Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Guru Vakra Peyarchi: குரு வக்கிரப் பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கு கிடைக்கும் பலன்கள்.. முழு விவரம் இதோ

Subscribe to Oneindia Tamil

குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் நடக்கப் போகும் மாற்றங்கள், 12 ராசிகளுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு பகவான் வக்கிரமாக இருக்கிறார். குரு வக்கிரம் என்பது எல்லாமே இருப்பது போல இருக்கும் ஆனால் இருக்காது. குரு ஒரு ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் அவர்களுடைய வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும். நிறைய அரசியல்வாதிகள், கலைஞர்கள் குரு வக்கிரமாகும் போது, சனி வக்கிரமாகும் போது உச்சத்தை தொடுவார்கள்.

guru-vakra-peyarchi-palan-benefits-of-guru-vakra-peyarchi-for-12-zodiac-signs-here-are-the-full-de

நிறைய அரசியல் கட்சியினர் தொண்டர்களாக இருந்தவர்களுக்குப் பெரிய பதவி கிடைக்கும். முக்கிய புதிய முடிவுகளை எடுப்பீர்கள். முடிவுகள் மாற்றி எழுதப்படும். விதியை மாற்றி எழுதக்கூடிய சக்தி குரு வக்கிரப் பெயர்ச்சியாக இருக்கும்போது சிலருக்கு கிடைக்கும்.

திருமண யோகம்

சிலருக்கு திருமண யோகம், புதிய வேலை, புதிய முயற்சிகள் என நல்ல விஷயங்கள் அனைத்தும் குரு வக்கிரமாகும் போது நடக்கும். எந்த ஜாதகத்தில், குரு, சனி வக்கிரமாக இருக்கிறதோ அவர்கள் புரட்சி செய்து மேலே வருவார்கள். ஒரு இடத்தைக் காலி செய்துவிட்டு மேலே வருவார்கள். குரு என்பது பயங்கராமன புத்திக் கூர்மையைக் குறிக்கும். சாலையில் கிடப்பதை தங்கமாக மாற்றக்கூடிய யோகம் குரு வக்கிரமாக இருக்கக் கூடியவர்களுக்கு நடக்கும்.

இந்த 4 மாதங்களில் ஏற்படக் கூடிய குரு வக்கிர காலத்தில் யாருடைய ஜாதகங்களில் ஒரு கிரகம் வக்கிரமாக இருந்தாலும் நல்லது நடக்கும். போன ஜென்மத்தில் ஒரு ஆசை இருந்து நடக்காமல் தள்ளிப் போன விஷயங்கள், நீங்கள் விட்டு வைத்த ஆசைகள் ஆகியவற்றை அனுபவிக்காமல் இறந்த நீங்கள் அதனை அனுபவிப்பதற்காகவே பிறந்தவர்களாக இருப்பீர்கள். அந்த விஷயங்களை இந்த காலகட்டத்தில் அனுபவிப்பீர்கள்.

ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்

இந்த குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் 6 ராசிகளுக்கு பொற்காலமாக இருக்கும். முதலாவது ஜாக்பாட் அடிக்கும் ராசி என்றால் தனுசு ராசி. ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். கும்பம், துலாம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசிகளுக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். குரு ஜாதகத்தில் வக்கிரமாக இல்லையெனில் முடிவுகளைத் தப்பாக எடுக்கும் நிலைமை ஏற்படும்.

கவனமாக இருக்க வேண்டிய ராசியினர்

கருத்துகளைப் பார்த்து பகிர வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது. தர்மம், ஆன்மீகம், தெய்வம் என்றால் குரு. ஒரிஜினல் ஆவணங்கள் விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மகரம், விருச்சிகம், கடகம், மீனம் ஆகிய ராசிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஜாதகத்திலேயே குரு வக்கிரமாக இருந்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது தப்பித்து விடுவீர்கள். எதிர்பாராத நன்மை, எதிர்பாராத பணம், அதிர்ஷ்டம், வீடு போன்றவற்றை பெற்று வெளிவருவீர்கள்.

சிறை செல்லும் ராசிகள்

குரு வக்கிரமாக இல்லையெனில் மகரம், விருச்சிகம், கடகம், மீனம் ஆகிய ராசிகளுக்கு கண்டகத்துக்கு நிகரான, சிறைக்கு நிகரான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளியில் செல்ல முடியாத அளவுக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. என்றைக்கோ செய்த தவறுகள், யாரோ செய்த தவறுகளுக்காக, ஜாமீன் கையெழுத்துக்காக சிக்கிக் கொள்ளும் சூழல் ஏற்படும். கூடா நட்புகள் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

நண்பர்கள் கவனம்

வெளிநாட்டில் இருக்கும் நபர்கள் உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சிறை செல்லும் அளவுக்கு பாதிப்புகள் வரக்கூடும். மிதுனம், தனுசு, கும்பம், சிம்மம், துலாம் ராசியினருக்கு காதல் திருமணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். சிம்மம், தனுசு, மேஷம் ராசியினருக்கு பெரிய அளவில் ஏற்றம் ஏற்படும், பதவி உயர்வு கிடைக்கும்.

ஆரோக்கியம்

மகரம், கடகம், விருச்சிகம் ஆகிய 3 ராசியினர் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிகிச்சையில் இருப்பவர்களுக்கு கூட குழந்தை பாக்கியம் கிடைக்கும். கும்பம், துலாம், தனுசு, மிதுனம், கடகம், விருச்சிகம், மீனம் ராசியினருக்கு கட்டாயமாக குழந்தை பாக்கியம் உண்டாகும். கன்னி, ரிஷபம், மகர ராசியினருக்கு ஒரு நல்லது, ஒரு கெட்டது கட்டாயமாக நடக்கும். ரிஷபம், மகரம், கன்னி ராசியினருக்கு எதிர்பார்க்காத பண வரவு, திருப்தி உண்டாகும். ரிஷபம், கன்னி, மகரம், தனுசு ராசியினருக்கு அற்புதமான மதிப்பு, மரியாதை கிடைக்கும்.

புகழ்பெறும் ராசிகள்

சிம்மம், மேஷம், தனுசு, துலாம் ராசியினருக்கு மிகப்பெரிய விருது, அங்கீகாரம், பெயர், புகழ் கிடைக்கும். விட்டுப்போன வேலைகள் கன்னி, தனுசு, மகரம், ரிஷபம், துலாம், மீனம் ஆகிய ராசிகளுக்கு கட்டாயமாகக் கிடைக்கும். எந்த வேலையை விட்டீர்களோ அதே வேலை கிடைக்கும். மேஷம் ராசியினர் மேல் இருந்த தேவையில்லாத பெயர்கள் மாறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+