குருவின் அருளால் மேஷ ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. 2 மாதத்தில் நடக்கும் அதிசயம்
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் 18 ஆம் தேதி மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு குரு அதிசாரப் பெயர்ச்சி ஆகிப் போகிறார். அதே நவம்பர் மாதத்தில் கடகத்தில் இருந்து மீண்டும் மிதுனத்துக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். இதுவே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. குரு என்பவர் தேவர்களுக்கெல்லாம் தேவர். பிள்ளைப் பேறு, திருமணம், செல்வம், செழிப்பு என அனைத்து நல்ல விஷயங்களுக்கும் காரணகர்த்தாகவாக இருக்கிறார்.

சனியிடமிருந்து தப்பிக்க ஒரே வழி குரு. சனி பகவான் என்றாலே பொதுமக்கள் பலரும் அச்சப்படுவார்கள். ஆனால் உண்மையில் குருவைக் கண்டுதான் அச்சப்பட வேண்டும். குரு என்பவர் ஞானக்காரகர். தர்மத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு மட்டுமே குரு பகவான் உதவி செய்வார். குரு என்பவர் வளர்ச்சியைக் கொடுப்பார். ஆனால் அதனை நிதானமாகவே கொடுப்பார் அதுவே இந்த அதிசாரப் பெயர்ச்சியில் நிகழும்.
அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
பொதுவாக மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பகவான் அனைத்து விதமான நன்மைகளையும் கொடுப்பவர். 3 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் 4 ஆம் இடத்துக்குச் செல்கிறார். 3 ஆம் இடம் என்பது மனக் குழப்பம். தன்னுடைய வாழ்க்கை போக்கை பற்றிய குழப்பம் உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். குரு 4 ஆம் இடத்துக்குச் செல்வதால் பெரிய அளுக்கு வளர்ச்சிக் கொடுக்கும். தொழில் ரீதியாக நல்ல ஒரு வளர்ச்சி கொடுக்க கூடிய அமைப்பு உண்டாகும்.
பண வரவு அதிகரிக்கும்
தடைபட்டு இருந்த பணங்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் காலகட்டம். குடும்பத்தில் நிதானமாக இருக்க வேண்டும். சுகாதார விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. நிறைய பயணங்கள் மேற்கொள்வீர்கள். புண்ணிய ஸ்தலம், திவ்ய தேசங்களுக்குச் செல்வது நன்மை பயக்கும். திருவண்ணாமலைக்குச் சென்று வருவது அற்புதத்தை ஏற்படுத்தும். உங்களை சுற்றி எல்லாமே நல்ல விஷயங்கள் நடக்கும்.
தடை நீங்கும்
குடும்பத்தினர் படும் கஷ்டங்களை நினைத்து அதற்கேற்ப நடந்து கொள்வது நல்லது. தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும். நல்ல வீடு கட்டும் யோகம் உண்டு, பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். இதுவரை இருந்து வந்த மனக் கஷ்டங்கள், கவலைகள், ஆரோக்கியம் தொடர்பான குறைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.
வழிபாடு
அஷ்ட ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பாதிப்புகளில் இருந்து மீண்டு நிவாரணம் உண்டாகும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த அவமானங்கள் நீங்கும். அதிசார குருப்பெயர்ச்சியன்போது நல்ல மாற்றம், விளைவுகளை ஏற்படுத்தும். வியாழக்கிழமை தோறும் வாழைப் பழங்களை பசுக்களுக்கு தானமாகக் கொடுப்பது அற்புதத்தை ஏற்படுத்தும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications