குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் கொட்டும் பணம்.. மிதுன ராசிக்கு குருப்பெயர்ச்சியில் ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

Guru Peyarchi 2026: குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், மிதுன ராசியினருக்கு இது எந்த அளவில் அதிர்ஷ்டத்தையும், சவால்களையும் தரப் போகிறது என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி, குரு, ராகு கேது ஆகிய கிரகங்களே ஒருவரின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு வருடத்திற்கு ஒருமுறை குருப்பெயர்ச்சியும், இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி, ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது.

guru-peyarchi-2026-what-kind-of-benefits-will-get-mithunam-rasi-during-this-guru-peyarchi

குரு பகவானுக்கு இயற்கை சுபர் என்று பெயர். ஒருவரின் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க குரு பகவானே காரணமாக இருப்பார். குருப்பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றாகும். குரு (வியாழன்) ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதால், 12 ராசிகளுக்கும் பல்வேறு நல்ல மற்றும் சவாலான பலன்களை ஏற்படுத்தும். கல்வி, வேலை, திருமணம், பணவரவு போன்ற முக்கிய வாழ்க்கை அம்சங்களில் குருவின் இடமாற்றம் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.

அந்த வகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் குருப்பெயர்ச்சியானது மிதுன ராசியினருக்கு என்ன பலன்களை கொடுக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மிதுனம் (Mithunam Rasi Palan)

மிதுனம் ராசியினர் கடந்த 5 ஆண்டுகளாக பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். குருப்பெயர்ச்சியானது ஜூன் மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு பகவான் உச்சமாகப் போகிறார். கடந்த 5 ஆண்டுகளாக நீங்கள் பட்ட அவமானங்கள், சரியாக சம்பாதிக்க முடியாத தன்மை, ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாமே பரிபூரணமாக நீங்கும்.

முன்னேற்றம்

வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும். குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் உச்சமடைவதால் இதுவரை இருந்து வந்த பண தட்டுப்பாடுகள் விலகும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தடைகள் எல்லாம் விலகும். கடன் பிரச்சனைகள் எல்லாம் தீரும் நல்ல காலகட்டம். கடனை அடைக்கும் முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டு.

பணவரவு

புதிதாக நிறைய பணம் கையில் வந்து சேரும். குடும்பத்திற்கான தேவை, மனைவி, மகன், மகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தன வரவு நன்றாக இருக்கும் என்பதால் நீங்கள் நினைத்த மகிழ்ச்சியான வாழ்க்கை உருவாகும். மகனுக்கு படிப்பு, திருமணத்திற்கான பணம் கையில் இருக்கும்.

நோய்கள் விலகும்

குரு பகவான் குடும்ப ஸ்தானத்திற்கு வருவதால் குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். புலம்பல்கள் விலகி சந்தோஷமான பேச்சு ஏற்படும். குடும்பத்தார் அனைவரும் ஒத்துழைப்பு தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். 6 ஆவது ஸ்தானத்தில் குருவின் பார்வை படுவதால் நோய்கள் அனைத்தும் விலகும். சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். தொழிலில் இருந்து வந்த எதிரிகள் விலகுவார்கள்.

குரு பார்வை

பெயர், புகழ் கிடைக்கும். தடைகள், கண்டங்கள் அனைத்தும் விலகும் நல்ல காலகட்டமாக இருக்கும். தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். கடந்த காலங்களில் செய்த உழைப்புக்கு பலனை அடைவீர்கள். அந்த பலன் மூலம் புகழ் அடைவீர்கள். நீங்கள் இருக்கும் துறைகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். இருக்கும் துறையில் புகழ் கிடைக்கும்.

வழிபாடு

நிதி சார்ந்த முன்னேற்றம், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். திருமண யோகம் உண்டாகும். பழமுதிர்சோலை முருகப் பெருமானை வழிபாடு செய்வது எல்லா நன்மைகளும் அள்ளிக் கொடுக்கும். மற்றவர்கள் உங்களை மதிக்கும் தன்மை ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+