2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை
Guru Peyarchi 2026: எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறும் இந்த காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 2026 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி அதிகாலை 1.50 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். கடகம் என்பது சந்திரனின் வீடு. சந்திரனின் வீட்டில் குரு உச்சம் பெறுகிறார்.

குருவுக்கு ஸ்தான பலத்தைவிட பார்வை பலம் மிகுந்த விசேஷமானது. விருச்சிகம், மகரம், மீன ராசியை பார்க்கும் குரு பகவானால் தனுசு ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது, வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு 7 ஆம் இடத்தில் இருந்த குரு அஷ்டமத்தில் வருகிறார். அஷ்டமத்தில் வரும் குரு என்பதால் அச்சம் தேவையில்லை. ராசியாதிபதியே குரு என்பதால் பெரிய பாதிப்புகள் இருக்காது. ரத்தபந்த உறவுகளுடன் இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். சோம்பலாக இருந்த அமைப்புகள் எல்லாம் நீங்கும். உடற்பயிற்சி மேற்கொள்வது, நடைபயிற்சி மேற்கொள்வது போன்றவற்றை மேற்கொள்வீர்கள்.
ஆரோக்கியம்
நண்பர்களை சந்திப்பது, உறவினர்கள் சந்திப்பது, உறவினர்கள் வீட்டுக்கு செல்வது, தூர பயணங்களை மேற்கொள்வது என அற்புதமான காலகட்டமாக இருக்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறக்கூடிய அற்புதமான காலகட்டம். ஆரோக்கியத்தில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். முதுகு தண்டுவடம், வயிறுப் பகுதியை பார்த்துக் கொள்ள வேண்டும்.
வளர்ப்பு பிராணி
தனம், குடும்பம், நல்லவை நடக்கும் யோகமான அமைப்பு. உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு ஏற்படும். குடும்பத்தில் அனுகூலம் ஏற்படும். புதிய வீடு வாங்குவது, வீடு கட்டுவது போன்ற யோகங்கள் உண்டாகும். வளர்ப்பு பிராணிகளை வாங்கி வளர்ப்பீர்கள். கால்நடைகளை வாங்கி வளர்ப்பீர்கள். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்த பசு மாடுகளை வாங்கி வளர்ப்பீர்கள்.
வழிபாடு
பெரிய அளவுக்கு அனுகூலம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு நிறைய நன்மைகளச் செய்வீர்கள். உறவுகளுக்கு செய்ய வேண்டிய விஷயங்களை செய்வீர்கள். ஆச்சரியமான முன்னேற்றம், அனுகூலம் ஏற்படும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடைபெறும் அமைப்பு உள்ளது. பழனி முருகனை வழிபாடு செய்து, விபூதியை தினந்தோறும் அணிவது, வீட்டில் ராஜ அலங்காரத்தில் இருக்கும் முருகன் படத்திற்கு பூஜை செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications