January matha palan: துலாம் ராசிக்கு ஜனவரி மாதத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. வீடு வாங்கும் யோகம்
January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின் அடிப்படையில் துலாம் ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் எப்படி இருக்கும். என்ன பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு யோகமான மாதமாக இந்த மாதம் இருக்கும். ராசிக்கு அதிபதியான சுக்கிர பகவானின் அனுக்கிரகம் பரிபூரணமாக இருக்கும். செல்வ செழிப்பு அதிகமாக இருக்கும். ராசிக்கு அதிபதியான சுக்கிரன் 3 ஆம் இடத்தில் அமருகிறார். தனக்காரகன் குரு பார்ப்பதால் இந்த மாதம் முழுவதும் நல்ல பண வரவு உண்டாகும். தொழிலில் லாபம் கிடைக்கும்.
பேச்சில் இனிமை ஏற்படும். கம்யூனிகேஷனில் கம்பீரம் அற்புதமாக இருக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் அக்கறை செலுத்த வேண்டும். சுக்கிரன் 3 ஆம் இடத்தில் இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வீடு வாங்குவதற்கு கையெழுத்துப் போடுவீர்கள். கம்யூனிகேஷன் செக்டாரில் இருப்பவர்கலுக்கு நல்ல வேலைவாய்ப்பு உண்டாகும். திருமணம் நடைபெறும்.
திருமண யோகம்
காமத் திரிகோண ஸ்தானங்கள் தொடர்பு ஏற்படும். திருமண யோகம் உண்டாகும். வரன்கள் கைகூடி வரும். திருமணப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். பணப்புழக்கம் நன்றாக இருக்கம். மன தைரியம் ஏற்படும். எல்லா வகையிலும் வெற்றி ஏற்படும். தைரியத்தைக் கொடுக்கும். பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். 8 ஆம் இடத்தில் சந்திரன் இருப்பதால் பயணங்களின்போது கவனமாக இருப்பது நல்லது.
வீட்டுக் கடன் கிடைக்கும்
தாயாருடைய உடல்நலனில் சில பாதிப்புகள் இருக்கம். வீட்டில் சில ரிப்பேர் வேலைகள், செலவுகள் ஏற்படும். வீட்டின் வடகிழக்கு மூளையை சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது. வீட்டுக் கடன்கள் வாங்கும் அமைப்பு உள்ளது. கிரெடிட் கார்டுகளால் தொந்தரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இஎம்ஐ-யை தவறவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெளிநாட்டு வேலை
பிள்ளைகளால் மனக் குழப்பங்கள் ஏற்படும். 6 இல் சனி இருப்பது நல்ல விசேஷமாகும், அக்கம்பக்கத்து வீட்டாருடன் சிறிய கருத்து மாறுபாடு, இழப்பு, தொந்தரவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. 7 ஆம் இடத்திற்குரிய செவ்வாய் 3 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பது விசேஷம். வெளிநாட்டு வேலை வாய்ப்பு, திருமண யோகம் ஏற்படும்.
பெயர், புகழ் கிடைக்கும்
பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர், புகழ் பெருகும். அஷ்டமாதிபதி சுக்கிரன் 3 இல் அமர்ந்திருக்கிறார். பயணங்களின்போது கவனம் தேவை. உங்கள் பேச்சை வைத்து அவமானப்படுத்தும் அமைப்பு உள்ளது. கை, கால்களில், ஜாயின்ட் பகுதிகளில் அடிபடுவதற்கான அமைப்பு உள்ளது. வளையல் போன்ற பொருள்கள் காணாமல் போகும் அமைப்புள்ளதால் கவனம் தேவை.
விமர்சிக்காதீர்
9 ஆம் இடத்தில் குரு பகவான் இருப்பதால் அற்புதமான யோகம் ஏற்படும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். அம்மாவுடைய உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களை விமர்சித்துப் பேசுவதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். 10 ஆம் இடத்திற்கு அதிபதியான சந்திர பகவான் 8 இல் அமர்ந்திருப்பதால் சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும்.
வழிபாடு
11 ஆம் இடத்தில் கேது இருப்பதால் தாய் வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும். கோர்ட், கேஸ், வம்பு, வழக்குகளில் வெற்றி ஏற்படும். கம்யூனிகேஷனில் வெற்றி உண்டாகும். 12 ஆம் இடத்துக்கு அதிபதியான புதன் 3 ஆம் இடத்தில் இருப்பதால் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். நினைத்த காரியங்கள் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். இளைய சகோதரர்களுடன் நல்ல உறவு ஏற்படும். குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். கோவை கோவில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வரர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை தரும்.












Click it and Unblock the Notifications