Guru Vakra Peyarchi: மிதுன ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு பகவான் வக்கிரமாக இருக்கிறார். குரு வக்கிரம் என்பது எல்லாமே இருப்பது போல இருக்கும் ஆனால் இருக்காது. குரு ஒரு ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் அவர்களுடைய வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும். நிறைய அரசியல்வாதிகள், கலைஞர்கள் குரு வக்கிரமாகும் போது, சனி வக்கிரமாகும் போது உச்சத்தை தொடுவார்கள். நிறைய அரசியல் கட்சியினர் தொண்டர்களாக இருந்தவர்களுக்குப் பெரிய பதவி கிடைக்கும். முக்கிய புதிய முடிவுகளை எடுப்பீர்கள். முடிவுகள் மாற்றி எழுதப்படும்.

விதியை மாற்றி எழுதக்கூடிய சக்தி குரு வக்கிரப் பெயர்ச்சியாக இருக்கும்போது சிலருக்கு கிடைக்கும். சிலருக்கு திருமண யோகம், புதிய வேலை, புதிய முயற்சிகள் என நல்ல விஷயங்கள் அனைத்தும் குரு வக்கிரமாகும் போது நடக்கும். எந்த ஜாதகத்தில், குரு, சனி வக்கிரமாக இருக்கிறதோ அவர்கள் புரட்சி செய்து மேலே வருவார்கள். ஒரு இடத்தைக் காலி செய்துவிட்டு மேலே வருவார்கள். குரு என்பது பயங்கராமன புத்திக் கூர்மையைக் குறிக்கும். சாலையில் கிடப்பதை தங்கமாக மாற்றக்கூடிய யோகம் குரு வக்கிரமாக இருக்கக் கூடியவர்களுக்கு நடக்கும்.
இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு எந்த பெயர் கெட்டதோ அந்த பெயர் நல்லதாக மாறும். உங்களை விட்டுப் பிரிந்த நண்பர்கள் மீண்டும் சேர்வார்கள். கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனைகள், இதயம், கால் மூட்டு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பிரிந்து சென்ற அப்பா, மகன்கள் மீண்டு வருவார்கள். பழைய கணக்கை கச்சிதமாக முடிக்கும் காலகட்டமாக இருக்கும்.
திருமண யோகம்
அற்புதமான மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். கணவனாக இருந்தால் மனைவி கண்டிப்பாக கிடைப்பார்கள். மீண்டும் ஒன்று சேர்வீர்கள். நீண்டநாட்களாக திருமணம் ஆகாத நபர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். இரண்டாம் குழந்தை பிறப்பதற்கான யோகம் ஏற்படும். எதிர்பார்க்காத யோகம் கிடைக்கும். எதிர்பாராத பதவிகள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.
தொழிலில் ஜாக்பாட்
தொழில் 10 மடங்கு உயரக்கூடிய பாக்கியம் உண்டாகும். புது முயற்சிகள் வெற்றி அடையும். புதிய தொழில், வியாபாரம் வெற்றி அடையும். நம்பிக்கை பெரிய அளவுக்கு ஏற்படும். ஒரு விஷயத்தை எடுத்து செய்தால் கண்டிப்பாக நடக்கும் என்பது போன்ற சூழல் ஏற்படும். உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். உங்களை முன்னிறுத்தி பல விஷயங்களை சாதிக்கும் நிலை ஏற்படும்.
பேச்சுக்கு மதிப்பு
குரு வக்கிரமாகும் போது எந்த விஷயங்களில் கம்யூனிகேஷனால் பிரச்சனை வருகிறதோ அந்த நிலைமை மாறும். நீங்கள் தப்பாகவே பேசினாலும், சரியாக எடுத்துக் கொள்ளும் சூழல் ஏற்படும். நிலைமைகள், உங்களுக்கு மதிப்புகள் மாறும். மிதுனம், துலாம், கும்ப ராசிகளுக்கு அதிகளவிலான ஆட்கள் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். நட்பினால் நல்ல சந்தோஷங்கள் ஏற்படும்.
குடும்பம்
மிதுன ராசியினர் இருக்கும் வீடுகளில் கட்டாயமாக குடும்பம் ஒன்று சேரும். உறவுகள் மேம்படும். குரு வக்கிரமாக இருக்கும்போது யாருக்கு எப்படி பதில் சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லி காரியத்தை ஜெயிக்கக் கூடிய நேரம் உண்டாகும். நிறைய பேருக்கு கழுத்து, எழும்பு, அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை செய்து மகிழ்வீர்கள்.
வழிபாடு
இனி நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். ஜாதகத்திலேயே குரு வக்கிரமாக இல்லை எனும்போது கொஞ்சம் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். யானைக்கு உணவளிப்பது நன்மையைத் தரும். கஜலட்சுமி படத்தை வைத்து வழிபடுவது 4 மாதங்களில் வரும் கண்டங்கள் அனைத்தில் இருந்தும் பாதுகாக்கும். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 75 சதவீதம் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications