இன்று நடந்த குரு பெயர்ச்சி முதல் என்ன ஆகும்? துலாம் ராசிக்கான பலன்கள்!
சென்னை: ஜோதிடத்தில் கால சக்கரத்தில் இரண்டாவதாக இருக்கும் சுக்கிரனின் வீடான ரிஷப ராசிக்கு இன்று சென்றுள்ளார் குரு. துலாம் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி மூலம் என்ன மாதிரியான மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்று பார்க்கலாம்.
மேஷ ராசியில் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இன்று நடந்த இந்த மாற்றத்தால் பல ராசிதாரர்களின் வாழ்க்கை அப்படியே மாற போகிறது. குரு பெயர்ச்சி பொதுவாக பல விதமான மாற்றங்களை பல ராசிகர்களுக்கு ஏற்படுத்தும். சிலருக்கு வாழ்க்கையை அடியோடு மாற்றும் குணம் கொண்டது குரு பெயர்ச்சி.

கால சக்கரத்தில் இரண்டாவதாக இருக்கும் சுக்கிரனின் வீடான ரிஷப ராசிக்கு செல்கிறார் குரு. ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். அதில் குரு பெயர்ச்சியும் ஒன்று.
என்ன மாற்றம் ஏற்படும்: குரு பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம் பல ராசிகளுக்கு வாழ்க்கை அப்படியே பாசிட்டிவாக மாறிய சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் துலாம் ராசிக்கு குரு பெயர்ச்சி மூலம் என்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்று பார்க்கலாம்.
சில நல்ல விஷயங்கள்: குரு உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் வருகிறார். குரு உங்களை பார்க்காமல் மறைகிறார் என்பதால் ஒரு சில நல்ல விஷயங்கள் நடக்கும்.
அதாவது வெளிநாடு போகும் வாய்ப்பு கிடைக்கும்.
ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
குடும்பத்தில் நிலவி வந்த மனஸ்தாபங்கள், பிரச்சனைகள் குறையும்.
கணவன் மனைவி அந்யோனியம் அதிகரிக்கும்.
திருமணம் கைகூடும்.
வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு.
முகம் பொலிவு பெறும் .
குரு பெயர்ச்சி ஸ்பீட் பிரேக்: ஆனால் குரு பெயர்ச்சி இந்த முறை உங்களுக்கு நல்லதை விட கெட்டதையே கொஞ்சம் அதிகம் கொடுக்கும். கால சக்கரத்தில் இரண்டாவதாக இருக்கும் சுக்கிரனின் வீடான ரிஷப ராசிக்கு செல்கிறார் குரு. இதற்கு முன் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருந்தார் குரு. இப்போது 8ம் இடத்தில இருக்கிறார். துலாம் ராசிதாரர்களுக்கு பொதுவாகவே குரு பிரச்சனைகளை தரும்.
அந்த வகையில் பின்வரும் பிரச்சனைகள் துலாம் ராசிகளுக்கு வரலாம்.
குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள்.
போக்குவரத்தில் கவனமாக இருங்கள். விபத்து ஏற்படும் வாய்ப்புகள் கூட உள்ளதால் கவனமாக இருக்கவும்.
பங்காளிகள் உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். பண தேவை அதிகம் இருக்கும். கையில் காசு நிற்காது. பணம் செலவாகிக்கொண்டு இருக்கும்.
யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். நீங்கள் கொடுக்கும் வாக்கு உங்களுக்கே எதிராக திரும்பலாம்.
நிலம் வாங்குவது, வீடு வாங்குவதில் கவனம் செலுத்தவும். தவறாக முடியலாம்.
வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம்.
பரிகாரம்: ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று ஒரு முறை பூஜை செய்து வழிபடுங்கள். பழனி இடும்பன் கோவிலுக்கும் செல்லுங்கள்.
-
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றம்! 2026ல் அதிர்ஷ்டம் வருமா? -
ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி 2026: கடகத்தில் வரும் குரு.. அள்ளிக் கொடுக்கும் யோகம் -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications