குருப்பெயர்ச்சி: மேஷ ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. 3 அதிர்ஷ்டங்கள் கிடைப்பது நிச்சயம்
குருப்பெயர்ச்சி: குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 மே மாதம் குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஓராண்டுக்கு ஒரு முறை குருப்பெயர்ச்சி நடைபெறும். அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு குரு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருந்தார். இந்நிலையில் வருகிற 14.5.2025 இரவு 11 மணியளவில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக குரு பகவான் நன்மைகளின் அதிபதி என்று அழைக்கப்படுவார். தான் இருக்கும் இடங்களில் அதிகளவு நற்பலன்களை கொடுப்பார். செல்வம், மகிழ்ச்சி, குடும்பம், ஆரோக்கியம் ஆகிய எல்லாவற்றிலும் குரு பகவானின் தாக்கம் இருக்கும். அதனால் தான் குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி குரு பகவான் என்பவர் தனக்காரகன். குரு பகவான் பணத்துக்கு முக்கியமான கிரகம். தனம், பணம் ஒருவருக்கு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் குரு நன்றாக இருக்க வேண்டும். சுக்கிரன் சுகபோகத்துக்கு காரணமானவர். சுக்கிரன் கொடுக்கும் பணம் கையில் இருக்கும். ஆனால், குரு பகவான் கொடுக்கக் கூடிய பணம் என்பது பெரிய அளவில் இருக்கும்.
அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் மேஷ ராசிக்காரர்கள் பெறக்கூடிய பலன்கள், கிடைக்க கூடிய அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய குரு பகவான் 3 ஆம் இடத்துக்குப் போகிறார். 3 ஆம் இடம் என்பது அவருடைய பாக்கிய வீட்டையே பார்க்கக் கூடிய அமைப்பாகும். பொதுவாகவே குரு பகவான் தான் இருக்கக்கூடிய இடத்தை விட பார்க்க கூடிய இடத்திற்கு பலம் அதிகம். 7, 9, 11 ஆம் இடத்தில் குரு பகவான் பார்ப்பது நிறைந்த தன லாபம் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
முதல் ஒரு மாதத்திற்குப் பெரிய பலன்கள் இருக்காது. ஜூன் மாதம் உங்கள் ராசிநாதன் நீச்சபங்கம் அடைகிறார். அதனால், ஜூன் மாதத்தில் இருந்தே குருப்பெயர்ச்சியின் முழு நல்ல பலன்களைப் பெறத் தொடங்குவீர்கள். 3 ஆம் இடம் என்பதே பெரிய இடம் இல்லை, சோதனைக்குரிய இடம் என்று கூறினாலும், எல்லா ராசிகளுக்கும் விதிவிலக்கு இருக்காது.
உங்களுடைய பாக்கியாதிபதி குரு பகவான் உங்கள் பாக்கிய வீட்டை பார்ப்பது கடந்த காலங்களில் எந்த பாக்கியங்களை நீங்கள் அனுபவிக்கத் தடைகள் இருந்ததோ, அந்த தடைகள் நீங்கக்கூடிய அமைப்பாக இருக்கும். மிகப்பெரிய நல்ல பலன்கள் 80 சதவீதத்துக்கும் மேல் இந்த குருப்பெயர்ச்சியில் கிடைக்கும்.
7 ஆம் இடத்தை அவர் பார்ப்பதன் மூலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். காதல் முறிவடையும் நிலையில் இருப்பவர்களுக்கு காதல் நிறைவேறக்கூடிய அமைப்பு உள்ளது. பிரிந்த கணவன், மனைவி மீண்டும் இணையக்கூடிய அமைப்பு உண்டாகும். தாமதமான திருமணங்கள் நடக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் அமைப்பு உண்டாகும்.
மேஷ ராசியினருக்கு வீடு, வாகன சேர்க்கை உண்டாகும். லாபங்கள் கிடைக்கக்கூடிய அமைப்பு உண்டாகும். வேலை, உத்தியோகம், வியாபாரம், தொழிலில் அருமையான முன்னேற்றம், லாபம் உண்டாகும். 3 ம் இடத்துக்கு குரு பகவான் பொருள் நன்மைகளைத் தருவார். பெரிய கெடுதல்கள் எதுவும் ஏற்படாது. விரைய சனி இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புண்டு.
குருப்பெயர்ச்சிக்குப் பிறகு 4 நாட்களில் நடைபெறக்கூடிய ராகு கேது பெயர்ச்சியின் மூலமாக 11 ஆம் இடத்துக்கு ராகு வந்து குருவின் பார்வை இருப்பதால் போட்டி, பந்தயங்கள், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். எல்லாவற்றிலும் நிம்மதி உண்டாகும் காலகட்டமாக இருக்கும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு அடிக்குமா ஜாக்பாட்?.. குருவின் அருள் கிடைக்குமா? -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications