மகர ராசிக்கு சிகரம் தொடும் யோகம்.. பிள்ளைகள், எதிரிகள் விஷயத்தில் மிக கவனம்

Subscribe to Oneindia Tamil

வைகாசி மாத ராசி பலன்: சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.05.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இடமாற்றம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

Magaram Lucky zodiac signs

தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அந்த வகையில், இந்த வைகாசி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு யோக பலம் அதிகளவில் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். படபடப்பு ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விநாயகர் வழிபாடு மற்றும் நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய கேது பகவானை வழிபடுவது அற்புதமான பலன்களைத் தரும். புதிய தொழில், வியாபாரம், தொழில், உத்தியோகம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

படிப்பில் இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய இனிமையான காலகட்டமாக இருக்கும். சந்தோஷம் ஏற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கைகூடக்கூடிய அமைப்பு உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள், பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்குவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

தைரியம், புத்துணர்ச்சியுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய காலகட்டமாக இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் பூதக் கண்ணாடி ஆராய்ச்சி செய்வது நல்லது. அவர்களுடைய தேக ஆரோக்கியம் மற்றும் பழக்க வழக்கங்களில் எல்லா வைகாசி மாதத்திலும் ஒரு கண் வைத்துக் கொள்வது நன்மையை ஏற்படுத்தி தரும். அபிராமி அந்தாதியில் இருக்கக்கூடிய 40, 59, 75 ஆவது பாடலை மகர ராசியினர், குழந்தைகள் இருக்கக்கூடியவர்கள் உச்சரிப்பது நன்மையை தரும்.

பெரிய அளவுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தி தரும். எதிரிகள் பலமாக இருப்பதால் அவர்களை அலட்சியப்படுத்துவது கூடவே கூடாது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் உடனடியாக எடுக்க கூடிய முடிவுகள் அனைத்தும் அனுகூலமான சூழ்நிலை, சந்தோஷமான அமைப்பையும் ஏற்படுத்தி தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.

நல்ல வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தரும். நன்மைகள் அள்ளித் தரும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+