குரு பெயர்ச்சி 2020: கன்னி ராசிக்கு குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள்

குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்கியப் பஞ்சாங்கப்படி சார்வரி வருடம் ஐப்பசி 30, நவம்பர் 15ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி கார்த்திகை 5ஆம் நாள், நவம்பர் 20ஆம் தேதி குரு தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவான் கன்னி ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குரு மகரம் ராசியில் நீச்சம் பெற்று அமர்ந்தாலும் ஆட்சி பெற்ற சனியுடன் இணைவதால் உங்களுக்கு நீச பங்க யோகம் கிடைக்கும்.

குரு பகவான் கன்னி ராசிக்கு நான்கு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உடையவர். குரு நீச்சம் பெற்று ஆட்சி பெற்ற சனியோடு
இளகிய மனமும் குழந்தை தனமான குணமும் கொண்ட கன்னி ராசிக்காரர்களே இந்த குரு பெயர்ச்சி உங்களுடைய ராசிக்கு நிறைய நல்ல விசயங்களை கொடுக்கப் போகிறது.

கடந்த சில ஆண்டுகாலமாகவே மிகப்பெரிய சவால்களை சந்தித்து வந்தீர்கள். இனி வரக்கூடிய காலம் ரொம்ப நல்ல காலமாக அமையப்போகிறது. இந்த குரு பெயர்ச்சி உங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

பூர்வ புண்ணிய குரு

பூர்வ புண்ணிய குரு

ஐந்தாம் வீட்டிற்கு குரு பெயர்ச்சி அடைகிறார். கன்னி ராசியின் மீது குருவின் பார்வை படுகிறது. எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குரு பலன் தேடி வருகிறது. ஐந்தாம் வீட்டிற்கு அமரும் குருவின் பார்வை உங்க ராசியின் மீது மட்டுமல்லாது லாப ஸ்தானம், ஒன்பதாம் வீட்டின் மீது குருவின் பார்வை படுகிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி திருப்பு முனைகளை தரப்போகிறது.

மன குழப்பம் நீங்கும்

மன குழப்பம் நீங்கும்

நான்காம் வீட்டில் கேது, சனி, குரு கூடி இருந்து உங்களுக்கு பல சிரமங்களை கொடுத்து வந்தன. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சில பிரச்சினைகள் வந்தன. குரு பெயர்ச்சியால் இனி பிரச்சினைகள் தீரப்போகின்றன. குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. நிறைய பலன்கள் கிடைக்கப் போகிறது. ஐந்தாம் வீட்டில் இருந்து குருவின் பார்வை ராசிக்கு ஒன்பது, பதினொன்றாம் வீடுகளின் மீது விழுகிறது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.

நல்ல காரியங்கள் நடைபெறும்

நல்ல காரியங்கள் நடைபெறும்

நல்ல காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வேலை தொழிலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பஞ்சம ஸ்தான குருவினால் நிறைய நல்லது நடக்கப் போகிறது. அம்மாவின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீடு வாங்கலாம். சகோதர சகோதரிகளுக்கு உங்களால் நன்மைகள் ஏற்படும்.

சொத்து விற்பனையில் லாபம்

சொத்து விற்பனையில் லாபம்

நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பண வரவு வரும். உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுப காரியங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. அப்பா வழி உறவினர்களிடம் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

கனவுகள் நனவாகும்

கனவுகள் நனவாகும்

மாணவர்களின் உயர்கல்வி கனவுகள் நனவாகும். கல்வியில் பின்தங்கியிருந்தவர்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சகோதர உறவுகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கவலைகள் தீரும். தன்னம்பிக்கை கூடும். உங்களின் சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

திடீர் திருமண யோகம்

திடீர் திருமண யோகம்

குருவும் சனியும் ஐந்தாம் வீட்டில் அமர்ந்து நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றனர். கடன் சுமைகள் நீங்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த குறைகள் விலகும். வண்டி வாகனம் வாங்கலாம். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு திடீர் திருமண யோகம் தேடி வரும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிரிந்த காதலர்கள் மீண்டும் ஒன்றிணைந்து திருமணம் செய்யும் யோகம் தேடி வருகிறது.

யோகமான குரு பெயர்ச்சி

யோகமான குரு பெயர்ச்சி

புதிய பட்டம் பதவிகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும் உயர் பதவி யோகம் தேடி வரும். நல்ல வேலையும் நிறைய சம்பளமும் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு யோகமும் தேடி வரப்போகிறது. இந்த குரு பெயர்ச்சி அற்புதமான பலன்களை அள்ளித்தரப்போகிறது அனுபவிங்க கன்னி ராசிக்காரர்களே. சிவ ஆலயங்களில் நவகிரக குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்குங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+