மகர ராசிக்கு குறி வெச்சா இரை விழும் காலம்.. பிரம்மாண்ட வீடு கட்டும் யோகம்.. அதிர்ஷ்டம் கொட்டும்
குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மகர ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தை மாற்றும். அந்த வகையில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் தரக்கூடும்.

குரு சுபத்துவம் முழுமையாக பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள்.
அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் மகர ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு பணம், பொருளாதாரத்துக்கு எந்தவிதமான பஞ்சமும் இருக்காது. 6 ஆம் இடத்தில் குரு போவதால் நிறுவனத்தில் நல்ல மரியாதை கிடைக்கும், சலுகைகள் கிடைக்கும். ப்ரோஜக்ட் லெவலில் இருப்பவர்களுக்கு சீனியர் மேனேஜ்மென்ட் போன்ற பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
பெரிய வீடு கட்டக் கூடிய யோகம் உண்டாகும். மேல் மாடி கட்டுவீர்கள். கடன் வாங்கி இதுபோன்ற விஷயங்களை செய்வீர்கள். கடன் வாங்கி செல்வதும் நல்லது தான். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மாத்திரை மருந்துகள் சாப்பிடுவதற்கான வாய்ப்பு உண்டாகும். 6 ஆம் இடத்துக்கு குரு வருவதால் பிள்ளைகளை பகைவர்களாகப் பார்க்கக் கூடாது. பிள்ளைகள் விஷயத்தில் சிறு சிறு அதிருப்தி உண்டாகும்.
கவனம்
பிள்ளைகள் மூலமாக பண வருவாய் வருவதற்கான வாய்ப்புள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் தீரும். குடும்பத்துக்கு சிறு சிறு பிரச்சனைகள் வரும். கணவருக்கு இடமாற்றம் உண்டாகும். குடும்பம் ஒரு பகுதியிலும், நீங்கள் ஒரு இருக்கக்கூடிய சூழல் உண்டாகும். அஜீரண கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
குருவின் பார்வை
குருவின் பார்வை பலத்தால் நல்ல யோகத்தைப் பெறுவீர்கள். விரைய ஸ்தானத்துக்கு பார்வை பலம், 10, 2 ஆம் இடத்துக்கு பார்வை பலம் இருப்பதால் சிறு சிறு கடன்களை அடைத்து முடிப்பீர்கள். நிம்மதியான தூக்கம் வரும். எதை தொட்டாலும் விரையம், பிரச்சனை என்ற காலம் விலகும். இனி மிகச்சரியாக இருக்கக்கூடிய காலகட்டம்.
வீடு கட்டும் யோகம்
பிரம்மாண்டமான வீடு கட்டக்கூடிய யோகம், புதிய முதலீடுகள் செய்யும் யோகம் உண்டாகும். பற்கள் பிரச்சனை சரியாகும். நிறைய பேருக்கு கண்ணாடி மாற்றக்கூடிய வாய்ப்பு உண்டாகும். தலை மூக்கு முகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். வாழ்க்கை துணைக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உண்டு. பொருளாதாரத்தில் நிறைய மாற்றங்கள் உண்டாகும். பண வரவுக்குப் பிரச்சனை இருக்காது. உறவுகள் விஷயத்தில் மட்டும் கவனம் தேவை.
பெண்கள்
எதுவாக இருந்தாலும் இனி தனித்து நின்று செயல்படக்கூடிய நிர்வாகத் திறன் அதிகரிக்கும். 7க்கு 6 ஆம் இடம் என்பதால் கணவன், மனைவிக்குள் பிரச்சனையாக இருக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. திட்டமிட்டு ஒரு காரியத்தை செயல்படுத்தி வெற்றி அடைவீர்கள். போட்டித் தேர்வுகளில் அபாரமான வெற்றி உண்டாகும். நீட், ஐஐடி, ஐஏஎம் ஜெயிக்கக் கூடிய பிராப்தம் உண்டாகும். மாணவர்களுக்கு பொற்காலமாக இருக்கும்.
பரிகாரம், வழிபாடு
நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு வடமாலை சாற்றுவது நல்லது.
மதிப்பெண்
சந்தோஷ ரீதியாக 70 சதவீதமும், பொருளாதார ரீதியாக 90 சதவீத நன்மைகளையும் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications