Guru Vakram: குரு வக்கிரமாவதால் துலாம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கெட்டிமேள சத்தம் கன்ஃபார்ம்
குரு வக்கிரப் பெயர்ச்சி 2025: வரும் நவம்பர் 12 ஆம் தேதி மிதுன ராசியில் குரு வக்கிரமாகி கடகத்துக்குச் செல்கிறார். 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
குரு வக்கிரமாவது அவ்வளவு நன்மையான காலகட்டம் இல்லை. ஜாதகத்தில் இயல்பாகவே ஒரு சில கிரகங்கள் வக்கிரமாக இருக்கும். ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக நடக்க வேண்டிய பல நன்மைகள் நடக்கும். 2025 நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கப் போகிறார்.

மிதுன ராசியில் குரு வக்கிரமாக மாறுகிறார். அங்கிருந்து கடகத்துக்குச் சென்று அதிசாரமாக புனர்பூச நட்சத்திரத்திற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார். குரு பகவான் வக்கிரமாக மாறும்போது புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். 2027 மே மாதத்திற்குள் கார்டியோ தொடர்பான சிகிச்சையில் புரட்சி ஏற்படும். புதிய மருத்துவம் கண்டுபிடிக்கப்படும்.
குரு வக்கிரமாகும் இந்த காலகட்டத்தில் துலாம், தனுசு, கும்பம் ஆகிய 3 ராசிகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். மிகப்பெரிய நல்ல விஷயங்கள் நடக்கும். மிதுனம், கும்பம், தனுசு, துலாமில் கிரகம் வக்கிரமாக இருந்தால் நன்மை பயக்கும். இதே இடத்தில் சுய ஜாதகத்திலேயே சனி வக்கிரமாக இருந்தால் 100 சதவீதம் நன்மைகள் நடக்கும்.
இந்த குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்தவர்களுக்கு குரு வக்கிரமாவதால் உங்களுக்கு 100 சதவீதம் நன்மையைக் கொடுக்கும். ரிஷபமும், துலாமும் எதிர்தரப்பினர் என்பதால் நண்பராக இருக்கும் நபரை திருமணம் செய்யும் யோகம் உண்டாகும். வெளியூர் செல்ல முயற்சிப்பவர்கள் அதில் வெற்றியைக் காண்பீர்கள். விரும்பிய வீட்டை வாங்கி கிரகப் பிரவேஷம் செய்யும் பாக்கியம் உள்ளது.
சொத்துகள் கிடைக்கும்
வீட்டில் மங்கள காரியங்கள், மங்கள இசை கேட்கும் காலகட்டமாக இருக்கும். வீட்டில் பெரியவர்களுடன், அப்பாவுடன், சகோதரர்களுடன் இருக்கும் சண்டைகள், சொத்து தொடர்பான பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். வழக்குகள் முடியும். நிறைய பேருக்கு பூர்வீக சொத்துகள் வரும் யோகம் உண்டாகும். மன சங்கடங்கள் தீரும். அந்நியோன்யம் அதிகரிக்கும்.
திருமண யோகம்
இரண்டாவது திருமணத்துக்காக காத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக திருமண யோகம் உண்டாகும். அந்நியோன்யம் பெருகும். இடமாற்றங்களால் நல்ல நன்மைகள் ஏற்படும். எந்த முடிவை எடுத்தாலும் அதில் 100 சதவீத நேர்மறையான நன்மைகளைப் பெறுவீர்கள். அபரிமிதமான யோகமான காலகட்டம் என்பதால் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
வெளிநாட்டுக்கு பறப்பீங்க
நிறைய பேருக்கு வெளிநாட்டு யோகம், பாஸ்போர்ட், விசா கிளியர் யோகம் உண்டு. இடுப்பு, ஆசனவாய் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில பேருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பிறக்கும் குழந்தை தெய்வக் குழந்தையாக இருக்கும். பொருளாதாரம் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 90 சதவீத நன்மைகளைப் பெறுவீர்கள். வியாழக்கிழமை அன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நரசிம்மரை வழிபாடு செய்வது அற்புதமான நன்மைகளைக் கொடுக்கும். தேன் அல்லது நெய் தானமாகக் கொடுப்பகு அற்புதமான அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications