வார ராசி பலன்: மேஷம், ரிஷபம், மிதுன ராசியினர் பெறப்போகும் பலன்கள்.. அதிர்ஷ்டம் கொட்டும்
Weekly Rasi Palan: ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை மேஷம், ரிஷபம் மற்றும் மிதுன ராசிக்கான பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் - மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் எடுத்த வேலைகளை உரிய நேரத்தல் செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் உங்கள் மீதான மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் உருவாகும். சனியின் அருளால் நல்ல பல பலன்களைப் பெறுவீர்கள். தந்தை வழி உறவுகள் உங்களிடம் உதவிகள் கேட்பதற்கான சூழல் உருவாகும்.

அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், அரசு, தனியார் துறையில் இருப்பவர்கள் தங்களுடைய செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப காரியங்களில் சுபச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் உற்பத்தி, விற்பனையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழிலை விரிவுபடுத்துவது, புதிய கிளைகள் துவங்குவதற்கான யோகங்கள் உள்ளன.
வேலை செய்யும் பெண்கள் பொருளாதாரத்தில் நிறைவு பெறுவார்கள். நீண்டநாள்களாக திருமணத்துக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். மாணவர்களுக்கு தகுதியான பணியிடங்களில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பண வரவு அதிகரிக்கும். உங்களுடைய செயல்பாடுகளால் பாராட்டைப் பெறுவீர்கள்.
செவ்வாய்க்கிழமை நாள்களில் அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். செவ்வரளிப் பூ மாலை முருகனுக்கு அணிவிப்பது நன்மை பயக்கும்.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு மனதில் புதிய உத்வேகம் பிறக்கும். அனைத்து வேலைகளையும் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கிரகங்களின் செயல்பாட்டால் நல்ல பலன்கள் கிடைக்க உள்ளதால் தவறான பழக்க வழக்கங்களை கைவிடுவது நல்லது. நல்ல பழக்க வழக்கத்தை அமைத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.
வேலை செய்பவர்கள் சக ஊழியர்களிடம் அன்பாக, இனிமையாகப் பழகுவீர்கள். உங்களிடம் இருந்து வந்த கடுமையான குணம் நீங்கி அன்பாக பழகுவீர்கள். இதனால், ஊழியர்கள் மத்தியில் உங்களுக்கு நல்ல பெயர் உண்டாகும். ஊழியர்கள் மூலமாக எதிர்பாராத உதவிகள் கிடைப்பதற்கான சூழல் உருவாகும். அதன் மூலம் ஆதாயமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் தொடர்பான சொத்துகளை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார சூழ்நிலை சீராக இருக்கும்.
பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இருப்பினும் மனதில் குழப்பமான நிலையே இருக்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு சாதகமான நிலை இருப்பதால் படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களடைய நண்பர்கள் மற்றும் சக மாணவர்களுக்கும் உதவுவீர்கள்.
வெள்ளிக்கிழமை நாள்களில் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபடுவது நல்ல பலன்கலைத் தரும். பெருமாளுக்கு மல்லிகை மாலை சாத்தி வழிபடுவது நன்மை பயக்கும்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான பலன்களைத் தரும் வாரமாக இருக்கும். வாழ்வில் வளமும் நலமும் அதிகம் பெறுவீர்கள். உங்களுடைய வெற்றிக்கு உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அதன் மூலம் அனுகூலமான பலன்களும் ஏற்படும். உறவினர்கள் உங்களைக் கண்டு பொறாமைப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
அரசு மற்றும் தனியார் துறையில் வேலையில் பார்ப்பவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குவார்கள். இழுபறியாக இருந்து வந்த பணிகள் அனைத்தையும் செய்து முடிப்பார்கள். உங்களுடைய நிர்வாகத் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் தேவையான பயிற்சி படிப்புகளை மேற்கொள்ளும் சூழல் ஏற்படும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதன் மூலம் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
பெண்கள் குழந்தை பாக்கியம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அழகுத் துறை சார்ந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பிள்ளைகளால் பெருமைப்படும் சூழல் ஏற்படும். நண்பர்களின் உதவி தகுந்த நேரங்களில் கிடைக்கும்.
புதன்கிழமை நாள்களில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. பெருமாளை 11 முறை வலம் வந்தால் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.












Click it and Unblock the Notifications