Guru Peyarchi: குருவின் அருளால் தப்பிக்கப் போகும் கன்னி ராசி.. பொறுமை முக்கியம் மக்களே
Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் வரை மிதுன ராசியிலும், அதற்குப் பிறகு கடக ராசிக்கும் குரு பகவான் மாறுகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடக ராசிக்கே குரு வருகிறார் என்பது தான் சிறப்பு. சனி பகவானால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு விடுதலை கொடுக்கக் கூடிய காலகட்டமாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம் [Guru Peyarchi].
கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசிக்காரர்களுக்கு கடன் சுமைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருவீர்கள். கடனை அடைப்பதற்கும், திரும்ப கடன் வாங்காமல் இருப்பதற்குமான அமைப்பு ஏற்படும். அப்படியே கடன் வந்தாலும் பெரிய கடனுக்காக காத்திருப்பவர்களுக்கு லோன் கண்டிப்பாக கிடைக்கும். அதனை நல்லபடியாக பயன்படுத்தினால் பிரச்சனைகளில் இருந்து விடுபடக் கூடிய காலகட்டமாக இருக்கும்.
வளர்ச்சி
கடந்த இரண்டரை ஆண்டுகளாக படாத பாடு பட்டிருப்பீர்கள். அவமானம், அசிங்கத்தை சிலர் பட்டிருக்கும் சூழல் இருந்திருக்கும். யாரிடமும் பதில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்திருப்பீர்கள். நல்ல ஒரு தொடர்புகள் உருவாகும். நல்லபடியாக இந்த தொடர்புகளைப் பயன்படுத்தி அவசரப்படாமல் நிதானமாக செயல்பட்டால் வளர்ச்சி அற்புதமாக இருக்கும்.
குரு பகவான்
கன்னி ராசியினர் இந்த காலகட்டத்தில் தொழில் தொடங்கும் அமைப்பு இல்லை. பணத்தை பத்திரப்படுத்துவது, திறனை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்துவது நல்லது. உதாரணமாக டிரேடிங் உங்களுக்கு நன்றாக வரும். இருந்தாலும் அதில் அகலகால் வைக்காமல் இருப்பது நல்லது. குரு பகவான் எல்லா வளர்ச்சிகளையும் நிதானமாக கொடுக்கக் கூடியவர் என்பதால் படிப்படியான வளர்ச்சிகள் ஏற்படும்.
சாவல்கள்
உங்களுக்கு அடுத்த ஆண்டுக்குப் பிறகு தான் நல்ல காலகட்டமாக இருக்கும். பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய சூழல் ஏற்படும். மற்றவர்களிடம் எப்படி பேசுவது என்று பார்த்து பேசுவீர்கள். குருவைப் பொருத்தவரை பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதை விட சவால்களை எதிர்நோக்குவது நல்லது. அப்படி செய்தாலே பாதி பிரச்சனை உங்களுக்குத் தீர்ந்துவிடும்.
திருமண யோகம்
அக்டோபர் மாதம் முதல் உங்களுக்கு நன்றாக இருக்கும் என்பதால் அந்த காலகட்டத்தில் திருமணப் பேச்சுவார்த்தைகள், திருமண யோகம் ஏற்படும். ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. உங்கள் மீது நீங்கள் அக்கறை செலுத்த தொடங்குவது நல்லது. வம்பு வழக்குகளால் வரும் பெரிய தண்டனையில் இருந்து தப்பித்து சிறிய தண்டனைகளைப் பெறுவீர்கள்.
வார்த்தையில் கவனம்
வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டம். படபடப்புகள் அதிகரிக்கும் என்பதால் கவனம் தேவை. கன்னி ராசிக்கு வீடு, இடம் வாங்குவதற்கான பிளானிங் போடலாம். கடன் எதுவும் வாங்காமல் விரலுக்கு ஏற்ற வீக்கம் என்று செயல்படுவது நல்லது. எந்த விஷயங்களிலும் அவசரப்படாமல், நிதானமாக செயல்படுவது நல்லது. பண விஷயத்தில் தெளிவாக பேசிக் கொள்வது நல்லது. கடனை திருப்பிக் கொடுக்க முடியாவிட்டால் வாயை திறந்து அதுகுறித்த விளக்கத்தை சொல்லி விடுவது நல்லது. குவாஹாத்தியில் உள்ள குரு கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
-
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி 2026: கடகத்தில் வரும் குரு.. அள்ளிக் கொடுக்கும் யோகம் -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications