Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குருப்பெயர்ச்சி: பணம், அதிர்ஷ்டம், டாப் கிளாஸ் யோகம் பெறும் 5 ராசியினர்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி பலன்: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் ஐந்து ராசியினருக்கு குரு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கப் போகிறது. எந்தெந்த ராசியினர் நற்பலன்கள் மற்றும் அதிர்ஷ்டங்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டு குருப்பெயர்ச்சியானது மே 14 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷபத்தில் இருந்து குரு பகவான் மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம். குரு பகவான் தனது சொந்த வீட்டையே பார்ப்பது தான் இந்த குருப்பெயர்ச்சியில் விசேஷம்.

Guru peyarchi lucky zodiac signs

இந்த குருப்பெயர்ச்சியில் அதிர்ஷ்டம், பொருளாதாரம், செல்வம், உயர்வு என அனைத்து விதமான நற்பலன்களையும் 5 ராசிகள் பெறப் போகின்றன. அந்த வகையில், எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்ட பலன்களைப் பெறப் போகின்றனர் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

ரிஷபம்

குருப்பெயர்ச்சியில் யோக பலன்களைப் பெறுவதில் முதன்மையான ராசி ரிஷபம். ரிஷபத்துக்கு இனி அதிர்ஷ்ட காலமாக இருக்கும். உங்கள் ராசியில் குரு பயணிப்பதால் கடினமாக உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி ஸ்மார்ட் ஒர்க் செய்வீர்கள். அதில் வெற்றியையும் காண்பீர்கள். திருமண யோகம் உண்டாகும். மரண பயம் பரிபூரணமாக நீங்கும். மன அமைதி உண்டாகும். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவீர்கள்.

நீண்ட நாட்களாக நோய் நொடியுடன் இருந்தவர்களுக்கு உரிய மருத்துவம் கிடைக்கும். இரண்டாவது சொத்து வாங்குவதற்கான யோகம் உண்டாகும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சேமிப்பை அதிகரிப்பீர்கள். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். ரிஷபத்துக்கு 2 ஆம் இடத்தில் வரும் குரு 8 ஆம் இடத்தையும், 6, 10 ஆம் இடத்தையும் பார்ப்பதால் இரண்டு வருமானம், இரண்டாவது சொத்து, திடீர் அதிர்ஷ்டம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாடு, வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு, பதவி உயர்வில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். விற்க முடியாத நிலத்தை அதிக லாபத்துடன் விற்கும் காலகட்டமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் தெய்வத்தின் பரிபூரண ஆசிர்வாதம் உண்டாகும். ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் எதிரிகள் தொல்லை நீங்கும். கடன்களை அடைப்பீர்கள்.

துலாம்

குருப்பெயர்ச்சியில் யோக பலன்களைப் பெறுவதில் 3 ஆம் ராசி சிம்ம ராசி. 1, 3, 5, 9 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் முயர்சிகளில் அதிர்ஷ்டம் உண்டாகும். தெய்வத்தின் அனுகூலம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். 9 இல் குரு வருவதால் உங்களுடைய வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருக்கும். வேலை வேலை என்று ஓடிக் கொண்டே, முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள். வளர்ச்சியை நோக்கி பயணிப்பீர்கள்.

பொருளாதாரம், பணம், சேமிப்பு எல்லாவற்றிலும் குருவின் ஆசிர்வாதம் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறைகள் கைகூடி வரும். தந்தையாரின் உடல் நிலையில் உள்ள பிரச்சனை, பூர்வீக சொத்துகளில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். மன நிறைவான காலகட்டமாக இருக்கும்.

சிம்மம்

குருப்பெயர்ச்சியில் யோக பலன்களைப் பெறுவதில் 2 ஆம் ராசி சிம்ம ராசி. அஷ்டம சனி இருப்பதால் அச்சப்படத் தேவையில்லை. நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள். தைரியத்தை குரு கொடுப்பார். தைரியம், வீரியம் உண்டாகும். திருமண யோகம், புத்திர பாக்கியம் உண்டாகும். இடமாற்றங்கள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

புத்தி, மனதில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி குருவின் பூரண அருளும், நன்மையும் உண்டாகும். 9 கிரகங்களில் இயற்கை சுபர் எனும் குரு பார்வை இருப்பதால் விடுதலை உணர்வைப் பெறுவீர்கள். குழந்தைகள் கல்வி மாற்றம், இடமாற்றம், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

3 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் ஆவணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். குலதெய்வ கோயிலை புனரமைப்பது, சீரமைப்பது போன்ற யோகம் உண்டாகும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வது, குலதெய்வ வழிபாடு, தீர்த்தங்கள் நீராடுவது, தூர தேச கோயில்களில் வழிபாடு செய்யும் யோகம் உண்டாகும்.

தனுசு

குருப்பெயர்ச்சியில் யோக பலன்களைப் பெறுவதில் 4 ஆம் ராசி சிம்ம ராசி.தனுசு ராசிக்கு குருவின் பார்வை நேரடியாக உள்ளது. 11, 3, 7 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் திருமண யோகம், மறுமண யோகம் உண்டாகும். இலக்கை நோக்கி, லட்சியத்தை நோக்கி பயணிப்பீர்கள். முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். லாபம் லாபம் என அனைத்திலும் லாபம் காண்பீர்கள்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சம்மந்தியாகும் யோகம் உண்டாகும். லாபம் பன்மடங்கு உயரும். அதன் மூலமாக சந்தோஷம் உண்டாகும். பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றி, விஸ்வரூப வெற்றி அடைவீர்கள்.படிப்பிற்காக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். படிப்பு, தொழில், வியாபாரம், உத்தியோகம் அனைத்திலும் நற்பலன்கள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள்.

கும்பம்

குருப்பெயர்ச்சியில் யோக பலன்களைப் பரிபூரணமாகப் பெறுவதில் கும்ப ராசியும் ஒன்று. தெய்வத்தின் ஆசி, குலதெய்வ ஆசி, இஷ்ட தெய்வத்தின் ஆசி எப்போதுமே உங்களுக்கு இருக்கும். அதிர்ஷ்டங்கள் இனி தேடி வரும். 5 ஆம் இடத்தில் உள்ள குரு 9 ஆம் இடத்தையும், 11 ஆம் இடத்தையும் பார்ப்பதால் மகா தன யோகங்கள் உண்டாகும். அதிர்ஷ்டக் காற்று வீசும் இனி. தாய், தந்தை, முன்னோரின் செய்த புண்ணியத்தால் யோக பலன்களை அனுபவிக்கப் போகின்றீர்கள்.

குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தோடு ஒரு காரியத்தை தொடங்கினால் அதில் வளர்ச்சி பெறுவீர்கள். ஆலங்குடி குரு பகவானை வழிபடுவதால் அனைத்து விதமான நல்ல பலன்கள், அதிர்ஷ்டத்தையும் பெறுவீர்கள். இனிப்பு தானம் வழங்குவது நன்மை தரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+