குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு 12 வருடங்களில் இல்லாத அதிர்ஷ்டம்.. வேற லெவல் யோகம்

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சியானது இந்த ஆண்டில் திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் துலாம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான அதிர்ஷ்டங்கள் உண்டாகும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு சுபத்துவம் முழுமையாக பொருந்திய கிரகம்.

guru-peyarchi-2025-we-will-look-at-the-benefits-of-guru-peyarchi-for-thulam-people-and-the-deities

குருவுடைய ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மிதுனம் என்பது குருவுக்கு பாதகத்தை கொடுக்கக் கூடியவர். ஜென்மத்தில் மிதுனத்துக்கு குரு வருகிறார். குருவுடைய வீடான மீனத்தில் சனி ஏற்கனவே குடியிருக்கிறார். இப்போது பெயர்ந்திருக்கும் ராகு கும்பத்தில் வரக்கூடிய அமைப்பு. சிம்மத்தில் கேது இருக்கிறார். இதை வைத்து தான் குருப்பெயர்ச்சியின் பலன் கணக்கிடப்படுகிறது.

குருவுக்கு சிறப்பு பார்வையாக 5, 9, சமசப்த பார்வையாக 7 ஆம் பாதம் உள்ளது. குரு பார்வை படக்கூடிய வீடுகளுக்கெல்லாம் விமோசனம் உண்டாகும். அந்த வகையில், துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்கு விமோசனம் கிடைக்கும். குறிப்பாக, துலாம், கும்ப ராசிக்காரர்களுக்கு மொத்த பாவ விமோசனமும் கிடைக்கப் போகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் துலாம் ராசிக்காரர்களுக்கான நற்பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

துலாம் குருப்பெயர்ச்சி பலன்கள்

துலாம் ராசிக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் மிகப்பெரிய ஏற்றம் கிடைக்கப் போகிறது. குரு பகவான் நேரடியாக உங்கள் ஜென்ம ராசியை பார்க்கிறார். திருமணம் ஆகாத துலாம் ராசியினரின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறும். உங்கள் குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு இரண்டிலும் நல்லது நடக்கும்.

குழந்தை

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரர்களிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். குரு பகவான் ஒன்பதாம் இடத்தில் இருந்து சிறப்பான பலன்களை கொடுப்பார். மேலும், ஏற்கனவே ராகு பகவான் ஐந்தாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். அதுவும் நல்ல பலன்களை கொடுக்கும்.

யோகம்

உங்களின் நீண்ட கால மனக்கவலைகள் நீங்கும். உத்யோகம், தொழில் என்று எல்லாவற்றிலும் எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கும். இறங்கிய காரியங்களில் வெற்றிகள் குவியும். பணவரவு மிகவும் திருப்தியாக இருக்கும். பொருளாதாரம் உயர்ந்து, வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிப்பதற்கான யோகம் உண்டாகும்.

புகழ்

நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும். உங்களின் பெயர், புகழ் அதிகரிக்கும். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். அவமானத்தால் வீட்டை விட்டு, ஊரை விட்டு சென்றவர்கள் மீண்டும் திரும்பி நல்ல பெயர் சம்பாதிப்பார்கள். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். புதிய, வண்டி, வாகனம் மாற்றம் இருக்கும். எதிரிகள் அமைதியாவார்கள்.

உத்யோகம்

உத்யோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். ஐடி, ஜவுளி, மளிகை, ஹோட்டல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு லாபம் பல மடங்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் கைக்கூடும். வாழ்க்கை துணையால் ஆதாயம் உண்டு. 12 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இந்த அமைப்பு உருவாகும். சனி உச்சமாக இருப்பதால் அதிலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

பரிகாரம்

சனி பகவான் ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் கடன் பிரச்னை இருக்கும். பெண்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக அனைவருமே முதுகு தண்டுவடம், முட்டி சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க வேண்டும். குலதெய்வ வழிபாடு நல்ல பலன்களை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+