கும்பம், மீனம் ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய 2 விஷயங்கள்.. நோட் பண்ணுங்க
வார ராசி பலன்: பங்குனி மாதத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
வார ராசி பலன்
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். அதன்படி கடந்த மார்ச் 29 ஆம் தேதி ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்து ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த வாரத்துக்கு பிறகு தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

07.04.2025 - 13.04.2025
இந்த வாரத்துடன் தமிழ் மாதமான பங்குனி மாதம் நிறைவடைந்து சித்திரை மாதம் பிறக்கவுள்ளது. இது அனைவருக்கும் நல்ல மாற்றத்தை கொடுக்கும். இந்நிலையில் 07.04.2025 - 13.04.2025 கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகவும், தெளிவாகவும் பார்க்கலாம்.
கும்பம் - உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் இதுநாள் வரை நிலவி வந்த சிக்கல்கள் தீரும். உத்யோகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலில் புதிய முயற்சி எதுவும் மேற்கொள்ள வேண்டாம். நிதானமாக சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். கல்வியில் மந்தத்தன்மை ஏற்படும்.
தடைகள்
கல்வியில் நல்ல மாற்றம் ஏற்படும். வண்டி, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. உத்யோகம், தொழிலில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சொத்துகள் சேரும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நல்ல பலன்கள் கிடைத்தாலும் மனதில் அவ்வப்போது குழப்பங்கள் வந்து செல்லும்.
கல்வி
வார்த்தைகளில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வாய், பல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அதிக அக்கறையுடன் இருப்பது நல்லது. குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். அவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிதானமாக முடிவு செய்ய வேண்டும். குழந்தைகளுக்காக அபிராமி அந்தாதி படிக்க வேண்டும். ராகவேந்தர் வழிபாடு அணுகூலம் தேவை.
மீனம் - பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். முக்கியத்துவம் இல்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களில் சாகசம் செய்வது தேவையில்லாத பிரச்னைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு கூடாது. பெற்றோர், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கை துணையுடன் விட்டு கொடுத்து செலுத்துவது நல்லது.
கூடா நட்பு
ஜென்ம சனியை நினைத்து கவலைப்பட தேவையில்லை. இருந்தாலும் உங்களின் ராசியில் அதிகளவு கிரகங்கள் இருப்பதால் மே 14 ஆம் தேதி வரை அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். சித்திரை மாதத்துக்கு பிறகு நேரம் நன்றாக இருக்கிறது. கூடா நட்பால் தேவையில்லாத பிரச்னைகளில் சிக்க நேரிடும். எனவே நண்பர்கள் விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
உறவுகளுடன் மனக்கசப்பு வந்து செல்லும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயிறு, முட்டி, பாதம் வலி, ஒவ்வாமை பிரச்னைகள் ஏற்படும். கவனமாக இல்லாவிடின் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. வீண் வம்பு, பிரச்னைகளை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் வழக்குகளில் சிக்க நேரிடும். மன அழுத்தம் இருக்கும். நவ கிரகத்தில் ராகு, கேதுவுக்கு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications