இந்தியா vs பாரத்.. நாட்டின் வளர்ச்சி எப்படி.. வல்லரசாகுமா பாரதம்.. எண் கணித நிபுணர் கணிப்பு
சென்னை: 'INDIA' என்ற நம்முடய நாட்டின் பெயர் 'BHARAT' என்று மாற்றிய பிறகு நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்? நாட்டு மக்களிடையே ஒற்றுமை, சகிப்புத்தன்மை எப்படி இருக்கும்? பாரதம் வல்லரசு நாடாக மாற்றம் அடையுமா என்று கணித்து கூறியுள்ளார் எண் கணித நிபுணர் டாக்டர் ஜெ.என்,எஸ் செல்வன்.
நம்முடைய தேசத்தை பாரத கண்டம், பாரத தேசம் என்றுதான் பண்டைய காலத்தில் இருந்தே புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. நாட்டின் சுபிட்சமும், செல்வ வளமும், செல்வாக்கும் பண்டைய காலத்தில் இருந்தே உலகப்புகழ் பெற்று விளங்கியுள்ளது. ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு நாட்டின் பெயர் இந்தியா என்று அழைக்கப்பட்டது. தற்போது மீண்டும் பாரத் என்று நாட்டின் பெயர் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊர் பெயர் மாற்றம், நாடுகளின் பெயர் மாற்றம், மாநிலங்களின் பெயர் மாற்றம் உலகம் முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் ஒரு நாடானது மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. அதே போல ஒரு நாடானது பெயரை மாற்றியதால் படு வீழ்ச்சியை சந்தித்தது. போர்களும், பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டது.
சிலோன் என்று இருந்த நாட்டின் பெயரானது ஸ்ரீலங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த நாட்டின் உள்நாட்டு போர், பொருளாதார வீழ்ச்சி என பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. பெயர் மாற்றத்தினால் ஏற்றமும் உண்டு இறக்கமும் உண்டு.
சிலோன் என்று இருந்த போது எண் கூட்டுத்தொகை 6 அதே நேரத்தில் ஸ்ரீலங்கா என்று பெயர் மாற்றப்பட்ட பிறகு அதன் கூட்டுத்தொகை 18 அதாவது 9 ஆக வருகிறது. பெரும் பின்னடைவை சந்தித்தது. பர்மா என்ற நாடு மியான்மர் என்று பெயர் மாற்றப்பட்டது. பர்மா என்று இருந்த போது பெயர் எண் கூட்டுத்தொகை 15 அதாவது 6 வந்தது. மியான்மர் என்று மாற்றப்பட்ட பிறகு கூட்டுத்தொகை 18 அதாவது 9 வருகிறது.

சுக்கிரன் ஆதிக்கம் பெற்ற எண் 6 செல்வ செழிப்பு மிக்க எண். அதே 9 செவ்வாய் ஆதிக்கம் பெற்ற எண் போர் வீரன் ஆதிக்கம் கொண்ட எண் 9 ஸ்ரீலங்காவும், மியான்மரும் 9 ஆம் எண் ஆதிக்கத்திற்கு மாறிய பிறகு அந்த நாட்டில் நடைபெறும் குழப்பங்களை உலகமே அறியும்.
இப்போது INDIA என்று இருக்கிறது அதன் கூட்டுத்தொகை 3 இது குருவின் ஆதிக்கம் பெற்ற எண். தேவ குருவின் ஆதிக்கத்தினால் நம்முடைய இந்தியா ஆன்மீகம் , கல்வி அறிவில் சிறந்த நாடு என்ற பெயர் பெற்றுள்ளது. வெளிநாடுகளில் இருந்து பலரும் ஆன்மீக சுற்றுலாவிற்காகவே இந்தியாவிற்கு வருகின்றனர். இங்குள்ள கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் பலருக்கும் நல்ல வேலை வாய்ப்பும் கிடைத்து வருகிறது.
மருத்துவத்துறையில் தலை சிறந்த நாடு என்று பெயர் பெற்றுள்ளது. பல நாடுகளில் இருந்து சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வருகின்றன. மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. கொரோனாவை இந்தியா கையாண்ட விதம் எப்படி என்று உலகமே அறியும். இப்போது பாரத் (BHARAT) என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு நாட்டின் பெயர் எண்ணும் சொல் ஒலியும் சிறப்பாக இருந்தால் அந்த நாடானது மிகப்பெரிய வளர்ச்சியை அடையும். நம்முடைய நாட்டின் பெயர் இந்தியா (INDIA) என்பதன் முதல் இரண்டு எழுத்து 'IN' என்பது அனைவரையும் ஈர்க்கக்கூடியது. உலகத்தில் உள்ள பல நாட்டு தொழிற்சாலைகளில் இருந்து இந்தியாவிற்கு முதலீடுகள் வந்தன. தொழில் துறை வளர்ச்சியடைந்தது. வேலை வாய்ப்பு பெருகிறது.

இப்போது பாரத் 'BHARAT' என்று பெயர் மாற்றப்பட்டதால் அதன் பெயர் எண் கூட்டுத்தொகை 6 வருகிறது. இது சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட எண் அசுர குரு சுக்கிரன் என்றாலும் செல்வ வளத்திற்கு அதிபதி. ஒருவர் செல்வ செழிப்போடு இருந்தாலே அவருக்கென்னப்பா சுக்கிரதிசை அடித்து விட்டதோ என்று சொல்வார்கள். அது போல சுக்கிரன் சுகத்தையும் சந்தோஷத்தையும் செல்வ வளத்தையும் தரக்கூடியவர்.
'INDIA' என்ற நாட்டின் பெயர் 'BHARAT' என்று மாற்றப்பட்ட பிறகு நாட்டின் வளர்ச்சி மண்ணில் இருந்து விண்ணிற்கு போனது போலத்தான். BHARAT என்ற எழுத்துக்களில் HAR என்ற எழுத்துக்கள் இணைந்து சிவ பெருமானை குறிக்கும் 'ஹர' என்று வருகிறது. நாட்டின் பெயர் பாரத் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் மிகப்பெரிய செல்வாக்கு அதிகரிக்கும். நாட்டின் பொருளாதாரம் அசுர வளர்ச்சி அடையும். மக்களின் சகிப்புத்தன்மை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் இணக்கமான சூழ்நிலை கூடும். நாத்திகம் பேசியவர்கள் கூட ஆத்திகவாதிகளாக மாற வாய்ப்பு உள்ளது.
மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கப்படும். மழை வளம் சிறக்கும். மக்களின் செல்வாக்கு கூடும். ஆளும் அரசு மிகப்பெரிய சட்டங்களை போடலாம். மக்களின் எதிர்ப்பும் வரும். பாரம்பரிய கலாச்சாரங்கள் மறைந்து புதுமை வரும். நாட்டின் கலைத்துறை மிகப்பெரிய வளர்ச்சியடையும் உலகப் புகழடையும்.
குடும்பத்திலும் தொழில் துறையிலும் பெண்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். ஆண்கள் பலரும் அடங்கிப்போவார்கள். பழமைவாதம் ஒழிந்து போகும். கலியுகம் என்று சொல்வது போல களியாட்டங்கள் அதிகரிக்கும். பாரத் என்று மாற்றப்பட்ட பிறகு கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சிகள் அதிகரிக்கும். சாதி, மதம் ஒழியும். அப்படி ஒன்று இருந்ததா என்று கேட்கும் அளவிற்கு நாட்டில் மக்கள் சமத்துமடைவார்கள்.
சைனா, கனடா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளின் எண்களின் கூட்டுத்தொகை 6 வருகிறது. இந்த நாடுகளை விட நமது பாரதம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். நாடு சுதந்திரம் அடைந்தது ஆகஸ்ட் 15. இந்த எண்ணிற்கு ஏற்ப நாட்டின் பெயரான பாரத் என்று மாற்றப்பட்டு அதன் கூட்டுத்தொகை 6 வருகிறது. இதன் மூலம் ஒரு பிரம்மாண்ட வளர்ச்சியை நாடு அடையும் என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் இந்த பாரத் என்ற பெயர் மாற்றம் நாட்டினை மிகப்பெரிய வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் என்று கூறியுள்ளார் எண் கணித நிபுணர் ஜே
-
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி!












Click it and Unblock the Notifications