குரு பெயர்ச்சி பலன் 2023: விருச்சிக ராசிக்காரர்கள் விதையாய் விழுந்து வீறு கொண்டு எழப்போகிறீர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விருச்சிக ராசிக்காரர்களே..குரு பகவான் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் சிறப்படையும். குரு பார்வை பத்து, பனிரெண்டு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் மீது விழுகிறது. எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். உங்களின் இலக்கை நீங்கள் அடைவீர்கள். எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள்.

ஆறாம் வீட்டில் ஏற்கனவே ராகு, சூரியன், புதன் இருக்க குருவும் கூட்டணி சேருகிறார். ஆறாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் நன்மைதான். உங்களது எதிரி யார் என்று அடையாளம் தெரிந்தது. நல்ல காலம் தொடங்கி விட்டது. உங்கள் உடம்பில் இருந்த வியாதிகள் வெளியே தெரியப்போகிறது. நோய்கள் குணமடையும். என்ன நோய் என்று வெளியே தெரியவரும்.

Guru Peyarchi palan 2023: Viruchigam Rasi Jupiter transit effects and remedies

குரு எந்த ஸ்தானத்தில் அமர்கிறாரோ அந்த ஸ்தானத்தின் கெடுதல்களை நீக்குவார். நிரந்தரமான வேலை கிடைக்கும். உங்களுடைய பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வருமானம் கொட்டப்போகுது. உங்க வேலைக்கு ஏற்ற நல்ல வருமானம் கிடைக்கும். உங்களுக்கு புரமோசனும் கிடைக்கப்போகும் உயர்வான காலகட்டம். துன்பங்கள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

தொழில் தொடங்க கடன் உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சியடைய பண உதவி கிடைக்கும். குரு பகவான் கடன் வாங்க வைப்பார். வயிறு பிரச்சினையை ஏற்படுத்துவார். எதிரிகளை வெல்லும் ஆற்றலைத் தருவார் குருபகவான். ஒருபக்கம் கடன் வாங்கினாலும் இன்னொரு பக்கம் வருமானத்தை அதிகம் கொடுப்பார். அதன் மூலம் கடன் அடையும். குரு பகவான் அயன சயன ஸ்தானத்தை பார்ப்பதால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்ப உறவுகள் உற்சாகமடையும் காரணம் குடும்ப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைகள் விலகும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. வெளிநாடு சென்று படிக்கலாம் கல்விக்கான உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சங்கடங்கள் விலக பைரவரை வணங்குங்கள் கஷ்டங்கள் வந்தாலும் நன்மைகள் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+