Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாழ்க்கை இனி ஓகோன்னு மாறும்.. நினைச்சது எல்லாம் நடக்க போகுது! கடக ராசி வக்ர பெயர்ச்சி பலன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடக ராசிக்கு குரு பகவானின் வக்ர பெயர்ச்சி காரணமாக என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும்.. அவர்கள் வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்று இங்கே பார்க்கலாம். சிலருக்கு வாழ்க்கையை அடியோடு மாற்றும் குணம் கொண்டது குரு பெயர்ச்சி. அந்த வகையில் உங்களுக்கு என்ன மாதிரியான மாற்றங்களை இந்த குரு பகவானின் வக்ர பெயர்ச்சி ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்கள்.. அதாவது பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். அந்த வகையில் கடக ராசிக்கான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

astrology guru peyarchi palan 2024 guru peyarchi 2024

குரு பெயர்ச்சி மற்றும் அதன் வக்ர பெயர்ச்சி பொதுவாக பல விதமான மாற்றங்களை பல ராசிகர்களுக்கு ஏற்படுத்தும். சிலருக்கு வாழ்க்கையை அடியோடு மாற்றும் குணம் கொண்டது குரு பெயர்ச்சி.

பலன்கள்: உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு. பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென 2- 3 மடங்கு சம்பளம் உயரும் வாய்ப்புகளும் கூட உண்டு.

உங்களுக்கு நிறைய பண வரவு இருக்கும். நீங்கள் எதிர்பார்த்து இருந்த இடங்களில் இருந்து எல்லாம் பணம் வரும். சமயங்களில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து கூட பணம் உங்களை தேடி வரும்.

நீண்ட நாட்களாக நீங்கள் கடன் கொடுத்து திரும்பி கொடுக்காதவர்கள் கூட இப்போது நீங்கள் கேட்காமல் பணம் கொடுப்பார்கள். ஆனால் இதனால் கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் இருக்கும். ஆனால் இந்த குரு பெயர்ச்சி காரணமாக சில கெட்ட விஷயங்களும் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. நிலம், வீடு வாங்கும் போது ஆவணங்களை சரி பார்க்கவும். விவகாரம் உள்ள நிலங்களை வாங்க வேண்டாம்.
யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் உங்களுக்கே எதிராக செல்லலாம். கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.

ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் எதையும் யோசித்து செய்யுங்கள். ரிஸ்க் வேண்டாம். நீங்கள் அதீதமாக வேலையில் ஈடுபடுபவர். நீங்கள் உறுதியானவர் மற்றும் சாதனைகளை கொண்டவர். பகல் கனவு காண வேண்டாம்.. செயல்களில் இறங்குங்கள் வெற்றி நிச்சயம். நீங்கள் ஓய்வு எடுப்பதை விரும்ப மாட்டீர்கள். பல ஊர்களுக்கு சென்று மக்களை பார்க்க விரும்புவீர்கள். காதல் மன்னன்.

தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். கணவருடன் உறவை பேணுவதில் சிக்கல் ஏற்படலாம்.

ஆரோக்கியத்திலும், குடும்பத்திலும் சிரமங்களை ஏற்படுத்தினாலும் தலைக்கு வந்தது எல்லாம் தலை பாகையோடு சென்றுவிடும்.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபடுவது நல்ல பலனை தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+