Guru Vakra Peyarchi: பொட்டி வந்துருச்சு - மகர ராசிக்கு நடக்க போகும் முக்கிய மாற்றம்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு பகவான் வக்கிரமாக இருக்கிறார். குரு வக்கிரம் என்பது எல்லாமே இருப்பது போல இருக்கும் ஆனால் இருக்காது. குரு ஒரு ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் அவர்களுடைய வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும். நிறைய அரசியல்வாதிகள், கலைஞர்கள் குரு வக்கிரமாகும் போது, சனி வக்கிரமாகும் போது உச்சத்தை தொடுவார்கள். நிறைய அரசியல் கட்சியினர் தொண்டர்களாக இருந்தவர்களுக்குப் பெரிய பதவி கிடைக்கும். முக்கிய புதிய முடிவுகளை எடுப்பீர்கள். முடிவுகள் மாற்றி எழுதப்படும்.

விதியை மாற்றி எழுதக்கூடிய சக்தி குரு வக்கிரப் பெயர்ச்சியாக இருக்கும்போது சிலருக்கு கிடைக்கும். சிலருக்கு திருமண யோகம், புதிய வேலை, புதிய முயற்சிகள் என நல்ல விஷயங்கள் அனைத்தும் குரு வக்கிரமாகும் போது நடக்கும். எந்த ஜாதகத்தில், குரு, சனி வக்கிரமாக இருக்கிறதோ அவர்கள் புரட்சி செய்து மேலே வருவார்கள். ஒரு இடத்தைக் காலி செய்துவிட்டு மேலே வருவார்கள். குரு என்பது பயங்கராமன புத்திக் கூர்மையைக் குறிக்கும். சாலையில் கிடப்பதை தங்கமாக மாற்றக்கூடிய யோகம் குரு வக்கிரமாக இருக்கக் கூடியவர்களுக்கு நடக்கும்.
இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகரம் ராசி அல்லது மகரம் லக்கினம் சார்ந்த நபர்களுக்கு இந்த காலத்தில் பெரியளவுக்கு ஏதாவது சாதனை படைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. கடந்த காலங்களில் தாமதம் ஏற்பட்ட காரியங்கள் இப்போது நடைபெறும். சுப காரிய தடைகள் விலகும். நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மருத்துவம் மூலம், இந்த காலத்தில் ஒரு நல்ல செய்தி கிடைக்கும். எதிரிகள் பலவீனமடைவார்கள்.
உத்யோகம்
வழக்குகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்யோகம், தொழிலில் வளர்ச்சி காணப்படும். பொருளாதாரம் உயர்வடையும். பழைய பாக்கி வசூலாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். சிலருக்கு தங்கள் தகுதி திறமைக்கு ஏற்ற அற்புதமான புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. தற்காலிக ஊழியராக இருப்போருக்கு, நிரந்தரமான பணி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உறவுகள்
பிரிந்த உறவுகள் ஒன்றிணைவார்கள். கணவன் - மனைவி இடையே அந்யோநியம் அதிகரிக்கும். விவாகரத்து வரை சென்ற தம்பதி கூட சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் விவாகரத்து எதிர்பார்த்து காத்திருக்கும் சிலருக்கு விவாகரத்து கிடைக்கும். தொழிலில் நீண்ட காலமாக திட்டமிட்ட விஷயங்களை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். கடன் சுமை வெகுவாக குறையும்.
கவனம்
கோபத்தை குறைத்து கொண்டு எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது முக்கியம். உணவுப் பழக்க வழக்கத்தில் மட்டும் கவனம் வேண்டும். வயிறு, ஜீரணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் எச்சரிக்கை அவசியம். தினசரி உணவு சாப்பிடும் முன்பு, சிறிதளவு எடுத்து அதில் நெய் கலந்து கடவுளுக்கு படைப்பதன் மூலம் சிறப்பான பலன்கள் ஏற்படும். உங்கள் வீட்டின் அருகே உள்ள முருகன் கோயில் சென்று வழிபடுவது வாழ்வில் மாற்றங்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications