குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு லைஃப்டைம் செட்டில்மெண்ட்.. இனி சொந்த வீடு, வாகனம்னு ஜொலிக்க போறீங்க

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் துலாம் ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

Guru peyarchi Thulam

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பு பார்வை இருக்கிறது. அதிர்ஷ்டமான காலகட்டமாக இருக்கும். துலாம் ராசிக்கு பாக்கிய ஸ்தானம் எனும் மிதுனத்துக்கு குரு வரப் போகிறார். புதன் வீட்டில் இருக்கக்கூடிய குரு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வாவின் அனுக்கிரகம் பரிபூரணமாக இருக்கக்கூடிய ராசி துலாம். குரு பார்வை கோடி நன்மையைப் பெறப் போகின்றீர்கள்.

குரு பார்வை உங்கள் ராசி லக்னத்தின் மேல் விழுகிறது. 3 ஆம் இடம், 5 ஆம் இடத்தின் மேல் குரு பார்வை விழுவதால் அனைத்து விதமான நல்ல பலன்களையும் பெறுவீர்கள். படிப்பு, உத்தியோகம், குழந்தைகள், குடும்பம் விஷயத்தில் நல்ல யோகம் உண்டாகும். சமுதாயத்தில் நல்ல மதிப்பையும், நல்ல பெயரையும் பெறுவீர்கள்., கடன்களை அடைப்பீர்கள். வாகனம் வாங்குவது, வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

புதிய குடும்பம் அமையும். வெளியூரில் இருந்து நற்செய்தி வரும். தெய்வத்தையொட்டி நல்ல சுப நிகழ்வுகள் நடக்கும். திருமணம், குழந்தை பாக்கியம், மன சந்தோஷம் உண்டாகும். அந்நியோன்யம் பெருகும். நிறைய பேருக்கு யோகம் உண்டாகும். 9 ஆம் இடம் பாக்கிய ஸ்தானத்துக்கு போவதால் இரண்டாம் திருமணம் நடக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

இளைய சகோதரன், சகோதரி வகையில் நல்ல செய்திகள் வந்து சேரும். துலாம் ராசிக்காரர்களுக்கு காசு பணம் தொடர்பான சந்தோஷத்தை விட வாழ்க்கையில் திருப்தியும், சந்தோஷமும் உண்டாகும். துலாம் ராசி நண்பர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் காலகட்டமாக இருக்கும். சந்தோஷம். பொருளாதாரம் இரண்டிலும் 85 சதவீத நன்மைகள் கிடைக்கும்.

செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?:- பெற்றோருக்கு பாத பூஜை செய்வது நல்ல பலன்களைத் தரும். 9 ஆம் இடம் பாக்கிய ஸ்தானம் புதனின் வீட்டில் குரு அமர்ந்துள்ளதால் கோவில்களுக்குச் சென்று தானம் செய்வது நல்லது. கிருஷ்ணர் கோயில், பெருமாள் கோயில்களில் நெய் தானம் செய்வது அமோகமான பலன்களைத் தரும். பார்த்தசாராதி சுவாமி கோயில், உலகளந்த பெருமாள் கோயில், உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணன், குருவாயூர் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது.

சந்தோஷ ரீதியாக 100க்கு 85 சதவீதம் நன்றாக இருக்கும், பொருளாதாரத்தில் 85 சதவீதமான ஏற்றம் உண்டாகும். மகிழ்ச்சி, நிம்மதி உண்டாகும் அமோகமான காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+