குருப்பெயர்ச்சி: ராஜயோகம் பெறும் 3 ராசியினர் யார் தெரியுமா?.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் கும்பம் ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள்.

Guru Peyarchi Rasi palangal

அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் குருவின் பார்வையால் சில ராசிக்காரர்கள் கோடி நன்மைகளைப் பெறப் போகின்றனர். ராஜயோகம் பெறும் ராசியினர் யார், எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம்: துலாம்: இந்த குருப்பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலகட்டமாக இருக்கும். துலாம் ராசிக்கு பாக்கிய ஸ்தானம் எனும் மிதுனத்துக்கு குரு வரப் போகிறார். படிப்பு, உத்தியோகம், குழந்தைகள், குடும்பம் விஷயத்தில் நல்ல யோகம் உண்டாகும். சமுதாயத்தில் நல்ல மதிப்பையும், நல்ல பெயரையும் பெறுவீர்கள். திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன்களை அடைத்து முடிப்பீர்கள்,

சொந்த வீடு வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டு. 9 ஆம் இடம் பாக்கிய ஸ்தானத்துக்கு போவதால் இரண்டாம் திருமணம் நடக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சந்தோஷம். பொருளாதாரம் இரண்டிலும் 85 சதவீத நன்மைகள் கிடைக்கும். பெற்றோருக்கு பாத பூஜை செய்வது நல்ல பலன்களைத் தரும். கிருஷ்ணர் கோயில், பெருமாள் கோயில்களில் நெய் தானம் செய்வது அமோகமான பலன்களைத் தரும். பார்த்தசாராதி சுவாமி கோயில், உலகளந்த பெருமாள் கோயில், உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணன், குருவாயூர் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது.

விருச்சிகம்: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்தில் குரு அமருவதால் சில பிரச்சனைகளை சந்திக்கப் போகிறீர்கள். குழந்தைகள் உங்களுடைய எதிர்க்கும் சூழல் உருவாகும். குழந்தைகளால் அவதி ஏற்படும். குழந்தைகளால் திடீர் செலவு ஏற்படும். பத்திரங்கள் பதிவு, வீடு, நிலம் புதிதாக வாங்கும்போது தாய் பத்திரத்தை சரியாகப் பார்த்துக் கொள்வது நல்லது. அடிவயிறு, உஷ்ணம், கழிவுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக சிறிய அறுவை சிகிச்சை செய்யும் வாய்ப்பு உள்ளது. அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதற்கான சூழல் உண்டாகும்.

8 ஆம் இடத்தில் இருக்கும் குருவின் பார்வையால் திடீர் பண வரவுகள் உண்டாகும். காப்பீடு மூலமாக பணம் வரும். பெரிய மனிதர்கள் உங்களுக்கு உதவும் சூழல் உண்டாகும். உயில், சொத்துகள், திடீர் அதிர்ஷ்டங்கள் மூலமாக பண வரவு உண்டாகும். எதிர்பாராமல் வீட்டை விற்று பெரிய கடன்களை முடித்து நிம்மதி பெரும் சூழல் உண்டாகும். தூக்கமின்மை பிரச்சனை சரியாகும். நிம்மதியாக தூங்குவீர்கள். சுப காரியங்கள், நல்ல விஷயங்கள் நடக்கும். பணவரவு உண்டாகும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் பெரிய அளவில் வெற்றியைக் கொடுக்கும். வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு மிதுனத்தில் குரு அமர்ந்துள்ளதால் பல பேருக்கு திருமணத்திற்கான யோகம் உண்டாகும். நிறைய பேர் புதிய தொழிலைத் தொடங்குவார்கள். குரு லாப ஸ்தானத்தில் அமருவதால் பெண்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். லாபங்கள் நிறைய கொடுக்கும். மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கும். கணவன், மனைவி பெயரில் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். மூன்றாம் இடத்துக்கு ராகு வந்து அமர்வதால் பேச்சு, எண்ணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வாழ்க்கை துணை ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இரண்டாவது குழந்தை யோகம் உண்டாகும். பெரிய பணம் வந்து உங்களுடைய கடனை அடைக்கும் சூழல் உண்டாகும். குரு பார்வை இருப்பதால் கடனை அடைப்பீர்கள். கையில் இருப்பு பணம் அதிகரிக்கும். மீடியா துறையில் இருப்பவர்கள், போட்டோகிராஃபர்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், பிராண்டிங் செய்பவர்களுக்கு அமோகமான காலகட்டமாக இருக்கும். இந்த குருப்பெயர்ச்சியில் வராத அனைத்து நல்ல பலன்களும் உங்களைத் தேடி வரும் என்பது பெரிய அதிர்ஷ்டமாகும். பொருளாதாரத்தில் 90 சதவீதம் ஏற்றம் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+