ராஜா பகவத் போல மாறும் ரிஷப ராசி.. பணத்தை மூட்டையில் அள்ளும் யோகம்
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் 18 ஆம் தேதி மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு குரு அதிசாரப் பெயர்ச்சி ஆகிப் போகிறார். அதே நவம்பர் மாதத்தில் கடகத்தில் இருந்து மீண்டும் மிதுனத்துக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். இதுவே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. குரு என்பவர் தேவர்களுக்கெல்லாம் தேவர். பிள்ளைப் பேறு, திருமணம், செல்வம், செழிப்பு என அனைத்து நல்ல விஷயங்களுக்கும் காரணகர்த்தாகவாக இருக்கிறார்.

சனியிடமிருந்து தப்பிக்க ஒரே வழி குரு. சனி பகவான் என்றாலே பொதுமக்கள் பலரும் அச்சப்படுவார்கள். ஆனால் உண்மையில் குருவைக் கண்டுதான் அச்சப்பட வேண்டும். குரு என்பவர் ஞானக்காரகர். தர்மத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு மட்டுமே குரு பகவான் உதவி செய்வார். குரு என்பவர் வளர்ச்சியைக் கொடுப்பார். ஆனால் அதனை நிதானமாகவே கொடுப்பார் அதுவே இந்த அதிசாரப் பெயர்ச்சியில் நிகழும்.
அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம்
குரு உங்கள் தன ஸ்தானத்தில் மிதுன ராசியில் அமர்ந்திருக்கிறார். தனத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த குரு பகவான் அதிசாரமா பெயர்ச்சியாவதால் சில விஷயங்களில் கவனம் தேவை. 3 ஆம் இடத்தில் குரு வருவதால் தாம்பத்ய வாழ்க்கையில் நன்மை பெறுவீர்கள். சிலருக்கு காரியத் தடை, பயணத் தடைகளை ஏற்படும்.
வெளிநாடு பயணம்
பிள்ளைகள் வழியாக சிறு சிறு கவலைகள், கருத்து வேறுபாடுகள் வந்து போகும். 3 ஆம் இடத்தில் குரு வந்து நேரடியாக பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கிறார். பாக்கியத்தை அவர் பார்ப்பதால் வெளிநாட்டு பயணங்கள் அமையும். புகழ், கீர்த்தி உண்டாகும். திருமண விஷயத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். புதிய திருமண வரன்கள் அமையும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரம் தொடர்பான நல்ல பேச்சுவார்த்தைகள் நடக்கும்.
பெயர், புகழ் கிடைக்கும்
படிக்கும் மாணவர்கள் ஆன்லைன் கோர்ஸ்களை படிப்பீர்கள். ஜோதிடத் துறையில் உங்கள் புலமைக் கூடும். நல்ல பெயர் புகழ் கிடைக்கும். 9 ஆம் இடம் என்பது உங்கள் பாதக ஸ்தானம். அப்பாவுடைய மனதை நோகடிப்பீர்கள். ஒரு நாளைக்கு ஒருமுறையாவது தந்தையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். உடம்பில் நீண்டகாலமாக வியாதிகள் இருந்தால் அந்த வியாதி பரிபூரணமாக நீங்கும். நல்ல மருத்துவ ஆலோசனை கிடைக்கும்.
திருமண யோகம்
திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவிக்கிடையே உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான அற்புதமான காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அடுத்தடுத்து பண வரவு அதிகரிக்கும். லாபத்தை குரு பார்ப்பதால் அலுவலகத்தில் இருந்து பதவி உயர்வு தொடர்பான செய்திகள் வந்து சேரும்.
வழிபாடு
இந்த காலகட்டத்தில் ஆடுகளுக்கு சாப்பிடுவதற்குரிய இலை தழைகளை வாங்கிக் கொடுப்பது அற்புதமான ஏற்றத்தை உண்டாக்கும். காராம்பசுவின் பாலைக் கொண்டு வியாழக்கிழமைகளில் சிவனுக்கு வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications