்சிகள் நிகழவுள்ளன. தற்போது மகரம் ராசியில் உள்ள புதன் கிரகம் பிப்ரவரி 4 ஆம் தேதி கும்பம் ராசிக்கும், பிப்ரவரி 26 ஆம் தேதி மீனம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளார். சூரிய பகவான் பிப்ரவர் 13 ஆம் தேதி கும்பம் ராசியில் பயணத்தை தொடங்கவுள்ளார்.

குரு பகவான் ரிஷபம் ராசியிலும், செவ்வாய் மிதுனத்தில் வக்ர நிலையிலும், கேது கன்னி ராசியிலும், கும்பத்தில் சனி பகவானும், சுக்கிரன் மீனம் ராசியில் உச்ச நிலையில் உள்ளார். அதேபோல ராகுவும் மீனத்திலும் உள்ளனர். இந்த கிரக நிலையில் தான் ராசி பலன்கள் இருக்கப் போகின்றன.
சிம்ம ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது பாகம் நிறைய மாற்றங்களைக் கொடுக்கும். ராசிக்கு அதிபதியாகிய சூரியன் ஆறாம் இடத்தில் அமர்ந்து மாதம் துவங்குவதால் வேலை வாய்ப்பு உண்டாகும். அரசு வேலை வாய்ப்புகளுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதன் பகவான் 6 இல் இருப்பதால் அபரிமிதமான வளர்ச்சியைக் கொடுக்கும்.
வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆறாம் இடத்தில் சூரியனும் புதனும் இருப்பதால் வயிறு தொடர்பான பிரச்னைகள் செரிமானப் பிரச்னைகள் ஏற்படும். புதன் பகவான் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் இடத்திற்கும், லாபத்திற்கும் அதிபதியான புதன் பகவான் ஆறாம் இடத்தில் இருப்பது சர்வீஸ் துறையில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கொடுக்கும். புகழ், பெயர் உண்டாகும்.
மிகப்பெரிய தன லாபத்தைப் பெறும் யோகம் உண்டாகும். புதன் பகவான் பிப்ரவரி 4 ஆம் தேதி சப்தம ஸ்தானத்துக்கு செல்கிறார். அங்கு புதனும் சனியும் அமர்ந்திருப்பதால் இந்த இணைவு வியாபார கூட்டாளி உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்புகள் உண்டு. நெருங்கிய நண்பர் நம்பிக்கை துரோகம் செய்ய வாய்ப்புகள் உண்டு. முதலீட்டு ஆலோசனை சொல்பவரே தவறாக வழிநடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களுடைய அறிவு, அனுபவத்தைப் பயன்படுத்தி நடப்பது நல்லது.
பிப்ரவரி 4 முதல் 26 ஆம் தேதி வரை இதுபோன்ற நிலை உள்ளதால் பணப் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் 26 ஆம் தேதி அமருவதால் தொழிலில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். புதன் சுக்கிரன் இணைவாக இருப்பதால் உத்தியோக ரீதியான உயர்வு ஏற்படும். வேலை வாய்ப்புகள் உருவாகும். அந்த வாய்ப்புகள் உங்களை உயர்த்தும்.
வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் நிர்வாகத் துறை, அரசுத் துறை, அரசு அதிகாரிகளுடன் நல்ல நட்புறவுகள் ஏற்படும். சிலருக்கு தோல் தொடர்பான பிரச்னைகள், நரம்பு, எலும்பு பிரச்னைகள் ஏற்படும்.
லாபத்தில் செவ்வாய் இருப்பது பூமி தொடர்பான விஷயங்களை காட்டுகிறது. சொத்தை விற்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் அதற்கு கிடைக்கும் லாபம் குறைவாக இருக்கும். மூத்த சகோதரர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். இரண்டாம் இடத்தில் கேது, எட்டாம் இடத்தில் ராகு இருப்பது கழுத்து, முதுகு வலியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. 8, 10க்கு அதிபதியாக இருக்கக்கூடிய கிரகங்கள் பரிவர்த்தனையாவது திடீர் வேலை மாற்றத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு படிப்பில் வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும். 10, 11, 12 ஆம் வகுப்புகளில் படிப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்டங்கள் பெருக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications