Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Guru Vakram: கன்னி ராசிக்கு குருவின் அருளால் இந்த மாற்றம் நிச்சயம்.. பண மழை கொட்டும்

Subscribe to Oneindia Tamil

குரு வக்கிரப் பெயர்ச்சி 2025: வரும் நவம்பர் 12 ஆம் தேதி மிதுன ராசியில் குரு வக்கிரமாகி கடகத்துக்குச் செல்கிறார். 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

குரு வக்கிரமாவது அவ்வளவு நன்மையான காலகட்டம் இல்லை. ஜாதகத்தில் இயல்பாகவே ஒரு சில கிரகங்கள் வக்கிரமாக இருக்கும். ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக நடக்க வேண்டிய பல நன்மைகள் நடக்கும். 2025 நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கப் போகிறார்.

guru-vakra-peyarchi-2025-what-kind-of-benefits-kanni-virgo-rasi-people-will-get-during-this-perio

மிதுன ராசியில் குரு வக்கிரமாக மாறுகிறார். அங்கிருந்து கடகத்துக்குச் சென்று அதிசாரமாக புனர்பூச நட்சத்திரத்திற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார். குரு பகவான் வக்கிரமாக மாறும்போது புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். 2027 மே மாதத்திற்குள் கார்டியோ தொடர்பான சிகிச்சையில் புரட்சி ஏற்படும். புதிய மருத்துவம் கண்டுபிடிக்கப்படும்.

குரு வக்கிரமாகும் இந்த காலகட்டத்தில் துலாம், தனுசு, கும்பம் ஆகிய 3 ராசிகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். மிகப்பெரிய நல்ல விஷயங்கள் நடக்கும். மிதுனம், கும்பம், தனுசு, துலாமில் கிரகம் வக்கிரமாக இருந்தால் நன்மை பயக்கும். இதே இடத்தில் சுய ஜாதகத்திலேயே சனி வக்கிரமாக இருந்தால் 100 சதவீதம் நன்மைகள் நடக்கும்.

இந்த குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கன்னி

கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்தவர்களுக்கு வேலை, தொழில்களில் இதுவரை இருந்து வந்த முடக்கடிகள், டென்ஷன்கள், அழுத்தங்கள் அனைத்தும் தீரும். கன்னி புதனுடைய வீடு, அங்கு குரு வக்கிரமாக அமருகிறார். தொழில் ஸ்தானம் 10 ஆம் இடத்தில் அமருவதால் நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங் துறையில் வேலை கிடைக்கும். எழுத்தாளர்களாகும் வாய்ப்பு உள்ளது.

தொழில்

கல்லூரிகளில் பேராசிரியர்கள், தோல் நிபுணத்துவம் சென்டரில் வேலை போன்றவை உண்டாகும். வேலையில் சூப்பரான இடமாற்றம் உண்டாகும். நிறைய பேருக்கு தொழிலுக்கான பெரிய லோன்கள், தொழிலை விரிவுபடுத்துவதற்கான கடன்கள் நவம்பர் மாதம் முதல் கிடைக்க ஆரம்பிக்கும். அற்புதமான வாழ்க்கை உங்களுக்காக காத்திருக்கும்.

ஆரோக்கியம்

பெரியவர்களின் உடல்நிலையில் அக்கறை செலுத்துவது நல்லது. நரம்புகள் பாதிப்பு, தோல் பிரச்சனை, கழுத்தில் பிரச்சனை, கொழுப்புக் கட்டிகள் தொடர்பான பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளது. விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு காலில் பாதிப்புகள் வரும் சூழல் உண்டு. உத்தியோகம், வியாபாரத்தில் அசுர வளர்ச்சி காணப்படும். யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டம்

எந்த வேலையை விட்டு நீங்கள் வேண்டாம் என்றால் தூக்கினார்களோ, அதே வேலையை நீங்கள் செய்யும் வாய்ப்புகள் வரும். குரு 10 ஆம் இடத்தில் வக்கிரமாகும் போது உங்களையே மீண்டும் அழைக்கும் யோகம் உண்டாகும். திரிகோணத்தில் ராகு இருப்பதால் நீங்கள் சம்பளங்களை நன்றாகவே கேட்டு பெறலாம். எந்த வேலையையும் தைரியமாக எடுத்துச் செய்யலாம்.

வழிபாடு

எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். மாமியாரின் உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது. சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீத நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். திருப்பதி ஏழுமலையானை வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+