குரு பெயர்ச்சி பலன் 2024: அரசு வேலை.. புரமோசனும் சம்பள உயர்வும் எந்த ராசிக்காரருக்கு கிடைக்கும்?
சென்னை: மே மாதம் குரு பெயர்ச்சி நிகழப்போகிறது 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்கு செல்லப்போகும் குரு பகவானால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு அரசு வேலையும் வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். சுப விரைய செலவுகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள். வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். குருவின் அனுகிரகத்தினால் பாதிப்புகள் நீங்கும். தென் திட்டை குருபகவானை தரிசனம் செய்யலாம். குல தெய்வ தரிசனம் குழப்பத்தை தீர்க்கும்.

விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசிக்கு வரப்போகும் குரு பகவானால் தொட்டது துலங்கும். குரு பகவான் ஏழாம் வீட்டிற்கு செல்லப்போவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். குரு பகவான் பார்வையால் உங்களுக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் லாபமும் வருமானமும் அதிகரிக்கும். புரமோசனும் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் வேலை இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மே மாதத்திற்குப் பிறகு புரமோசனுடன் கூடிய நல்ல சம்பளம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் சொந்த தொழில் தொடங்குவீர்கள். குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடு, பத்தாம் வீடு, 12ஆம் வீட்டினை பார்வையிடுகிறார். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.
மகரம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்லப்போவதால் குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் குபேர யோகம் தேடி வரப்போகிறது. தற்போது வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். கவுரவப் பதவிகள் தேடி வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
கும்பம்: சனி பகவனை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். சுக ஸ்தான குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு எட்டு, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறகும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். தொழில் ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மீனம்: ராசிநாதன் குருபகவான் மூன்றாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். திருமண தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் குறையும். அசையும் அசையாக சொத்துக்கள் வாங்கலாம். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு 7,9,11ஆம் வீடுகளின் மீது விழுவதால் உடலில் இருந்த நோய்கள் நீங்கும். நரம்பு பிரச்சினை உள்ளவர்கள் தூக்கத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம் கவனம் தேவை. குடும்ப பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications